பயனர் பேச்சு:Yokishivam/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்வரவு[தொகு]

வருக! தாங்கள் எழுதி உள்ள நானும் இல்லை நீயும் இல்லை என்ற கட்டுரை கலைக்களஞ்சிய உள்ளடக்கமன்று. எனவே இது நீக்கப்பட்டுவிடும். இது குறித்து வருந்த வேண்டாம். நான் எழுதிய முதல் கட்டுரையும் நீக்கப்பட்டது. மாயை என்ற கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் விரிவாக்கலாம். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதற்காய்க் காத்திருக்கின்றன. நன்றி ! உதவிக்கு இங்கே சொடுக்கவும். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:42, 18 ஏப்ரல் 2013 (UTC) மகிழ்ச்சி[தொகு]

தாங்கள் விக்கியில் கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. தாங்கள் எழுதிய கட்டுரை:நில அளவை, விக்கியில் கட்டுரை எழுதும் போது முதலில் குறைந்தது மூன்றுவரிகளை எழுதுங்கள், பிறகு நேரம் கிடைக்கும் போது மேம்படுத்தலாம், நாங்களும் உதவுவோம். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:30, 18 ஏப்ரல் 2013 (UTC)

தமிழில் எழுத[தொகு]

வணக்கம் யோகிசிவம் அவர்களே . விக்கியில் தாங்கள் பங்களிக்க வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் பக்களித்த நில அளவை கட்டுரையில் ஒரு வரி கூட இல்லாமையால் நீக்கினேன். தாங்கள் தட்டச்சிட முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள் தங்களின் தொகுக்கும் பக்கத்தின் மேலே 'தமிழில் எழுத' என்ற ஒரு வாய்ப்பு உள்ளது அதில் நீங்கள் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்தால் ஒலியியல் முறையில் உதாரணமாக yoogisivam எனத் தட்டச்சிட்டால் 'யோகிசிவம்' என தமிழ் எழுத்துகள் கிடைக்கும். முயன்று பாருங்கள். தாங்கள் பழகி கட்டுரைகளை உருவாக்கி பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். இதற்கு பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் கிளிக் செய்து தொகுக்கவும். பின்னர் சேமியுங்கள். தங்கள் கட்டுரை முழுமையடைந்ததும் அதனை நான் உரிய இடத்திற்கு நகர்த்திவிடுகிறேன். உங்களுக்கு உதவ பிற விக்கியர்களும் உள்ளார்கள். ஏதேனும் ஐயம் எனின் இப்பக்க்த்தில் தெரிவித்தால் கூட உதவி கிடைக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:03, 20 ஏப்ரல் 2013 (UTC) விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC) கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தங்களது பெயர் பதியப்பட்டிருக்கும் எனவே கட்டுரையில் பெயர் குறிப்பிடத்தேவையில்லை இங்கு அதைப்பார்க்கலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC) ஐயா! விக்கியில் கட்டுரைகளைத் தொக்குத்தவரின் பெயர் இடம்பெறுவதில்லை. எனவே நீங்கள் தொகுத்த பக்கங்களில் தங்களின் கையெழுத்தை இடவேண்டாம். மேலும் உரையாடல் பக்கங்களில் தாங்கள் கையொப்பமிட விரும்பினால் 'தொகு' பக்கத்தின் நீலப்பட்டையில் மேலுள்ள எழுதுகோல் குறியீட்டை அழுத்தினால் தங்களின் கையொப்பம் பதிவாகிவிடும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 20 ஏப்ரல் 2013 (UTC) 'சத்தியவதி' தொடர்ந்து தொகுக்க முடியுமா?யோகிசிவம் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 07:00, 22 ஏப்ரல் 2013 (UTC) நன்றி சங்கீர்த்தன் அவர்களே! உள் தலைப்பிடுவது குறித்து ஆலோசனை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.--14.195.51.0 07:23, 22 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம் பார்வதிஸ்ரீ அவர்களே!தாங்கள் வழங்கிய ஆலோசனைப் படி பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் நில அளவை என்ற கட்டுரை தொகுக்கப் பட்டது சேமித்தேன் காணவில்லை.--14.195.51.0 07:33, 22 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் வணக்கம் ஐயா! நீங்கள் ஒவ்வொரு முறையும் புகுபதிகை செய்தபின்பு தொகுக்க ஆரம்பிக்கவும். அப்பொழுதுதான் தங்கள் பெயருடன் கையொப்பம் பதிவாகும். மேலும் நீங்கள் அப்பக்கத்தைச் சரியாக சேமிக்கவில்லை என நினைக்கிறேன். பயனர்:Yokishivam/test தற்போது இந்தப் பக்கத்தைத் தொகுத்துச் சேமியுங்கள். விக்கிப்பீடியாவிற்கேற்ப பிறகு மாற்றிக் கொள்ளலாம். உள் தலைப்பிடுவதற்கு (== தலைப்பு ==), (=== தலைப்பு ===, (=== தலைப்பு ===)) என்பனவற்ருள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தொகுக்கும் பக்கத்தின் மேலுள்ள A , A என்று தொடங்கும் பட்டையில் கருவிகள் ஒவ்வொன்றையும் செயற்படுத்திப் பார்க்கவும். