பயிர் வினையியல் இடர்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிர் வினையியல் இடர்பாடுகள் ( PHYSIOLOGICAL DISORDERS) என்பது வேளாண்மை செய்யும்போது பயிர்களின் இலை, தண்டு, பூ, பழங்கள் போன்றவை பூச்சிகள் மற்றும் நோய்களைத் தவிர்த்து பல்வேறு காரணங்களால் பலவிதமான வினையியல் இடர்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக பழங்களில் வெடித்தல், ஒழுங்கற்ற தன்மையுடன் காணப்படுதல் முதலியன ஆகும்.

காரணிகள்[தொகு]

  • ஊட்டச்சத்துகளின் குறைபாடு
  • அதிகப்படியான ரசாயன உரமிடுதல்
  • உறைபனி/ குறைந்த வெப்பநிலை
  • அதிக வெப்பநிலை
  • போதிய சூரிய ஒளி இல்லாமை
  • அளவுக்கு அதிகமாக நீர்ப்பாசனம் செய்தல்
  • நீர்ப்பற்றாக்குறை

பழப்பயிர்களில் வினையியல் இடர்பாடுகள்[தொகு]

வாழை[தொகு]

வாழையின் கழுத்து நுனிப்பகுதி தடைபடுதல் (choke throat), கொட்டை வாழை

மா[தொகு]

நுனிப்பகுதி கருமை நிறமாதல் ( Black Tip), சதைப்பகுதி மென்மையாதல் (Spongy tissue), ஒழுங்கற்ற தன்மை, பழங்கள் உதிர்தல், சிற்றிலைகள்

எலுமிச்சை[தொகு]

பழங்கள் உதிர்தல்

கொய்யா, பப்பாளி[தொகு]

பழங்களில் ஒழுங்கற்ற தன்மை

மாதுளை[தொகு]

பழங்களில் வெடிப்பு

திராட்சை[தொகு]

பழங்களில் பெரிது-சிறிதாக இருத்தல்

காய்கறிப் பயிர்களில் வினையியல் இடர்பாடுகள்[தொகு]

தக்காளி[தொகு]

பழ நுனி அழுகல், பழ வெடிப்பு, பழங்களில் பூனைமுகத் தோற்றம், வெள்ளைத் திசு, பழத்தோல் வெளிர்தல், மஞ்சள் தோள்பட்டை,

கேரட்[தொகு]

வேர் வெடிப்புத் தன்மை, பிளவுபடுதல், வெற்றிடப் புள்ளிகள்

முள்ளங்கி[தொகு]

பிளவுபடுதல்

உசாத்துணை[தொகு]

  • வேளாண்மையில் நுண்ணுயிர் மேலாண்மை நூல்
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், கோவை வெளியிட்ட பண்ணை இயந்திரவியல், பயிர் வினையியல்

வெளி இணைப்புகள்[தொகு]

பயிர் வினையியல் மாறுபாடுகள்