பார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்ஸ்
உருவாக்குனர்பேஸ்புக்
தொடக்க வெளியீடுசூன் 1, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-06-01)
இயக்கு முறைமை
இணையத்தளம்parse.com

பார்ஸ் எனப்படுவது நகர்பேசிகளுக்கான செயலிகளை எழுதும்போது பயனர் தரவுகள் மற்றும் ஏனைய தகவல்களைச் சேமித்து வைக்க உதவும் ஒரு வகை வழங்கித் தொழிநுட்பத்தை வழங்கும் ஒரு இணைய சேவையாகும். இந்தச்சேவை ஒரு மேகக் கணிமை சார்ந்தே இயங்குகின்றது. பார்ஸ் அப்பிள் ஐஓஎஸ், மக் ஓஎஸ், ஆண்ட்ராய்டு, வின்டோஸ் 8, வின்டோஸ் நகர்பேசி 8 ஆகிய இயங்கு தளங்களை ஆதரிக்கின்றது. இந்த இயங்குதளங்களிற்கு எழுதப்படும் செயிலிகளுக்கான தரவுச் சேமிப்பகமாக பார்ஸ் செயற்படக்கூடியது. பேஸ்புக் நிறுவனம் பாஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம், பார்ஸ் நிறுவனமானது தற்பொழுது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாகியுள்ளது[1][2].

சிறப்பியல்புகள்[தொகு]

  • வினைத்திறனான தரவுத்தளம்
  • செயலிக்கும் தரவுத்தளத்திற்கும் இடையிலான வியாபார தர்க்க விதிகளை நிர்ணயிக்ககூடியமை
  • சமூக வலைத்தளங்களுக்கான இணைப்பு
  • Push முறையிலான செயதிகளை அனுப்பக்கூடிய செயற்றிறன்

பார்ஸ் சேவையானது நகர்பேசி செயலிகளை வடிவமைப்போர், தரவதுத்தளம் மற்றும் வழங்கி உட்கட்டுமானங்களை சரியாக அமைத்துக்கொள்வதில் நேரம் விரையம் செய்யாமல் செயலிகளை எழுதுவதில் கவனம்செலுத்த உதவுவதாகக்கூறுகின்றது[3]. பார்ஸ் வழங்கும் தரவுத்தளத்தில் படிமங்கள் முதல் சாதாரண எழுத்துக்கள் வரை சேமித்துக்கொள்ளலாம்[4].

சமூக வலைத்தங்களின் நுழைவு அடையாளத்துடன் பயனர்கள் செயலிகளில் புகுபதிகை செய்யக்கூடிய செயற்பாட்டை பார்ஸ் இலகுவாக்கியுள்ளது. அத்துடன் உள்ளமைந்த பயனர் கணக்கு உருவாக்கம், கடவுச் சொல் மாற்றம் போன்ற செயற்பாடுகளை இயல்பிருப்பாகவே பார்ஸ் வழங்கிகள் கொண்டுள்ளன. இவை செயலிகள் எழுதும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறப்படுகின்றது[5].

கட்டண விபரம்[தொகு]

பார்ஸ் சேவை ஆரம்பநிலை செயலிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும், வழங்கப்பட்ட இலவச பங்கு முடிவடைந்ததும் பணம் செலுத்தி அடுத்த பொதிக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படாலாம். தற்போது மூன்று வகையான பொதிகளை பார்ஸ் வழங்குகின்றது[6].

இலவசம்[தொகு]

இந்தப் பொதிக்கான ஆரம்பக்கட்டனம் இலவசமாகும். அத்துடன் செயலிகளில் இருந்து மாதம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் கோரிக்கைகளை பார்ஸ் வழங்கிகளுக்கு அனுப்பமுடியும். மேலும் ஒரு மில்லியன் Push செய்திகளையும் வழங்கியில் இருந்து செயலிகளுக்கு அனுப்ப முடியும். 20 செக்கனுக்குள் செயலியில் இருந்து வழங்கிக்கு வந்த கோரிக்கை நிறைவேறாது விட்டால் தானியங்கிமுறையில் கோரிக்கை மறுக்கப்படும்.

ப்ரோ[தொகு]

இது கட்டனம் செலுத்தப்படவேண்டிய பொதியாகும். இதற்கு மாதம் 199 அமெரிக்க டாலர்கள் அறவிடப்படுகின்றன.அத்துடன் செயலிகளில் இருந்து மாதம் ஒன்றிற்கு 15 மில்லியன் கோரிக்கைகளை பார்ஸ் வழங்கிகளுக்கு அனுப்பமுடியும். மேலும் ஐந்து மில்லியன் Push செய்திகளையும் வழங்கியில் இருந்து செயலிகளுக்கு அனுப்ப முடியும். 40 செக்கனுக்குள் செயலியில் இருந்து வழங்கிக்கு வந்த கோரிக்கை நிறைவேறாது விட்டால் தானியங்கிமுறையில் கோரிக்கை மறுக்கப்படும். இலவச பொதிக்கு மேலதிகமாக பல மென்பொருள் வல்லுனர்களை செயற்றிட்டத்தில் இணைத்தல், கூடிய பாதுகாப்பு போன்ற சேவைகளை இந்தப்பொதி பெற்றுக்கொள்கின்றது.

என்டபிரைஸ்[தொகு]

இது பெருமெடுப்பில் வழங்கியைப் பாவிக்கும் செயலிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொதியாகும். இந்தப்பொதிக்கான கட்டனம் பொதுவில் அறிவிக்கப்படாதுவிட்டாலும், பயனரது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் பயனரிடம் இருந்து அறவிடப்படம். இலவசம் மற்றும் ப்ரோ வில் இல்லாத மேலும் பல சேவைகளை இந்த பொதியை வைத்திருப்பவர்கள் பெற்றுக்கொள்வர்.

உசாத்துணை[தொகு]

  1. Welcoming Parse to Facebook
  2. Facebook Buys Parse To Offer Mobile Development Tools As Its First Paid B2B Service
  3. பார்ஸ்பற்றிய அறிமுகம்
  4. பார்ஸ் தரவுத்தளம்
  5. சமூகவலைத்தளங்களுடன் பார்ஸ்
  6. பார்ஸ் கட்டன விபரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ஸ்&oldid=3397777" இலிருந்து மீள்விக்கப்பட்டது