உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vanam 28/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோனார்ச் வண்ணத்துப் பூச்சியானது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. ஆனாலும் இவற்றை மெக்ஸிகோ, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, க்யூபா, பசிபிக் தீவுகள் போன்ற இடங்களிலும் காணப் படுகிறது. இவைகள் ஆரஞ்சு வண்ணத்தில் காணப் படும். அவைகளில் கருப்பு வண்ண இலையின் நரம்புகள் போன்று காணப் படும். வட அமெரிக்காவின் மோனார்ச்சுகள் அவைகளின் வலசைப் போதலுக்கு பெயர் போனவை. இவைகள் மில்க் வீட் வண்ணத்துப் பூச்சிகள் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றது. காரணம் இவைகள் இனப் பெருக்கம் செய்ய முட்டையிடுவது மில்க் வீட் என்று சொல்லக் கூடிய நம் ஊரின் எருக்கஞ் செடியில் தான். [1]

இவைகளின் வலசைப் போதல் ஒரு சுவராசியமான் அதிசயப் படக் கூடிய ஒரு இயற்கை நிகழ்வு. இவைகள் குளிர் காலத்தில் தங்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக தெற்கு நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கும்.இவைகளின் பயணத் தூரம் 2,500 கி.மீ ஆகும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தங்கள் வலசைப் போதலை தொடங்கும் இவைகள் நவம்பர் மாதத்தில் மெக்ஸிகோ மற்றும் புளோரிடா போன்ற வெப்ப பகுதிகளை சென்றடையும். மறுபடியும் தங்கள் பயணத்தை மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூலையில் முடிக்கும். ஆனால் இந்த வலசை போதலில் திரும்பி வரும் வண்ணத்துப் பூச்சிகள் நாலாவது சந்ததிகள் தான். இதில் மிகவும் சிறப்பான ஒரு அம்சம் என்னவென்றால் போகும்போது முன்னோர் எந்த மரத்தில் தங்கி ஓய்வெடுத்து முட்டையிட்டுச் சென்றனரோ அதே மரத்தில் அடுத்த வரும் சந்ததியினர் தங்கி இளைப்பாறுவது. இவர்கள் தங்கி இளைப்பாறுவது ஒலே ஃபிர் மரமாகும். ஒரே வேளையில் லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் வலசையைத் தொடங்குவது ஒரு அருமையான காட்சியாகும். இவைகளின் இந்தப் பயணத்திற்கு இவைகளின் சிறகுகள் மிகவும் உதவி புரிகின்றன. ஆய்வுகளின் முடிவில் வலசைப் போகும் பூச்சிகளின் இறக்கைகள் போகாதவைகளின் இறக்கைகளை விட நீளம் அதிகம் என கண்டு பிடித்துள்ளனர். [2]

  1. "மோனார்ச் வண்ணத்துப் பூச்சி". பார்க்கப்பட்ட நாள் 2 மே 2017.
  2. "மோனார்ச் மைக்ரேஷன் (வலசைப் போதல்)". பார்க்கப்பட்ட நாள் 2 மே 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vanam_28/மணல்தொட்டி&oldid=2273762" இலிருந்து மீள்விக்கப்பட்டது