பவுல் மோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவுல் மோனி (Paul L Money) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு வனியல் கழக ஆய்வுறுப்பினரும், பிரித்தானிய கோளிடைப் பறத்தல் கழக ஆய்வுறுப்பினரும் அவர். இவர் இங்கிலாந்து இலின்கோல்ன்சயரில் உள்ள கார்கேசிலில் வாழ்கிறார்.[1][2] இவர் தன் விரிவன வானியல் உரைகளுக்குப் பெயர்போனவர். இவர் பிபிசி இரவில் வானம் எனும் இதழின் மீள்பார்வைப் பதிப்பசிரியர் ஆவார். இவர் இலின்கோல்ன்சயர் பிபிசி வானொலியிலும்இலின்கோல்ன் ந்கர வானொலியிலும் அடிக்கடி உரையாற்றி வருகிறார்.

வானியல் கழகங்களின் கூட்டமைப்பு இவரது வானியல் பங்களிப்புக்காக 2002/2003 இல்'எரிக் சூக்கர்' விருதை வழங்கியது.

பிரித்தானிய ஏவூர்தி வாய்மொழி வரலாற்றுத் திட்டம் இவரது வானியல், விண்வெளியியல் பரப்புரைக்காக 2012 அக்தோபரில் 2012 ஆம் ஆண்டுக்கான சர் ஆர்த்தர் கிளார்க்கே வாழ்நாள் அடைவு விருதை வழங்கியது.

இவர் 2004 முதல் 2013 வரையில் ஒமேகா விடுமுறை வடக்கொளி பரத்தலி மூவரில் ஒரு வானியலாளராக கலந்து கொண்டார். மேலும் இவர் 2006 இல் துருக்கி சூரிய ஒளிமறைப்புப் பயணத்திலும் 2009 இல் சீன ஒளிமறைப்புப் பயணத்திலும் சூரிய ஒளிமறைப்பு வானியலாளராகப் பங்கேற்றார்.

இவர் 2008 இல் சூரிய ஒளிமறைப்பு வானியலாளராகவும் பிரான்சு ஜோசப்பு இலாண்டுத் தீவில் 2008 ஆகத்து 2 நாள் ஒளிமறைப்பைக் காணச் சென்ற போசைடான் ஆர்க்டிக் பயணத் தேட்டக் குழுவில் யாமல் எனும் உருசிய அணுக்கருத் திறன் பனிக்கட்டி ஊடுறுவும் கலத்தில் பங்கேற்றார்.

இவர் 2000 இலிருந்து இரவுக் காட்சிகள் எனும் இஅரவு வான வழிகாட்டிகளை ஒவ்வோராண்டும் வெளியிட்டு வருகிறார். மேலும், அண்மைக் காலமாக பேய்த் தொடய் புதினங்களையும் அறிபுனை புதினங்களையும் எழுதிவருகிறார்.

வெளியீடுகள்[தொகு]

  • இவர் பிபிசி இரவில் வானம் எனும் இதழின் மீள்பார்வைப் பதிப்பசிரியர் ஆவார்.
  • இவர் பயில்நிலை வானியலாளருக்காக "இரவுக் காட்சிகள்" எனும் 40 பக்க வான்வழிகட்டியை ஆண்டுதோறும் வெளியிடுகிறார்.
  • இவர் 'இரவுக் காட்சிகள்: எளிய வான் ஒளிப்படவியலுக்கான வழிகாட்டி' 'இரவுக் காட்சிகள் துணைவன்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் இப்போது புதின எழுத்தாளராகி, 'ஜேம்சு கான்சோன் பேய் மருமங்கள்' எனும் தொடரில் 3 நூல்களையும் 'நிலவுகையின் மென்மைநிலை' எனும் ஓர் அறிபுனை புதினத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் பல புதினங்கள் எழுத்தில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paul Money". BBC Sky at Night Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
  2. "Astrospace Home page". www.astrospace.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_மோனி&oldid=3953124" இலிருந்து மீள்விக்கப்பட்டது