பிரனாய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரனாய் குமார்
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்பிரனாய் அசீனா சுனில் குமார்
நாடு இந்தியா
பிறப்புசூலை 17, 1992 (1992-07-17) (அகவை 31)
தில்லி, இந்தியா
வசிக்கும் இடம்திருவனந்தபுரம் (கேரளம்)
உயரம்5’ 10”
கரம்வலது
பயிற்சியாளர்இந்தியா புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்8 (3மே 2018)
தற்போதைய தரவரிசை23 (5 ஏப்ரல் 2022)
இ. உ. கூ. சுயவிவரம்

பிரனாய் அசீனா சுனில் குமார் (Prannoy Haseena Sunil Kumar, 17 சூலை 1992) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்காரர் ஆவார்.[1] 2010இல் சிங்கப்பூரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சிறுவர் ஒற்றையர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[2] 2011இல் இந்தியா சூப்பர் தொடரிலும் 2012இல் ஆசிய இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

செப்டம்பர் 14, 2014 அன்று இந்தோனேசியாவின் மாஸ்டர்சு கிரான் பிரீ கோல்டு போட்டியில் பங்கேற்று தனது வாழ்நாளில் முதன்முறையாக முதலிடத்தை வென்றுள்ளார்; இப்போட்டியின் இறுதியாட்டத்தில் உள்ளூர் விருப்பமான வீரர் பிர்மன் அப்துல் கோலிக்கை 21-11,22-20 என்ற கணக்கில் தோற்கடித்து அமெரிக்க டாலர் 1,25,000 வென்றுள்ளார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Player Profile". BAI. Archived from the original on 29 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
  2. Savaliya, Gautam. "Prannoy Haseena Sunil Kumar Singapore Youth olympics 2010". Archived from the original on 24 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: முதல்முறையாக பிரணாய் சாம்பியன்". தினமணி. 14 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரனாய்_குமார்&oldid=3653996" இலிருந்து மீள்விக்கப்பட்டது