உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Viththagan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைவிடம்[தொகு]

இலங்கையின் வடபகுதியில் தென்மராட்சியில் மீசாலை என்ற கிராமத்தில் அமைந்து காணப்படுகின்றது.

பிரதான நோக்கம்

கிராம மக்கள் சமூகத்தின் வாழ்க்கைதரத்தினை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்டு மீசாலை வடக்கு கிராமத்தில் 20.06.2008 அன்று தாபிக்கப்பட்டது.

இரண்டாம் நிலை நோக்கங்கள்

  • கிராமத்தில் மீள் எழுச்சி செயற்பாடுகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தல்.
  • உள்ளூர் கிராம மட்டத்தில் தீர்மானம் எடுத்தலுக்கான அதிகாரத்தை சமூகத்திற்கு வழங்குதல்.
  • ஆற்றலை விருத்திசெய்தல்,திட்டமிடலுக்கான இயலுமையை கட்டியெழுப்புதல்,நடைமுறைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவமும் கண்காணிப்பும் என்பன கிராமமட்டத்தில் இருப்பதால் எல்லா தீர்மான்ங்களும் கிராமமட்டத்தில் எடுக்கப்படுதல்.
  • நிலக்கீழ் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டோர்,யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வர முடியாதோர் விதவைகள்,பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியோருக்கு இனங்கணப்பட்ட வாழ்வாதர திட்டங்களை அமுல்படுத்தல்.
  • மிக அவசியமான கிராமமட்டங்ளில் சமூக பொருளாதார உட்கட்டைமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கல் அமுல்படுத்தல்.
  • விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகளை உற்பத்தித்திறனை விருத்திசெய்தல்,நிலைநிறுத்தல் மற்றும் போட்டித்தன்மையை ஏற்படுத்தல்.
  • வாழ்வாதார திட்டங்களில் புதிய செயன்முறைகளை உருவாக்குதல்.
  • அபிவிருத்தி தீர்மானம் எடுத்தலில் திறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்,திட்டமிடல் செயற்பாடுகளுக்காக எல்லாப் பயணிகளதும் பங்குபற்றலை உறுத்ப்படுத்தல்.
  • மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு மாவட்டத்திலுள்ள ஏனைய கிராம அமைப்புக்களுடன் இணைந்து செயற்படல்.
                        ஆகிய இரண்டாம் நிலை நோக்கங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டு இவ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

அங்கத்துவம்

18 வயதினைப் பூர்த்தி செய்த அனைத்து கிராமமக்களும் அங்கத்துவம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் மேலும் இவ் அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு அங்கத்துவ கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கிராம அபிவிருத்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் ஏதேனும் ஒரு பிரயோசனத்தை ஒரு அங்கத்தவர் பெற்றுக்கொள்வதாயின் அது தொடர்பாக பொதுச்சபையில் கலைந்துரையாடப்பட்டு பொதுச்சபை கூட்ட அங்கத்தவர்களில் 70 வீதத்திற்கு மேற்பட்டோரின் அனுமதியினைப் பெற வேண்டும். மேலும் கிராம அபிவிருத்தி அமைப்பிலுள்ள அங்கத்தவர்களுடையே ஏற்படும் பிணக்குகள் மற்றும் வாய்த்தர்க்கங்கள் தொடர்பாக பொதுச்சபையில் கலைந்துரையாடப்பட்டு பொதுச்சபை கூட்ட அங்கத்தவர்களில் 70 வீதத்திற்கு மேற்பட்டோரில் அனுமதியுடன் தீர்மானிக்கப்படும்.

அங்கத்துவத்தை இரத்து செய்தல்

ஒரு அங்கத்தவர் விதிக்கக் கூடிய தண்டம் மற்றும் அங்கத்துவத்தை இரத்து செய்தல் தொடர்பாக பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ் விதியானது கிராம அபிவிருத்தி அமைப்பினால் அமைக்கப்படுகின்ற ஏனைய உப குழுக்களது உறுப்பினர்களை நியமனம் செய்தல்,நீக்குதல் தொடர்பாகவும் பொருத்தப்பாடுடையதாகும்.

  1. அங்கத்துவ பணம் செலுத்தி அதனை புதுப்பிக்காமல் தொடர்ந்திருத்தல்.
  2. சிறு குழுவில் தொடர்ந்து இயங்காமை.
  3. தொடர்ச்சியாக 3 பொதுச்சபை கூட்டத்திற்கு வரவின்மை.
  4. வாழ்வாதார கடனைப் பெற்று உரிய முறையில் செலுத்தத்தவறியமை.