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:44, 22 ஏப்ரல் 2013 (UTC) பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம் கட்டுரைகளில் புதிதாக தகவல்களைச் சேர்த்து அசத்துகிறீர்கள்! உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 ஏப்ரல் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது வணக்கம் தமிழ்க்குரிசில் அவர்களே! விக்கிப்பீடியாவிற்கு புதிய பயனர் நான் எனக்குள்ள படிப்பறிவு,பட்டறிவு இரண்டையும் மேம்படுத்த அறிவுசார் உலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் அவ்வளவே. எனது முதல் கட்டுரையின் தலைப்பு தொகுக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தம்.அதுதான் என்னை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு எழுதத் தூண்டுகிறது.புதிய தலைப்புக் கட்டுரையை தொகுக்க வேண்டும்!!!.நன்றி- யோகிசிவம் சத்தியவதி கட்டுரையில் பல தகவல்கள் தங்களுடையதே! அருமையாக உள்ளது. மேலும் பல கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து உதவுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:17, 24 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழரே!(இப்படி அழைப்பதில் தவறில்லையே?)சத்தியவதியில் எனக்கு தெரிந்த தகவல்களை சொல்லியுள்ளேன்.மகாபாரத்தில் உள்ள எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளின் தகவல்களை சத்தியவதியில் சொல்லிவிட்டால் தகவல்களை திரும்ப,திரும்ப படிக்கிறபோது சலிப்பாகிவிடும்!!எனவே சத்தியவதியை உரைதிருத்தியும்,உரிய இடத்திற்கு நகர்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி --யோகி சிவம் 07:37, 24 ஏப்ரல் 2013 (UTC)--115.118.93.15 07:27, 24 ஏப்ரல் 2013 (UTC)  விருப்பம் உங்கள் விருப்பப்படியே அழையுங்கள்!! மேலும் தகவல்கள் தந்து உதவுங்கள். தமிழக அரசு, தமிழகரசின் துறைகள், தமிழ்நாடு புவியியல் தொடர்பான கட்டுரைகளைக் கண்காணித்து உரை திருத்தித் தர வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 24 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழர்களே! (தமிழ்க்குரிசில்,பார்வதிஸ்ரீ)அல்லது தமிழ் விக்கியன்பு நண்பர்களே! சத்தியவதியை உரிய இடத்திற்கு நகர்த்தவும்.--யோகி சிவம் 13:17, 24 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் (பேச்சு) சத்தியவதியில் இருந்த பாண்டவர்கள், கௌரவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் கௌரவர் பாண்டவர் பக்கங்களிற்கு நகர்த்தியாயிற்று வியாசர் (அந்தப்பக்கத்திற்கு போக நீல நிறத்தில் உள்ளதலைப்பை சொடுக்கவும் ) எனும் பக்கம் விக்கியில் உண்டு வியாசர் தொடர்பான தகவல்களை அங்கு சேருங்கள், நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:33, 24 ஏப்ரல் 2013 (UTC) நன்றி!சங்கீர்த்தன் அவர்களே! குருங்கட்டுரை பகுப்பில் சத்தியவதி இருக்கிறாள்!?.கொஞ்சம் கவனியுங்கள்.--யோகி சிவம் 03:17, 25 ஏப்ரல் 2013 (UTC) (பேச்சு அதை தமிழ்க்குரிசில் சரிசெய்து விட்டார்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC) உதவி[தொகு]

இந்த வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை முடிந்தால் விரிவுபடுத்தி உதவுங்களேன்..:) [காட்டு] பா • உ • தொ

மகாபாரதம் 

--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழர்கள்! சங்கீர்த்தன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் நன்றி!! நான் ஏற்கனவே தமிழ்க்குரிசில் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.கூடிய விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.எனக்கு தட்டச்சு செய்வது மிகவும் தாமதமாகிறது.தற்போது தட்டச்சு பயிற்சி பெற தொடங்கியுள்ளேன்.விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.நன்றி!--யோகி சிவம் 17:55, 25 ஏப்ரல் 2013 (UTC)பயனர்:யோகிசிவம் (பயனர் பேச்சு:யோகிசிவம்பேச்சு)

தங்கள் பார்வை தேவை[தொகு]

