பியூராம் வாகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பியூராம் வாகே (Biyuram Wahge) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக ம், மாநில பாரதிய சனதா கட்சிப் பிரிவின் தலைவராகவும் செயல்படுகிறார். அருணாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பக்கே-கேசாங் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள செபா கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தாலி வாகே என்பவருக்கு இவர் மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை செப்பா மற்றும் போம்டிலா ஆகிய இரு வேறு நகரங்களில் முடித்தார். இறுதியில் பக்கே-கேசாங் மாவட்டத்தில் குடியேறினார். இவரது மூத்த சகோதரர் கதுங்கு வாகே, அருணாச்சல பிரதேச அரசின் பொதுப்பணித் துறையின் மேற்கு மண்டலத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூராம்_வாகே&oldid=3945198" இலிருந்து மீள்விக்கப்பட்டது