பழங்குடியினர் பாரம்பரிய அருங்காட்சியகம், தேக்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழங்குடியினர் பாரம்பரிய அருங்காட்சியகம் (Tribal heritage museum thekkady) என்பது கேரளத்தின், இடுக்கி மாவட்டம், தேக்கடியில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.

பெரியாறு பகுதியில் ஐந்துவகை தொல்குடிகள் வாழ்கின்றனர். இத்தொல்குடிகளின் குடியிருப்பை காணச் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்குடியினர் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் இவர்களின் சமூக வரலாறு, இவர்களின் மரபான தொல்குடி மீன்பிடிப்பு கருவிகள், வேட்டைக கருவிகள், இவர்கள் பயன்படுத்தும் மூலிகளைகள், மரபான வேளாண் நடைமுறைகள், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சடங்குகள் தொடர்பான பல்வேறு கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களின் உடைகள், வீட்டுப் பொருட்கள், பாத்திரங்கள், மூங்கில் தளபாடங்கள் மற்றும் இசைக்கருவிகள் உள்ளன.[1] மேலும் சுமார் இரண்டு மணிநேரம் நடக்கும் தொல்குடியினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகயையும் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]