ஐயா இந்தப்பக்கங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். தங்களுக்கு உதவியாய் இருக்கும். விக்கிப்பீடியா:கையெழுத்து விக்கிப்பீடியா:உதவி நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:23, 26 ஏப்ரல் 2013 (UTC) நன்றி பார்வதிஸ்ரீ அவர்களே!--யோகி சிவம் 15:11, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு) நீங்கள் விரும்பினால், கையெழுத்தில் உங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம் (பயனர் பெயர் மாறாது. கையொப்பத்தில் மட்டும் விரும்பிய பெயரை வைத்துக்கொள்ளலாம்.). சிலர் வெவ்வேறு வண்ணங்களிலும், குறியீடுகளிலும் அழகழகான கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்ன! உங்களுக்கும் விருப்பம் தானே!!!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 26 ஏப்ரல் 2013 (UTC).  விருப்பம் நன்றி! தமிழ்க்குரிசில் அவர்களே!-- 16:18, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு) காமன்சு/ஊடக நடுவம்[தொகு]

வணக்கம்! தங்கள் கட்டுரைகளில் அழகாக படங்கள் சேர்க்கலாம். கட்டுரைக்கு அழகு சேர்க்கும். பெரும்பாலும் பொதுவான தலைப்புகள் தொடர்புடைய படங்கள் காமன்சில் கிடைக்கும். Wikimedia Commons என்பதை விக்கி ஊடக நடுவம் என்று அழைக்கிறோம். இங்கே பல படங்கள், ஒலிக் கோப்புகள், காணொளி நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பது உட்பட பல்வேறு நாடுகளைப் பற்றிஉஅ ஊடகங்கள் நிறையவே உள்ளன, அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். :) இங்கே சென்று தேடல் பெட்டியில் விரும்பிய தலைப்புகளைத் தேடுங்கள் படங்கள் கிடைக்கும். அந்த படத்தின் பெயரை இங்கே இணைத்தால் படம் கிடைக்கும். பொதுவான தலைப்புகளில் படங்கள் கிடைக்கும். மகாபாரத கதாபாத்திரங்களின் படங்களும் காட்சிகளும் நிறையவே இருக்குமென்று நினைக்கிறேன். பயனுள்ளதாய் இருக்கும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 26 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம்! தமிழ்க்குரிசில் அவர்களே ஆங்கிலப் புலமையும்,பாண்டியத்தியமும் எனக்கில்லை இங்கே அனைத்தும் ஆங்கிலத்திலுள்ளது.தேவையான படங்களை தாங்களே சேர்த்து விடுங்கள் நன்றி!--யோகி சிவம் 03:18, 27 ஏப்ரல் 2013 (UTC) மறுமொழி[தொகு]

இதற்கு ஆங்கிலப் புலமை தேவை இல்லை :) அங்கு சென்று preferences (விருப்பத்தேர்வுகள்) ஐ மாற்றிக் கொள்ளலாம். மேலே வலப்பக்கம் உங்கள் பெயருக்கு அடுத்து இருக்கும். (முதலில் அங்கும் நீங்கள் இதே யோகிசிவம் என்ற பெயருடன் புக வேண்டும். அப்போதுதான் மேலே கூறியவை தெரியும்!!!) விருப்பத்தேர்வுகளில் மொழி என்பதில் தமிழைத் தேர்வு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவது போலவே எல்லாம் தமிழிலேயே தெரியும். ஆங்கிலம் ஒரு மேட்டரே இல்லை!! நான் கன்னட விக்கிப்பீடியாவையே தமிழில் தான் பார்க்கிறேன். :) (ஒருவேளை சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கலாம். அப்படி பார்த்தால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறேன்.) இன்னொரு விசயம், புது பத்தியாக எழுத இடைவெளி விட வேண்டாம். அரைப்புள்ளியை (:) இட்டு வரியைத் தொடங்கினால் அதுவே இடம் விட்டு காட்டும். தற்போதைக்கு நானே படங்களை இணைக்கிறேன். நீங்களும் அங்கு பழகிப் பாருங்கள். இங்கே நிறைய கருவிகள் உள்ளன. விரைவில் ஒவ்வொன்றாய் பார்ப்போம். நன்றி!-04:12, 27 ஏப்ரல் 2013 (UTC) நன்றி! தங்கள் பேச்சு புது தெம்பு ஊட்டுகிறது,விக்கியில் உலாவுவது 18 ஏப்ரல் 2013 என்பதால் மன நடுக்கம் உள்ளது.கணிணி தமிழ் எனக்கு? எதையாவது சொடுக்கி ஏதும் தவறு நடந்து விட்டால் விக்கியர்கள் உழைப்பு வீணாகும் என்ற மன பயம் உள்ளது. ஒரு முறை தங்களை நேரில் சந்தித்து உரையாடினால் ஓரளவு தேரிவிடுவேன்.--யோகி சிவம் 04:44, 27 ஏப்ரல் 2013 (UTC) மறுமொழி[தொகு]

