பிரம்ம சமாஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரம்மசமாஜத்தை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்மசமாஜம் கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்கு திருப்படையல் செய்ய வேண்டும். ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_சமாஜம்&oldid=960495" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்