பிரமோத் விசுவநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமோத் விசுவநாத் (Pramod Viswanath) அமெரிக்காவின் அர்பானா-சாம்பெய்ன் நகரத்தில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினிப் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கம்பியிலா தகவல்தொடர்புகள் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கான பங்களிப்புகளுக்காக இவருக்கு 2013 ஆம் ஆண்டு மின் மற்றும் மின்னணுப் பொறியியலாளர்கள் அமைப்பில் உறுப்பினர் என்ற தகுதி வழங்கப்பட்டது.[1] கம்பியில்லா தகவல்தொடர்பு வலைப்பின்னல் தொடர்பான அடிப்படை வரம்புகளைப் புரிந்துகொள்வதும், கம்பியில்லா வலைப்பின்னலுக்கான பொறியியல் தீர்வுகளில் புரிதலை மேம்படுத்துவதும் இவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்களாகும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் விசுவநாத் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2000 ஆமவது ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்க்லி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். [2]

அர்பானா-சாம்பெய்ன் நகர இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததிலிருந்து, இவர் பல்வேறு நிலைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பல காப்புரிமைகள் மற்றும் ஆராய்ச்சி சாதனைகள் இவரிடம் உள்ளன. மேலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் விசுவநாத் எழுதியுள்ளார். [3] [4] [5] பெர்னார்டு பிரைடுமேன் பரிசு, மோட்டராலோ தங்கப் பதக்கம் போன்ற பரிசுகளையும் இவர் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Elise King (January 22, 2013). "Liberzon and Viswanath named 2013 IEEE Fellows". University of Illinois at Urbana–Champaign. https://ece.illinois.edu/newsroom/article/2095. பார்த்த நாள்: January 3, 2020. 
  2. "Pramod Viswanath". University of Illinois at Urbana–Champaign. பார்க்கப்பட்ட நாள் January 3, 2020.
  3. "Pramod Viswanath".
  4. https://ieeexplore.ieee.org/author/37271448800
  5. "DBLP: Pramod Viswanath".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோத்_விசுவநாத்&oldid=3307252" இலிருந்து மீள்விக்கப்பட்டது