பள்ளியில் ஒரு நாய்க்குட்டி (சிறுகதைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
நூலாசிரியர்சுந்தர ராமசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்காலச்சுவடு பப்ளிகேஷன்
பக்கங்கள்160
ISBN978-81-89945-75-6

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி என்பது சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடாக இப்புத்தகம் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 7 சிறுகதைகள் உள்ளன. இந்த 7 சிறுகதைகளில் ஒரு கதைக்கு மட்டும் தலைப்பு கொடுக்கப்படவில்லை. அக்கதையானது தலைப்புப் போடாத கதை எனக்குறிப்பிட்டு வெளிவந்துள்ளது. சில சிறுகதைகள் முற்றுப் பெறாத நிலையில் இருக்கின்றன. சுந்தர ராமசாமி மறைந்த பிறகு அவரது நாட்குறிப்பேட்டில் அவர் எழுதியிருந்த முழுமை பெற்ற மற்றும் முழுமை பெறாத சிறுகதைகளின் தொகுப்பு இது. இப்புத்தகத்தின் பதிப்புரிமை சுந்தர ராமசாமி அவர்களின் மனைவி கமலா ராமசாமி அவர்களுடையது. இத்தொகுப்புகளிலுள்ள சிறுகதைகளில் ஒன்றான பள்ளியில் ஒரு நாய்க்குட்டி எனபதுவே இத்தொகுப்பின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பிற்கு அரவிந்தன் முன்னுரை எழுதியுள்ளார்.

தொகுப்பிலுள்ள சிறுகதைகள்[தொகு]

  • புலமையின் அம்மணம்
  • பெயர் தெரியாத மரம்
  • பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
  • சாத்துவதும் திறப்பதும்
  • இரு நண்பர்கள்
  • (தலைப்புப் போடாத கதை)
  • கிங்காங்கும் தாராசிங்கும்

பின்னட்டைக் குறிப்புகள்[தொகு]

பொதுவாக வெளிவரும் எல்லாத் தமிழ் புத்தகங்களிலும் அப்புத்தகத்தின் பின்னட்டையில் சில குறிப்புகள் அச்சிடப்பட்டு இருக்கும். அவை பொதுவாக அப்புத்தகத்தின் உள்ளே உள்ள கதைகளிலிருந்தோ, கவிதைகளிலிருந்தோ அல்லது கட்டுரைகளிலிருந்தோ சில பகுதிகளாக இருக்கலாம். சில சமயம் எழுத்தாளரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அமையலாம். இன்னும் சில சமயங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய பிறருடைய மதிப்புரை அல்லது விமரிசனத்தின் சில பகுதியாக இருக்கலாம். அல்லது அந்த எழுத்தாளர் வேறு எங்காவது வெளிப்படுத்திய அவரது கருத்தாக இருக்கலாம். இத்தகைய குறிப்புகள் பெரும்பாலும் அப்புத்தகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிப்பதில்லை என்ற போதிலும் வாசகர்களை அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் விதத்திலேயே அமைந்திருக்கும். இப்புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு, சுந்தர ராமசாமி தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல். 50 ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப் பயணத்தின் முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாகவே வெளிப்படுகின்றன. இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும், நோய்களையும், அவதூறுப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு.

வெளி இணைப்பு[தொகு]