உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnseselvaplr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

5[தொகு]

4[தொகு]

3[தொகு]

க.நா. சிவராஜ பிள்ளை[தொகு]

தமிழ் இலக்கிய வளர்ச்சியல் வியத்தகு பயிபுரிந்த செம்மல்களுள் முக்கியமானர் பேராசிரியர் க.நா.சிவராஜப்பிள்ளை அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இதழி்ாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், எனப் பன்முகத் திறைம படைத்தவர். இருபதாம் நுாற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்து, நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

குமரி மாவட்டம் வீமநகரி என்னும் ஊரில் நாராயணப்பிள்ளை முத்தம்மை வாழ்விணையருக்கு 1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். கங்கை கொண்டான் கிராமத்தில் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். நாகர்கோவிலில் உயர் ெதாடக்கப் பள்ளியில் பயின்றார். பின்னர், கோட்டாறு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னைக் கிறித்துவக் கல்லு}ரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் தத்துவப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்று, முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை உடையவராக விளங்கி, 'நல்மாணவர்' என ஆசிரியர்களால் பாராட்டப்பெற்றார்.

பணிகள்[தொகு]

  • திருவிதாங்கூர் அரசின் காவல்துறை அதிகாரியாக பணி
  • 1926 ல் சென்னைப்பல்கலைக்கழகத்தில் பதிப்பாசிரியராகப் பொறுப்பு
  • 1927 ல் அதே பல்கலையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்பு
  • தமிழ்த்துறைத் தலைவராகப் பதவியேற்பு
  • தமிழ் லெக்சிகன் கௌரவ உதவியாளர் பணி

படைப்புகள்[தொகு]

  1. புறநானூற்றில் பழமை(1929)
  2. தமிழ்நாட்டில் அகத்தியர் (1930)
  3. பண்டைத் தமிழரின் காலவரிசை(1932)
  4. மேகமாலை,நாஞ்சில் வெண்பா முதலான கவிதை நூல்கள்

2[தொகு]

மா. சு. சம்பந்தன்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மா.சு .சம்பந்தன் அவர்கள் தமிழக முதல்வர்கள் மூவரிடம் விருதும் பரிசும் பெற்ற பெருமைக்குரியவர்.சிறந்த இதழியலாளராகவும் பேச்சாளராகவும் தனித்தமிழ்ப் பற்றாளராகவும் பெரியாரியச் சிந்தனையாளராகவும் பதிப்பியல் முன்னோடியாகவும் விளங்கியவர்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

ஆந்திர மாநிலம் நகரி அருகில் மாரம்பேடு எனும் ஊரில் சுப்பிரமணியன் என்பாருக்கு மகனாக 25 மே 1923 இல் பிறந்தார். மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே, மா. சு. சம்பந்தன் என்பதாகும். சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார்.

படைப்புகள்[தொகு]

  1. சிறந்த பேச்சாளர்கள் - 1947
  2. சென்னை மாநகர் - 1949
  3. திருச்சி விசுவநாதம் - 1949
  4. அச்சுக்கலை - 1959
  5. அச்சும் பதிப்பும் - 1980
  6. எழுத்தும் அச்சும் - 1981
  7. தமிழ் இதழியல் வரலாறு - 1989
  8. தமிழ் இதழியல் சுவடுகள் - 1990
  9. தமிழ் இதழியல் களஞ்சியம் - 1990
  10. தொடர்பன் கட்டுரைகள் - 1998

1[தொகு]

ஆங்கில இணையத்தின் முகவரி

ராஜகோபால சாஸ்திரி(கலாநிலையம்)[தொகு]

கலாநிலையம் ராஜகோபால் தமிழ்நாட்டின் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவர்.சிறந்த இதழியலாளராகவும் உரையாசிரியராகவும்

படைப்பாளராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கியவர்.

பிறப்பு[தொகு]

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கிருஷ்ணமாச்சாரி,ஜானகி இணையருக்கு மகனாய் 15.3.1897 அன்று பிறந்தார்.தஞ்சைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி பயின்ற இவர் பட்டப்படிப்பை சென்னையில் முடித்தார்.

பணி[தொகு]

செல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்த இவர் பணிக்கு ஏதும் செல்லாமல்செல்வம் அனைத்தையும் தமிழுக்காகவே செலவழித்து மகிழ்ந்தார்.முழு நேரத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

குடும்ப வாழ்வு[தொகு]

இவரது துணைவியார் பெயர் ரங்கநாயகி.மக்கள் மூவர்.மைதிலி,கிருஷ்ணன்,மாதவன் ஆகியோர்.தமது மனைவி 24 வயதில் மறைந்த போழ்தும் மறுமணம் புரிந்து கொள்ளாது மாத்தமிழுக்குத் தொண்டு புரிந்து வாழ்ந்துள்ளார்.

தமிழ்த்தொண்டு[தொகு]

1.வில்லிபாரத உரை 3 பகுதிகள் 2.இலக்கண விளக்கம்-உரை 3.புகழேந்திப்புலவர்,ஜூலியஸ் சீசர் வாழ்க்கை வரலாற்று நூல்கள் 4.பிளாட்டோவின் குடிவாழ்க்கை (மொழிபெயர்ப்பு) 5.நெஞ்சில் முதிர்ந்த கனி,வாளும் வனிதையரும் (நாவல்கள்) 6.கானல்வரி முதலான 32 நூல்கள்

இதழியல் பணி[தொகு]

கலாநிலையம் எனும் வார இதழை டி.என்.சேஷாசல அய்யரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினார்.

பாராட்டும் விருதும்[தொகு]

15.1.79 ல் தமிழக அரசு செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

மறைவு[தொகு]

5-9-1983 ல் மறைந்தார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnseselvaplr/மணல்தொட்டி&oldid=2313085" இலிருந்து மீள்விக்கப்பட்டது