பாலம் எண் 541

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலம் எண் 541 (Bridge No. 541) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கானோ தொடருந்து நிலையத்திலிருந்து 50 மீ தொலைவில் அமைந்துள்ள பாலமாகும்.[1] [2] கானோ என்று பெயரிடப்பட்ட இந்த சிறிய கிராமத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றன. இன்னும் இப்பகுதியில் சாலை இணைப்பு இல்லாததால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கானோ தொடருந்து நிலையத்தை முழுமையாக நம்பியுள்ளனர்.[1] 1898ஆம் ஆண்டு இந்திய இரயில்வேயால் உருவாக்கப்பட்ட மிக உயரமான வளைவுப் பாலம் இதுவாகும்.[2][1] இந்த பாலம் கட்டுவதற்குச் செங்கல் மற்றும் கல் பயன்படுத்தப்பட்டது.[3] இந்தப் பாலம் 52.90 மீட்டர் நீளமும் 23 மீ உயரமும் கொண்டது. இப்பாலத்தில் 34 வளைவுகளைக் கொண்டுள்ளது.[2][1][3] இது கல்கா-சிம்லா வழித்தடத்தில் நான்கு அடுக்கு வளைவு மாடங்களுடன் கூடிய மிக உயரமான பாலம் ஆகும். இது 48 பாகை தலைகீழ் வளைவுடன் உள்ளது.[2][3] பாலம் எண். 541, தாராதேவி, பரோக் சுரங்கப்பாதை மற்றும் கந்தகாட் நிலையம் உள்ளிட்ட இடங்களையும் யுனெஸ்கோ குழு பார்வையிட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Kumar, Harish. "Bridge 541: The Hidden Gem Of Shimla You MUST Visit On Your Next Trip". Tripoto (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  2. 2.0 2.1 2.2 2.3 "Bridge No. 541" (PDF). nr.indianrailways.gov.in. Archived from the original (PDF) on 2016-04-24.
  3. 3.0 3.1 3.2 "Tunnels & Bridges - the Kalka Shimla Railway - Darjeeling Himalayan Railway Society". Google Arts & Culture (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  4. Service, Tribune News. "UNESCO team visits Kalka-Shimla rail section". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலம்_எண்_541&oldid=3533615" இலிருந்து மீள்விக்கப்பட்டது