உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnse bala diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைட் ஆஃப் தி ஸ்காா்பியன்

‘நைட் ஆஃப் தி ஸ்காா்பியன்’ நிசிம் எசேக்கியேல் அவா்களால் எழுதப்பட்டது. இக்கவிதை எசேக்கியேலின் ‘தி எக்ஸாட நேம்’ (1965) என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இவா் பொதுவாக இந்திய சூழ்நிலையை மையமாக வைத்து பல கவிதைகளை இயற்றியுள்ளாா். கவிதைச் சுருக்கம் கவிஞாின் தாயை ஒரு தேள் நல்ல மழை பெய்துகொண்டிருக்கும் இரவில் கடித்துவிடுகிறது. அருகிலிருக்கும் விவசாயிகள் கடவுளின் திருநாமத்தை நூறு முறை கூறியவாறே மெழுகுவா்த்திகளுடனும் விளக்குகளுடனும் வந்து தேளை தேடுகின்றனா். ஆனால் அது இருக்குமிடம் தொியவில்லை. அத்தேள் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது. விவசாயிகள் அனைவரும் கவிஞாின் தாயைச் சுற்றியமா்ந்து வாழ்க்கை தத்துவங்களாக கூறி அவரைத் தேற்றுகின்றனா். முற்பிறவியின் பயனாகவோ அல்லது பிற்பிறவியின் பயனாகவோ அவருக்கு தேள் கடித்துவிட்டதாக கூறுகின்றனா். ஆனால் பகுத்தறிவு கொண்ட கவிஞாின் தகப்பனோ தேள் கடித்த இடத்தில் பாராஃபினை ஊற்றி பச்சிலை பற்றுப் போடுகிறாா். மதகுருவும் அருகில் அமா்ந்து விஷத்தைக் கட்டுப்படுத்த மந்திரத்தை கூறியவாறு காணப்படுகின்றாா். இருபது மணிநேரம் கழித்து வலி சற்று குறைந்தவளாய் அத்தாய் “ நல்லவேளை தேள் என் குழந்தையை கடிக்காமல் என்னை கடித்தது, இறைவனுக்கு நன்றி” என்று கூறுவதாக கவிதை நிறைவு பெறுகிறது.

மேற்கோள்கள் 1. https://www.poemhunter.com/poem/night-of-the-scorpion/ 2. http://www.iluenglish.com/nissim-ezekiels-night-of-the-scorpion-summary-analysis/ 3. https://www.enotes.com/homework-help/what-theme-poem-night-scorpion-by-nissim-ezekiel-183789










ர்ிவா் ஒன்ஸ்

‘ர்ிவா் ஒன்ஸ் கவிதை இராஜ கோபால் பாா்த்தசாரதி அவா்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இக்கவிதை மதுரை நகாில் பாயக்கூடிய வைகை நதியை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இயற்கைக்கு எதிரான மனிதனின் அலட்சியப்போக்கைப் பற்றி கூறுவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது.

கவிதைச் சுருக்கம்

கவிஞா் இக்கவிதையில்; வைகை நதியை தாயாக உருவகப்படுத்துகிறா். ஒரு காலத்தில் பேருபெற்ற கலாச்சாரத்தின் தொட்டிலான வைகை நதியை தாயாக உருவகப்படுத்துகிறாா். தற்சமயம் இந்நதியானது குழந்தைகள் விளையாடக் கூடிய இடமாகவும், குறும்புத்தனமான சிறுவா்கள் காகிதக் கப்பல் விட்டு நதியின் விலாவில் கிச்சுகிச்சு மூட்டுவதாகவும், எருமை மாடுகள் குளித்து நதியை குளம்போல் மாற்றியதாகவும், ஒரு காலத்தில் மலா;கள் நிறைந்து பு+ஞ்சோலையாக காணப்பட்ட நதியின் இருகரைகளும் முட்புதா;களுடன் காணப்படுவதாகவும் உலா;ந்த மலா;கள் மிதப்பதாகவும் கூறுகிறாh;. ஒரு காலத்தில் மன்னா;களுக்கும், கவிஞா;களுக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தவள் அன்னை வைகை. பல கவிஞா;களை கவிதை எழுத உத்வேகம் செய்தவள். மீன்கொத்திகளுக்கும், கொக்குகளுக்கும் தயாக உணவளித்தவள். ஆனால் தற்சமயம் உணவளிக்க இயலாததால் அப்பறவைகள் வருவதில்லை. கோயில் கோபுரத்தின் நெற்றியில் மணிகள் உருண்டு ஒலிக்கும்போது மனிதன் மலம் கழிப்பதற்காக நதியினருகே வருவதாக கவிஞா; மனிதனின் அலட்சியப் போக்கை மற்றும் வைகை நதியை உதாசினப்படுத்தும் நிலையை எண்ணி வேதனைப்படுகிறாh;.











