பயனர் பேச்சு:Neechalkaran/சமயநல்லூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. பஞ்சாயத்து என்பதை ஊராட்சி என்று மாற்றவும்.
  2. பஞ்சாயத்து என்பது தமிழல்ல.
  3. ஊர்+ஆட்சி=ஊராட்சி
  4. ஊராட்சி என்னும் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியம் என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது; பஞ்சாயத்து ஒன்றியம் அல்ல.
  5. தமிழக அரசும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை என்றே பயன்படுத்தி வருகின்றது. பார்க்கவும்: http://www.tnrd.gov.in/
  6. நபர்கள் என்பதை பேர் எனலாம்.
  7. குக்கிராமம் என்பதை குடியிருப்பு என மாற்றலாம்.

இயன்றவரை இன்தமிழ் என்போம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:17, 29 செப்டம்பர் 2015 (UTC)

நீச்சல்காரன், முதற்கண் இப்பணியைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்தி வருவதற்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும். சில குறிப்புகள்:
  • பக்கத்தில் தற்போது தகவல் பெட்டி மட்டுமே இருப்பதால் கட்டுரை ஒரு கிலோ பைட்டுக்குக் குறைவாக உள்ளது. வெளியில் இருந்து புள்ளிவிவரங்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு, இது தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பற்றிய தவறான கருத்தைத் தரும்.
  • தகவல் பெட்டி மட்டுமே உள்ளடக்கமாக இருப்பது பக்கத்தைத் தொகுக்க விரும்புகிறவர்களுக்கு குழப்பத்தை அளிக்கும். முன்பே சுட்டியது போல், முழுக்க உரையாகவும் இடம் பெற வேண்டும்.
  • அடிப்படை வசதிகளுக்குப் புதிதாக ஒரு தகவல் பெட்டி காட்டலாம். அல்லது, ஒன்றன் கீழ் ஒன்றாக bullet pointஆகக் காட்டலாம்.
  • பத்துக்குக் குறைவான எண்களை ஒன்று / ஒரு, இரண்டு / இரு என்பது போல் எழுத்தாகவே காட்டுவது சிறப்பு. அதுவே நாம் பரிந்துரைக்கும் நடையும் கூட.
  • துணைத்தலைவராக ஆகியோருள்ளனர் என்று உள்ள இடத்தில் துணைத்தலைவர் பெயர் விடுபட்டுள்ளது.
  • ஊர்களின் ஆட்களக் கூறுகளைப் பெற்றுக் காட்ட முடிந்தால் சிறப்பு. முடிந்தால் மாவட்ட வரைபடத்தில் இவ்வூர் உள்ள இடத்தைக் காட்டும் வகையில் ஒரு வரைபடம்? அருகில் உள்ள இரயில் நிலையம் போன்ற விவரங்களை இதைக் கொண்டு பெற்று காட்டலாம் என்று பேசியிருந்தோம்.
  • திருமதி, திரு முதலிய மரியாதை நிமித்தமான சொற்களைத் தவிர்க்க வேண்டும். இது நடைக்கையேட்டு வழிகாட்டு.
  • பரிதியின் பரிந்துரைகளைச் செயற்படுத்தியமைக்கு நன்றி. கிராம ஊராட்சி என்று சொல்வது தேவையற்றது. ஊராட்சி என்றாலே போதும். இங்குள்ள கலைச்சொற்களை ஒப்பு நோக்கலாம்.--இரவி (பேச்சு) 20:44, 29 செப்டம்பர் 2015 (UTC)
ஆட்களக்கூறுகளும், நிலப்படங்களும், தபால் குறியீடுகளும் ஊரகவளர்ச்சித் துறையிடம் தற்போதைக்கு இல்லை என்றனர். வேறு எங்குக் கிடைக்கும் என்று கேட்கிறேன். இக்கட்டுரை தானியங்கியின் நிரலாக்க வடிவமைப்பிற்கு வேண்டும். ஆகவே உருவாகப்போகும் கட்டுரையாக மகாராஜபுரம் (ஊராட்சி) என்ற இம்மாதிரியைக் கொள்ளலாம். குறிச்சொல் அடிப்படையாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலுள்ள கல்விநிலையப்பெயர்களை விக்கிப்பீடியர்களே திருத்தவேண்டும் என்பதைப் போல தகவல் இல்லாத(துணைத் தலைவர் போல) இடங்களிலும் திருத்தவேண்டும். இதர நடைத்திருத்தங்களை மகாராஜபுரத்தில் நீங்களே செய்யலாம். முழுமையாகத் தானியக்க இணக்கமில்லாதவற்றைத் தவிர அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 04:07, 30 செப்டம்பர் 2015 (UTC)