பல் துலக்குதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பல் விளக்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பற்களை பற்தூரிகை, மரக் குச்சிகள் (ஆலும் வேலும்), அல்லது விரல்களை கொண்டு உரசி அழுக்கு போக தூய்மை செய்வது பல் விளக்கல் அல்லது பல் துலக்கல் ஆகும். அன்றாடம் காலை எழுந்தவுடன் பற்களை விளக்குவது மிகவும் நல்ல பழக்கங்களில் ஒன்று. தன்னுடல் தூய்மைக்கு அடிப்படையான ஒரு பழக்கம். உறக்கம் (நித்திரை) கொள்ளும் முன்னும் பற்களை விளக்கல்/துலக்கல் நன்று. பற்களை விளக்கல் பற்சொத்தை மற்றும் பிற நோய்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் வராமல் தடுக்க உதவுகின்றது.