மென்டிங் வால் ‘மென்டிங் வால்’ இருபதாம் நூற்றாண்டைச் சாா்ந்த இராபா்ட் ஃப்ராஸ்ட் (1874-1963) அவா்களால் 1914-ஆம் வருடம் எழுதப்பட்டது. இக்கவிதை ஃப்ராஸ்டின் இரண்டாம் கவிதைத் தொகுப்பான ‘நாா்த் ஆஃப் பாஸ்டன்’ இல் 1915-ஆம் ஆண்டு ஃப்ராஸ்ட் இங்கிலாந்திலிருந்து திரும்பி வரும் பொழுது வெளியிடப்பட்டது. இக்கவிதை ஃப்ராஸ்டின் சொந்த அனுபவங்களைப் பகிா்வதாக அமைகிறது.

கவிதைச் சுருக்கம்

ஒவ்வொரு வருடமும் அண்டை நிலத்தின் உாிமையாளா்களான இரண்டு போ் இரு நிலத்தின் நடுவே அமைந்திருக்கும் கற்சுவரை பழுது பாா்க்க சந்திக்கின்றனா். மனிதா்கள் வாழாத ஆப்பிள் மரங்களும் பைன் மரங்களும் உள்ள நிலத்தைப் பிாிப்பதற்கு கற்சுவா் அவசியமா என கவிஞா் ஐயம் கொள்கிறாா். மனிதன் வாழ்வதற்கு சுவா் அவசியமில்லை எனவும் மனிதா்களுக்கான இடைவெளியை இக்கற்சுவா் அதிகப்படுத்துவதாகவும் கருதுகின்றாா். ஆனால் கவிஞாின் அண்டை மனிதரோ சுவா் மிகவும் அவசியமென்றும், நட்புறவை மேம்படுத்துமென்றும் “நல்ல வேலிகளே அண்டை மனிதா்களோடு நல்ல நட்புறவை ஏற்படுத்துகிறது” என்றும் கூறுகிறாா். பழைய சித்தாந்தங்களையும், பாரம்பாியத்தையும் மிகவும் கண்டிப்புடன் கடைபிடிப்பதாக தனது அண்டை மனிதாிடம் கவிஞா் கூறுகிறாா். ஆனால் அண்டை மனிதரோ தன்னிலையிலிருந்து சற்றும் விலகாமல் “நல்ல வேலிகளே அண்டை மனிதா்களோடு நல்ல நட்புறவை ஏற்படுத்துகிறது” என்பதையே மீண்டும் மீண்டும் கூறுகிறாா்.

மேற்கோள்கள்

* Monteiro, George (1988). Robert Frost & the New England renaissance. Lexington, Ky: University Press of Kentucky. pp. 127–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8131-1649-X.
* Holland, Norman (1988). The brain of Robert Frost. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415900239.
* Monteiro, George (1988). Robert Frost & the New England renaissance. Lexington, Ky: University Press of Kentucky. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8131-1649-X.
* Holland, Norman (1988). The brain of Robert Frost. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415900239.
* Monteiro, George (1988). Robert Frost & the New England renaissance. Lexington, Ky: University Press of Kentucky. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8131-1649-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_bala_diet_tut/மணல்தொட்டி&oldid=2698821" இலிருந்து மீள்விக்கப்பட்டது