உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vselva/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று புகழ் பெற்ற சரவணை சின்ன, மடு மாதா தேவாலயம்

புளியங்கூடல் சந்தியில் இருந்து வடக்கு பக்கமாக சரவனை சந்தி வரை ஊடறுத்து செல்லும் வீதிக்கு இடப்பக்கத்தில் சரவனை மேற்கு பகுதி இருக்கிறது இங்குதான் போத்துக்கேயரினால் சுண்ணாம்பு கர்க்களினால் கட்ட பட்ட மாதா தேவாலயம் இருக்கிறது வருடம் தோறும் ஆடிமாதம் 27 ஆம் திகதி கொடியேற்ற வைபவத்துடன் திருவிழா ஆரம்பமாகி ஆவணி மாதம் 5 ஆம் திகதி மாதாவின் சுற்றுப்பிரகார ஊர்வலத்துடன் திருவிழா முடிவடையும் இந்த திருவிழாவுக்கு யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் யாத்திரிகர்கள் வந்து கலந்து கொள்வார்கள் அந்த காலங்களில் திருவிழா ஆரம்பமாகியதினத்தில் இருந்து பாஷையூர் கரையூர் கத்தோலிக்கர்கள் ஆலய வளவில் வாடி அமைத்து 10 நாட்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் இதை விட மாதகல் , பண்டதரிப்பு, சில்லாலை, போன்ற இடங்களில் இருந்து கூடார வண்டில்களில் வந்து கத்தோலிக்கர்கள் பத்து நாட்களும் தங்கி இருந்து மாதாவை வழி பட்டு செல்லுவர். திருவிழா காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் வியாபாரிகள் விளையாட்டு பொருட்கள் துணி மணிகள் பாத்திர கடைகள் ஓலை பாய் ,கடகம், பெட்டி மற்றும் கடலை கடைகள் , பனம் கட்டி விற்பனை கடைகளுடன் தற்காலிக தேநீர் உணவு விடுதி என்று ஆலய வழவு திருவிழாவுக்கு அழகு சேர்த்து நிண்ற காலம் ஒரு பொற்காலம் என்றே கூறவேண்டும்.

சரவனையூர் விசு செல்வராசா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vselva/மணல்தொட்டி&oldid=2095185" இலிருந்து மீள்விக்கப்பட்டது