நான் இங்கு வந்த புதிதில் ஓரளவுக்கே தமிழில் எழுதத் தெரியும். (ஆங்கில வழியில் படித்தேன்.) விக்கி தொழில்நுட்பமும் புதிது, தமிழ்ச் சொற்களும் புதிது. ஒன்றுமே புரியவில்லை. இருக்குற எல்லா ஆப்ஷன்களையும் அமுக்கி விளையாடிட்டேன். :) பின்னர் ஒவ்வொரு பயனரும் உதவி செய்தனர். ஊக்கப்படுத்தினர். நானும் பேச்சுப் பக்கங்களில் கலாய்ப்பதும் எனக்கு தெரிந்ததை சொல்லியும் காலத்தை ஓட்டினேன். வந்து சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. நல்ல தமிழில் எழுதக் கற்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் எனது கருத்துக்களைச் சொல்லி, பிறர் கருத்துக்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். பின்னர், ஆங்கிலத்தில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்தேன். பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும் தலையைக் காட்டினேன். தமிழின் பிற விக்கிமீடியா திட்டங்களிலும் தலையைக் காட்டினேன். பல கருவிகளை இயக்கக் கற்றுக் கொண்டே. (இவை என்ன என்று பிறகு சொல்கிறேன்.) கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தை கவனியுங்கள். என்ன உரையாடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லித் தாருங்கள். புதியவர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுங்கள். இங்கு உள்ள நடைமுறைகள் கடினமாக இருக்கலாம். சில நாட்களில் பழகிவிடும். எதற்கும் தயங்க வேண்டாம். தவறாக செய்துவிட்டாலும், மீளமைத்தல் என்ற வசதியின் மூலம் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். உழைப்பு வீணாகாது :) எப்போது சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். பதில் சொல்வோம். எங்காவது தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 27 ஏப்ரல் 2013 (UTC) உதவி[தொகு]

அன்புத் தோழர்கள்! தமிழ்க்குரிசில்,சங்கீர்த்தன்,ஆகியோருக்கு வணக்கம்!! மகாபாரத்தில் உள்ள குறுங்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள்ளது,அவற்றை Google வலையில் காண்பது எப்படி? தயவு செய்து உதவுங்கள். --யோகி சிவம் 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC) நான் அறிந்தவரையில், விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை உருவானால், அது மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் சிக்கும். நேற்றோ, இன்றோ உருவான கட்டுரை என்றால், சில நாட்கள் பொறுத்திருங்கள். (நீங்கள் கூகுளில் தேடும் சொல் விக்கிப்பீடியாவில் இருந்தால், தேடலின் முதல் முடிவாக விக்கி கட்டுரை தெரியும்.) -தமிழ்க்குரிசில் வலைவாசல் சத்தியவதி[தொகு]

தோழரே, சத்தியவதிக்கு வலைவாசலா!!! வலைவாசல் என்பது குறிப்பிட்ட ஒரு தலைப்புகளில் அல்லது பகுதிகளில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இங்கு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரால் மட்டும் வலைவாசல்கள் உருவாக்க முடியாது. வேண்டுமெனில், வலைவாசல்:மகாபாரதம் உருவாக்கலாம். மற்றவர்களும் உதவுவர்.--அராபத் (பேச்சு) 04:28, 29 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழரே வணக்கம்!!எனது பேச்சுப் பக்கத்தில் தோழர் தமிழ்க்குரிசில் எனக்கு மறுமொழியில் சொன்ன உலாவுதலில் வந்த விளைவு! மகாபாரதத்தில் உள்ள குருங்கட்டுரைகளை தொகுத்தேன்.எனது நண்பர்கள் நச்சரிப்பால் அவற்றை google வலைப்பகுதிக்கு நகர்த்த எடுத்த முயற்சியால் விளைந்தது தான் வலைவாசல் சத்தியவதி மீண்டும் சத்தியவதியாகவே மாற்றிவிட்டேன். --யோகி சிவம் 05:07, 29 ஏப்ரல் 2013 (UTC) நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--அராபத் (பேச்சு) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ நிர்வாகிகள் திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC) நில அளவை[தொகு]

