உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:YArukkuyArsonhthamenpathu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது கட்டுரைகளை நீக்கியது குறித்த உரையாடல்களில் ஒருவர் என்னைக் குறித்து: "இவர் எந்தெந்தப் பக்கங்களைப் பார்க்கிறார் என்பதைக் கண்டறிய ஏதாவது வழி உள்ளதா?" என ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இக்கேள்விக்கான உள்நோக்கத்தைத் தெரிவித்தால் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். இது குறித்த எனது கருத்தையும் வெளிப்படையாகவே கொடுக்கிறேன். ஒன்று அவர் எனக்கு உதவவேண்டும் என எண்ணியிருக்கலாம்; அல்லது நான் தொடர்புகொள்ளும் பக்கங்களைப் பார்க்க இயலாமல் தடைசெய்ய முடியுமா? அல்லது தடுக்கவேண்டும் என விரும்புவதாகவும் இருக்கலாம். எப்படியாயினும் இந்திய வரலாறு எழுதப்படவே இல்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். இந்திய வரலாறு என்பது உலக வரலாறும் உலகச் சமயங்களின் வரலாறும் கொண்டது என்பதையும் உறுதியாக என்னால் நிறுவ முடியும். மேலும் வரலாற்றுக்கென ஒரு குழுவை உருவாக்கினால் பலரும் வரலாறு குறித்த தகவல்களைச் சான்றுகளுடன் கொடுத்தால் அவற்றைத் திரட்டி உண்மை வரலாற்றை வெளிப்படுத்த விக்கிபீடியாவால் இயலும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்வ்வுக் கொடுக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் விக்கிப்பீடியா வெளிப்படுத்தவில்லை என எண்ணுகிறேன். உதவிக்கு நன்றி.