தெரிவு

VDO ஆனது பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும் 7 - 15 அங்கத்தவர்களை கொண்டது. தெரிவின் போது ஒரு பதவி ஒன்றுக்கு மேற்பட்ட பிரேரணைகள் முன்மொழியும் போது இரகசிய வாக்கெடுப்பிற்கு விடப்படும். VDO இன் பதவிக்காலம் ஒரு வருடமாகும். VDO அல்லது எந்த ஒரு உப குழுவின் அங்கத்தவர்களின் செயற்பாட்டில் திருப்தியின்மையோ அல்லது தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் பொதுச்சபையின் 65 வீதம் மக்களால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படலாம்.

கூட்டம்

  • பொதுச்சபைக் கூட்டமானது பின்வரும் நிபந்தனைகளை கொண்டு காண்ப்படுகிறது.
  • ஆகக்குறைந்தது 65 வீதமான உறுப்பினருக்கு எழுத்து வடிவிலான படிவத்தின் மூலம் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • பொதுக்கூட்டமானது 3 மாதத்திற்கு ஒரு முறை திட்டம் முன்னேற்றம் மற்றும் தொடர்புடைய ஏனைய விடையங்கள் பற்றி படுத்துவதற்காக நடத்தப்படலாம்.
  • மொத்த குடும்ப அங்கத்தவர்களில் ஆகக் குறைந்தது 70 வீதமானோர் பங்குபற்ற வேண்டும்.


மேலும் குழுக்கூட்டமனது ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கொருமுறையும் VDO இன் உப குழு உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடாத்தப்பட வேண்டும்.

நிர்வாகத்தினர்[தொகு]

புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் முழுப்பெயர்கள் முகவரிகள் உள்ளடங்கிய பட்டியல் மற்றும் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் பதிவேடும் வருடாந்தம் பதிவாளருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.

  1. நிர்வாக பதவி மற்றும் கடமை பொறுப்புக்கள்
  • தலைவர்

கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல்

  • செயலாளர்

VDO இன் நாளாந்த செயற்பாடுகளை முகாமை செய்தல்

  • பொருளாளர்

வங்கிப்புத்தகம் காசோலைப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து காசுக்கணக்கு ஆவணங்களை பாதுகாப்பாக வைதல்

  1. மீசாலை வடக்கு கிராம அபிவிருத்தி அமைப்பின் 2016 ஆம் ஆண்டின் நிர்வாகக்கட்டமைப்பு பற்றிய விபரம்
இல பதவி முழுப்பெயர் சொந்த முகவரி
01 தலைவர் திரு.அமரசிங்கம் மகாலிங்கம் மீசாலை வடக்கு கொடிகாமம்
02 உபதலைவர் திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம் மீசாலை வடக்கு கொடிகாமம்
03 செயலாளர் செல்வி.கந்தையா ஜெயரஞ்சினி மீசாலை வடக்கு கொடிகாமம்
04 உப செயலாளர் திரு.பொன்னையா குகதாசன் மீசாலை வடக்கு கொடிகாமம்
05 பொருளாளர் திருமதி.நடராசசுந்தரம் சுபத்திரா மீசாலை வடக்கு கொடிகாமம்
06 நிர்வாக உறுப்பினர்கள்
திருமதி.கோடீஸ்வரன் விக்கினேஸ்வரி மீசாலை வடக்கு கொடிகாமம்
திருமதி.விக்கினேஸ்வரன் பூரணம் மீசாலை வடக்கு கொடிகாமம்
திருமதி.சிவனாதன் கோகிலா மீசாலை வடக்கு கொடிகாமம்
திரு.ஆறுமுகம் தம்பிராசா மீசாலை வடக்கு கொடிகாமம்
திரு.சண்முகநாதன் ஞானச்சந்திரன் மீசாலை வடக்கு கொடிகாமம்
திரு.சின்னத்தம்பி சுப்பிரமணியம் மீசாலை வடக்கு கொடிகாமம்

2016 ஆம் ஆண்டின் உபகுழுக்கள் பற்றிய விபரம்

வாழ்வாதார உப குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Viththagan/மணல்தொட்டி&oldid=2161502" இலிருந்து மீள்விக்கப்பட்டது