நண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC) அன்பு நண்பரே நில அளவை என்பது வேலி அல்ல வேலி எனபது நிலத்தின் பரப்பளவைக் குறிக்கும் சொல் ஆகும்.எனவே வேலி(நில அளவை)என்ற பக்கத்தை நில அளவை என மாற்றினேன்.இப்போது தொகுக்கப் பட்டுள்ள நில அளவையை பார்த்தால் தெரியும்!நிலப் பகுதியை அளவை செய்து ஆவணப்படுத்தும்,அது தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் கட்டுரையாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் நன்றியுடன்--யோகி சிவம் 18:13, 29 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம் நண்பரே, சந்திப்பதில் மகிழ்ச்சி! பொதுவாக கட்டுரை பற்றிய கருத்துக்களை அவற்றின் உரையாடல் (பேச்சு)ப் பக்கத்தில் எழுதி விடுங்கள். ஏனென்றால், பின்னர் அந்த கட்டுரைகளைப் பற்றிய உரையாடல்களை அறிய யாராவது விரும்பினால் பேச்சுப் பக்கத்தில் பார்த்து அறிவர். தனிப்பட்ட சந்தேகங்களையும் உரையாடல்களையும் நமது பேச்சுப் பக்கங்களில் வைத்துக் கொள்ளலாம். :) ஏதாவது பொது சந்தேகம் ஏற்பட்டால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி பக்கத்தில் கேட்கலாம். எல்லோரும் தங்களது கருத்தைத் தெரிவிப்பர். கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். :) நீங்கள் தமிழில் எழுத, தட்டச்சுப் பலகையில் தேடி தேடி அடிப்பதாக எழுதி இருந்தீர்கள். இது முன்பு போல கடினமான செயல் இல்லை. பக்கத்தின் மேலே உள்ள தமிழி்ல் எழுத என்பதை சொடுக்கி, தமிழ் எழுத்துப்பெயர்ப்பு என்பதைத் தேர்வு செய்யுங்கள். இது ஒலிப்பு முறையில் எழுதும். amma என்று எழுதினால் அம்ம என்று வரும். அம்மா என்று வர வேண்டும் என்றால், ammaa என்று தட்ட வேண்டும். இது ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்திருக்கும். நினைவூட்டல் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 30 ஏப்ரல் 2013 (UTC) கவனிக்கவும்[தொகு]

அன்புத்தோழர் தமிழ்க்குரிசில்!! சகுனியில் ஜைன புத்த மதம் கட்டுரையின் அடிக்குறிப்பு கட்டுரையில் உள்ளதே? பாருங்களேன் நன்றி--யோகி சிவம் 16:51, 2 மே 2013 (UTC) புரியுமாறு சொல்லுங்கள். தவறை திருத்திவிடுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC) அன்புத்தோழர் தமிழ்க்குரிசில்!! விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரைக்கு உரிய புகைப்படங்கள் எனது கைபேசியிலிருந்து கணிணிக்குள் வந்துவிட்டது.ஆனால் படங்களை கட்டுரையில் பதிவேற்ற தெரியவில்லை.கொஞ்சம் ஆலோசனை தேவை நன்றி--யோகி சிவம் 13:10, 3 மே 2013 (UTC) இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:13, 3 மே 2013 (UTC) படிமங்களை விக்கிப்பீடியாவிற்கு தரவேற்றுகிறோம். கட்டுரைகளில் இணைக்கிறோம். ஒரு படம் எத்தனை கட்டுரைகளில் தேவை என்றாலும் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, India film clapperboard (variant).svg என்ற படத்தை இங்கே இணைக்க விரும்பினால், என்று தந்தால்,

என்று காட்டும். முயன்று பாருங்களேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC) சகுனியில்-ஆட்டுக்கடாவுக்கு <ref/*ஜைன மகா பாரதம்</ref>மணம்-என்றுள்ளது,தவிரவும் ஜைன மகா பாரதம் என்பது அடிக்குறிப்பு தானே? கட்டுரைத் தொகுப்பில் உள்ளது மேலும் புகைப் படங்கள் விருப்பாச்சி சென்று பார்த்தும்,செப்பு பட்டையம் இடையகோட்டை பாளைய அரன்மனையில் நானே பார்த்து எனது கைபேசியில் படம் பிடித்தது,மேற்கண்ட புகைப்படங்களை விக்கிபீடியாவிற்குள் பதிவேற்றுவது குறித்துத் தான் கேள்வி எழுப்பினேன்.நண்பர் Kanags உதவி செய்து உரையாடியுள்ளார்.முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றியுடன்--யோகி சிவம் 15:32, 3 மே 2013 (UTC) அடிக்குறிப்பு பற்றி நான் செய்த தவறு என்ன என்று கூறுங்கள். சரியாகப் புரியவில்லை.

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் அடிக்குறிப்பு இட வேண்டும் என்றால் ஒரு வரைமுறை இருக்கிறது. கட்டுரையின் ஒரு வரியில் [1] என்று தந்து, பின்னர் கீழே

  1. ஆதாரம் 1

என்று தந்தால், ஆதாரம் அடிக்குறிப்பாகக் கீழே காட்டும். நாமாக, மே ஒரு வரியில் (1) எனத் தந்துவிட்டு, கீழே ”↑ ஆதாரம் 1” என்று தரக் கூடாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:43, 3 மே 2013 (UTC)

நன்பரே! -ஆட்டுக்கடாவுக்கு <ref/*ஜைன மகா பாரதம்</ref>மணம் -என கட்டுரை உள்ளது.சகுனி கட்டுரையை படிக்கவும் பக்கத்தை தயவு செய்து பார்க்கவும் (கட்டுரையை தொகுக்கும் பெட்டியில் தானே மேற்கண்டவாறு இருக்க வேண்டும்?)--யோகி சிவம் 16:19, 3 மே 2013 (UTC) அடிக்குறிப்பு[தொகு]

