பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி என்னும் நூல் [1] பழனி முருகனைப் போற்றிப் பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர் சுப்பிரமணிய ஐயர். இந்த நூலுக்குச் பலரது சாத்துகவிகள் உள்ளன. [2]

பாடல் - எடுத்துக்காட்டு[தொகு]

1

உரைக்கரிய திருப்புகழை உரைத்து உரைத்து உன் திரு உளத்தைக்
கரைக்கவும் என்பொருட்டு அஃது கரையாத பரிசு என்னோ
பரைக்கு ஒரு மைந்தா பழநிப் பண்ணவனே நீ இறை கொள்
வரைக் குலத்துள் ஒரு வரையோ நின் மனதும் வகுத்தருளே [3] [4]

2

உள்ளபடி சொல்வது இது உன் திருவடிக்கு
எள் அளவும் அன்பு செயல் என்றும் இலன் என்னை
அள்ளல் நரகத்திடை அமிழ்த்தல் ஒழி பின்னர்
விள்ளரும் எழில் பழநி வேந்த புகல் நீயே [5]

3

ஆளாகி, நின்ன சிறு தொண்டு இயற்றி அறியாத பொய்யன் எனினும்
மீளாத காதலொடு நின்னை நாளும் வினையேன் வழுத்தவிலேயோ
வாளா இருத்தல் அழகோ அருட்கு மயில் ஏறி ஆள வருவாய்
கேளாது நல்கும் பழநிக்கண் ஏய்ந்த கிரியில் கலந்த துரையே [6]

இதனையும் காண்க[தொகு]

திரு உறந்தைப் பதிற்றுப்பத்து அந்தாதி

மேற்கோள்[தொகு]

  1. பழநிப் பதிற்றுப்பத்து அந்தாதி - இயற்றியவர் முசிரியில் இருக்கும் வித்துவான் பிரம்மஸ்ரீ தே குரு சுப்பிரமணிய ஐயர் - முசிரியில் இருக்கும் திருத்தாந்தோணி அப்பாவுப்பிள்ளை மகன் வழக்கறிஞர் கல்யாணசுந்தரம்பிள்ளை வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது. - இவரால் பதிப்பிக்கப்பட்டது. - சென்னை : பண்டித மித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. - பதிப்பு : சுபகிருது ஆண்டு ஆவணி மாதம்
    1. சென்னை அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார்
    2. குரு சுப்பிரமணிய பாரதி இந்த நூலை இயற்றினான்
    3. இந்த அந்தாதி அணி எழிலினைக் காட்டுகிறது
    4. சேலம் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் சரவணப்பிள்ளை
    5. இது அந்தாதி மாலை பாடியவன் சுப்பிரமணிய பாரதி
    6. காங்கயம் அஷ்டாவதானம் சேஷாசலநாயுடு
    7. நாமக்கல் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்
    8. முசிரி வித்துவான் கு அ ஆறுமுகப் பிள்ளை
    9. முசிரி வீ அப்பாயி நாயுடு
    10. திருநயம் அருட்கவி நரசிம்ம பாரதி
    11. பரப்பங்குடி சு கோபாலய்யங்கார்
    12. மதுரை மாவட்டம் தேவகோட்டை வே. ஆ. தி. மாயாண்டி செட்டியார் மகன் சிதம்பர செட்டியார்
  2. பாடல் 56
  3. இதன் கருத்து : நாவால் உரைப்பதற்கு அருமையான திருப்புகழைச் சொல்லிச் சொல்லி உன் மனத்தைக் கரைக்க முயன்றேன். உன் மனம் என்பொருட்டு கரையவில்லை. நீ இருக்கும் பழநி மலைதான் கல்லாக இருக்கிறது. உன் மனமுமா கல்?
  4. பாடல் 90
  5. பாடல் 94