பயனர்:VENKATRAMAN.S.P./மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் ஒன்றியம்-அணைக்கட்டு

                  நம் பாரத நாட்டில் உலகப்பபுகழ் மிக்க மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது எங்கள் ஒன்றியம். அந்த காலத்தில் இங்கு யானைகள் கட்டி வைத்ததால் யாணைக்கட்டு என்று பெயர்பெற்று பின்பு அந்த பெயர் மறுவி அணைக்கட்டாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த ஒன்றியத்தில்  32 கிராம ஊராட்சிகளும், 2 பேருராட்சிகளும் உள்ளன.தற்போது அணைக்கட்டு தாலுக்காவாகவும், சட்ட மன்ற தொகுதியாகவும் உள்ளது. அணைக்கட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அணைக்கட்டு ஒன்றியம் விவசாயத்திற்கு பெயர்பெற்றது. இந்த ஒன்றியத்தில் கரும்பு,வாழை,நெல்,நிலக்கடலை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலும்,விரிஞ்சிபுரம் மார்கபந்து ஈஸ்வரர் கோயிலும் உலக புகழ்பெற்றது.அணைக்கட்டில் தாலுக்கா அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பிஆர்சி அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் 80 ம், நடுநிலைப் பள்ளிகள் 21 ம் உள்ளன. இந்த ஒன்றியத்தில் 80 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களும், 21 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 270 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 2 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் , கண்கானிப்பாளர் மற்றும் 3 உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VENKATRAMAN.S.P./மணல்தொட்டி&oldid=1948453" இலிருந்து மீள்விக்கப்பட்டது