ஐயா <ref/* ஜைன மகா பாரதம்.</ref> --- இதில் [1] என வர வேண்டும். நீங்கள் தவறுதலாக குறியிட்டிருக்கிறீர்கள் அவ்வளவே. நான் சரி செய்து விட்டேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC) படங்களைப் பதிவேற்ற[தொகு]

வணக்கம் ஐயா. கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க தாங்கள் படத்தை "save as" தெரிவு மூலம் முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோப்பைப் பதிவேற்று எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம். பிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.) கட்டுரைகளில் படகங்களை இணைக்க[தொகு] எடுத்துக்காட்டாக: தங்களின் படம்- File:Water above the Hogenakkal falls.jpg என வைத்துக்கொள்வோம்.


காவேரி

காவேரி

என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.

இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls.jpg" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்; right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும். 250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது. " ஒகேனக்கல் அருவி" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு. விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது. இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள். படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன். படத்தை நீக்க[தொகு] படிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC) வணக்கம் பார்வதிஸ்ரீ, எனது கைபேசியிலிருந்து எனது கணிணிக்கு கொண்டு வந்துவிட்டேன்.விக்கியில் பதிவேற்ற நண்பர் "Kanags" தகவல் தந்தார் அது படி பதிவேற்றம் முடிந்த்து.பின் படிமங்களைக் காண பக்கத்தை சொடுக்கினால் படங்களை காணவில்லை,மீண்டும் முயன்று பார்க்கிறேன்.படங்கள் Photo.0005,0006,0008,0009,0010 என்ற பெயரில் பதிவேற்றமானது.நன்றி!--யோகி சிவம் 17:13, 3 மே 2013 (UTC) படத்தை இணைக்கவும்[தொகு] வணக்கம் பார்வதிஸ்ரீ, பதிவேற்றம் முடிந்தது.பின் படிமங்களைக் காண படிம பக்கத்தை சொடுக்கினால் பட்டியலில் தாங்கள் பதிவேற்றம் செய்த சப்புலட்சுமிக்கு அடுத்த படியாக- Gopal-1 கோபால் நாயக்கர் வரலாறு பத்தியிலும், Gopal-2 செப்புப் பட்டையம் என வருகிற பத்தியிலும், Gopal-3 இறுதிப்போர் என்ற பத்தியிலும், Gopal-4 அரன்மனை என்ற பத்தியிலும், Gopal-5 மணிமண்டபம் என்ற பத்தியிலும் இணைக்க வேண்டும். நான் இணைத்துப் பார்த்தேன் முடியவில்லை.நன்றியுடன்--யோகி சிவம் 20:11, 3 மே 2013 (UTC) படிமங்களுக்கு நன்றி. படிமப் பக்கத்திலேயே சுருக்கம் என்பதன் கீழ் படம் பற்றிய விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். உ+ம்: படிமம்:Gopal-3.jpeg என்ற படிமம் எதைப் பற்றியது. அக்கட்டடம் எங்குள்ளது. போன்ற விபரங்களைத் தாருங்கள். மேலும், படிமங்களின் படி அவரது பெயர் கோபால் நாயக்கர் என்று தெரிகிறது. கோபால நாயக்கர் அல்ல. தலைப்பை விருப்பாச்சி கோபால் நாயக்கர் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 06:53, 4 மே 2013 (UTC) ஒரு படத்தை மட்டும் கட்டுரையில் இணைத்திருக்கிறேன். (இச்சிலை எங்குள்ளது?) ஏனையவற்றை நீங்கள் விரும்பிய பகுதியில் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:56, 4 மே 2013 (UTC) நன்றி[தொகு] நன்றி கனக்ஸ்!கட்டுரையில் இறுதிப்போர் நடந்த சத்திரப்பட்டி பாளைய அரன்மனையின் முகப்புத் தோற்றம்.திண்டுக்கல்லிலிருந்து பழனிசெல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கட்டுரையை நான் தொடங்கவில்லை.கட்டுரைக்கான தலைப்பை உள்ளிடும் போது விருப்பாச்சி கோபால் நாயக்கர் என கட்டுரை உள்ளது மேலதிகத் தகவல்களை மட்டுமே நான் தொகுத்தேன், கோபால நாயக்கர் என்பதைவிட கோபால் என்பதே சரியானதாகும் என நினைக்கிறேன்.நன்றியுடன்--யோகி சிவம் 07:12, 4 மே 2013 (UTC) \உரையாடுக அன்பு கனக்ஸ் படங்களை சரியான இடத்தில் வைத்துள்ளேன்.தலைப்பை கோபால்என்றே மாற்றிவிடுங்கள்,தமிழக அரசின் மணிமண்டபம் குறித்த அறிக்கையில் கோபால் என்றுதான் உள்ளது.நன்றியுடன்--யோகி சிவம் 08:00, 4 மே 2013 (UTC) அன்பு கனக்ஸ்! சிலை மணிமண்டபத்தில் உள்ளது.--யோகி சிவம் 08:03, 4 மே 2013 (UTC) செய்தி[தொகு]

இங்கு தங்களுக்கு ஒரு செய்தியுள்ளது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:37, 4 மே 2013 (UTC) இரு கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 23:53, 4 மே 2013 (UTC) நன்றி கனக்ஸ் நண்பரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC) விக்கித்திட்டம் சைவம்[தொகு]

தாங்கள் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கட்டுரைகளை இயற்றுதல், மேம்படுத்துதல் போன்றவற்றோடு விக்கித்திட்டம் சைவத்திற்கு ஆலோசனைகளையும் கூறி மெருகேற்ற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC) நன்றி!சகோதரன் ஜெகதீஸ்வரன்--யோகி சிவம் 12:38, 6 மே 2013 (UTC) சொல்லுங்களேன்![தொகு]

எனது பேச்சுப் பக்கத்தை கவனிப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் யோசனை சொல்லுங்களேன்--யோகி சிவம் 04:28, 7 மே 2013 (UTC) வணக்கம் சிவம்! ஒரு கட்டுரையை தொகுக்கும் போது பெட்டியின் கீழே, "இதை கவனிப்புப் பட்டியலில் சேர்க்கவும்." என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்து கட்டுரையை சேமித்தால், கட்டுரையில் செய்யப்படும் திருத்தங்கள் கவனிப்புப் பட்டியலில் தெரியும். இது கட்டுரை, பேச்சுப் பக்கம் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். இயல்பாகவே, உங்களுடைய பேச்சுப் பக்கம் உங்கள் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். இல்லை என்றால், அடுத்த முறை தொகுக்கும் போது மேற்கூறியவாறு செய்யுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:46, 7 மே 2013 (UTC) நன்றி தமிழ்க்குரிசில் அன்புடன்--யோகி சிவம் 05:54, 7 மே 2013 (UTC) அன்பு கனக்ஸ் உரைவீச்சு என்பது கட்டுரையில் சொல்லியுள்ளது தான் அதனை தொடர்ந்து தொகுக்க வேண்டியுள்ளது விக்கிபீடியா உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றிவிடலாம்.நன்றியுடன்--யோகி சிவம் 15:12, 9 மே 2013 (UTC) சப்த(ஏழு) சிவத் தலங்கள்[தொகு]

வணக்கம் ஐயா. சப்த(ஏழு) சிவத் தலங்கள் என்ற தலைப்பிற்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கும் தொடர்பே இல்லாதது போல் உள்ளது. செய்யாறு என்ற கட்டுரையில் இடம்பெற வேண்டியவைகளை இக்கட்டுரையில் சேர்த்துவிட்டீர்களா? ஐயம் தீருங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 17 மே 2013 (UTC) விபரம் அறிந்தேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 20 மே 2013 (UTC) விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த) பதிவேற்ற[தொகு]

த.விக்கிப் பக்கத்தில் இடதுபுறம் பொதுவகம் என்று ஒரு இணைப்பு உள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்தால் விக்கி காமன்ஸ் என்ற பக்கம் ஆங்கிலத்தில் திறக்கும். விக்கி காமன்சில் log in செய்து கொள்ளுங்கள் தவியில் கோப்பைப் பதிவேற்று என இடப்புறம் இருப்பது போல அங்கு upload a file இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். select a media file இணைப்புடன் பக்கம் தோன்றும். அதைக் கிளிக் செய்ய, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படிமத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். படிமம் லோட் ஆகும். அதற்கு சற்று நேரம் ஆகலாம். லோடான பின் அந்த பக்கத்தின் வலதுபுறம் கீழே next இணைப்பை கிளிக் பண்ண, அடுத்து வரும் பக்கத்தில் நாம் பதிவேற்றப்போகும் படிமம் சொந்த முயற்சியா (own work) இல்லையா என இரு options இருக்கும். அதில் own work செலெக்ட் பண்ணிவிட்டு கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும். அடுத்த பக்கத்தில் படிமத் தலைப்பு இருக்கும். பெயர் மாற்றுவதானால் மாற்றிக் கொள்ளலாம். படிமத் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கட்டும். அப்போதுதான் பிற மொழிப் பயனர்கள் பயன்படுத்த முடியும். தலைப்புப் பெட்டிக்குக் கீழ் படிமம் பற்றிய விளக்கம் தர ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் படிமம் குறித்து ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் அங்கு எழுதலாம். (ஆங்கிலத்தில்) அப்பக்கத்தின் கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அடுத்தினால் படம் அப்லோட் ஆகிவிடும். தேங்க்ஸ் ஃபார் அப்லோடிங் என்று வரும். பகுப்பு சேர்த்தலாம், ஆனால் முதல் முயற்சியில் வேண்டாம், அவ்வளவுதான் வேலை முடிந்தது. முயன்று பாருங்கள், சந்தேகம் வந்தால் கேளுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:53, 21 மே 2013 (UTC நன்றி[தொகு] தங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி!முயன்று பார்க்கிறேன் --Yokishivam (பேச்சு) 16:05, 21 மே 2013 (UTC) கொண்றங்கி[தொகு]

தலைப்புப் பற்றைய உங்கள் கருத்தை இங்கு தொடருவது நல்லது.--Kanags \உரையாடுக 21:20, 21 மே 2013 (UTC) சில பரிந்துரைகள்...[தொகு]

ஐயா, வணக்கம்! குருச்சேத்திரப் போர் குறித்து அருமையான விரிவாக்கங்களை செய்து வருகிறீர்கள். இது குறித்த எனது பரிந்துரைகள் சில: கட்டுரையில் கதைப் பாத்திரங்களின் பெயருக்கு ஒரு முறை (முதல் முறை) இணைப்பு தந்தால் போதுமானது. உதாரணமாக - கர்ணன் என ஐந்தாறு முறை வரும்போது... முதலில் கர்ணனைக் குறிப்பிடும் வார்த்தையிலிருந்து 'கர்ணன்' எனும் கட்டுரைக்கு இணைப்பு தந்தால் போதுமானது. ஐந்து முறை இணைப்பு தருவது ஒன்றும் தவறில்லை - ஆனால், நேரம் விரயமாகும்! உதாரணமாக - கர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இந்த இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். விக்கியில் ஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நீங்கள் அறிவீர்கள். தாங்கள் பங்குகொள்ளும் குருச்சேத்திரப் போர் கட்டுரைகளில் இடம்பெறும் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதனை 'மேற்கோள்கள்' எனும் தலைப்பின்கீழ் தரவும். உதாரணத்துக்கு பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) எனும் கட்டுரையைப் பார்க்கவும். இங்கு உசாத்துணை என ஒரு புத்தகம் மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி! நன்றி செல்வ சிவகுரு! கர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது தற்போது தங்களின் வழியே தெரிந்து கொண்டேன்,மேலும் இணைப்பு தருவது குறித்து எனக்கு புரிதல் இல்லை. ஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நன்கு அறிவேன் அதுதான் என்னை விக்கியில் இணைந்திருக்கத் தூண்டியது.நான் விரிவாக்கம் செய்யும் கட்டுரைகளுக்கு 'மேற்கோள்கள்' அல்லது 'உசாத்துணை' குறிப்பிடுவேன்.மேலும் என்னை செதுக்குங்கள் சிற்பமாகிக் கொள்கிறேன்.நன்றி--Yokishivam (பேச்சு) 07:30, 25 மே 2013 (UTC) மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Yokishivam!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:18, 2 சூன் 2013 (UTC) ஆச்சரியம்![தொகு]

வணக்கம் இரவி ! நான் தானா? 250 பங்களிப்புகளா? தங்களின் ஊக்கம் ½ கி.ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட உணர்வு! பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல... நன்றி--Yokishivam (பேச்சு) 15:45, 3 சூன் 2013 (UTC) ஆலமரத்தடியில் விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுவதனால் உங்கள் தொகுப்பு இங்கு மீள் பதியப்படுகின்றது. --Anton (பேச்சு) 16:06, 3 சூன் 2013 (UTC) வணக்கம் யோகிசிவம். //பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல.// என்ற தங்களின் செய்தி கண்டு மிக மகிழ்ந்தேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 18:12, 3 சூன் 2013 (UTC) வேண்டுகோள்...[தொகு]

வணக்கம் ஐயா! அசுவமேத யாகம், ஆடிக்கிருத்திகை போன்ற தங்களின் 'விருப்பத் துறை' சார்ந்த பல கட்டுரைகள்... பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ளன. இக்கட்டுரைகளை தங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும்போது செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 12 சூன் 2013 (UTC) please kindly do whatever changes you want to do with enough proof. Since you have interests in spiritual, i requested you. Please take your own time & take care of your health. Thank you.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:56, 15 சூன் 2013 (UTC) கைவல்ய நவநீதம் நூலின் அட்டைப் படம்...[தொகு]

படிமம்: நவநீதம்.jpg|thum|right|கைவல்ய நவநீதம் இதில் thumb என திருத்தம் செய்தேன். சரியாகிவிட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 15 சூன் 2013 (UTC) பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 15 சூன் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது பகுப்பு (++): மகாபாரதம்

  1. ஜைன மகா பாரதம்