பயனர்:Thennakoan/மணல்தொட்டி/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2,6 மில்லியன் - 11,700[தொகு]

The International Commission on Stratigraphy (ICS) ஆய்வின்படி, Pleistocene epoch எனும் புவியின் பனி காலம் பற்றியதாகும். அக்காலப் பகுதியில் உலகின் பெரும் பகுதிகள் பனிப்பாறைகளாய் இருந்தன.இக்காலத்தை Pleistocene காலம் என்றழைக்கப்படும். இக்காலம் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது.

பனிபொழிவு காலம்[தொகு]

அறிவியலாளர்களதும் மானுடவியலாளர்களதும் ஆய்வின் படி, சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்புள்ள மனித எச்சங்கள் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். தற்போதைய பனிப்பொழிவு காலம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதற்கு முன், பெரும்பாலான மனிதர்கள் தெற்கு அரைக்கோளத்தில் வாழ்ந்தனர்.

வட அரைக்கோளம் தென் அரைக்கோளம்[தொகு]

இந்த பனி காலத்தின் போது வட அரைக்கோளத்தின் நிலப்பரப்புகள் பனியுருகி மனிதர்கள் வாழும் நிலங்களாக மாற்றம் பெற்றன. தெற்கு அடைக்கோளத்தின் நிலத்தின் கடல்மட்டம் மேலுயுர்ந்ததால், மனிதர்கள் வாழ்ந்த நிலங்கள் கடலுக்குள் மூழ்கின.

பன்னாட்டு காலநிலை கண்காணிப்பகம் இந்த கடல்மட்ட உயர்வை கண்காணித்து வருகின்றது. அதன்படி

கடல் மட்ட உயர்வு - எதிர்வுகூறல்[தொகு]

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் The National Oceanic and Atmospheric Administration (NOAA) தலைமையிலான புதிய அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடற்கரையோரங்களில் கடல் மட்டம் ஒரு அடி உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதேயளவு சற்று கூடுதல் அல்லது குறைவாக உலகின் அனைத்து நிலப்பரப்புகளில் கடற்கரையோரங்களின் கடல் மட்டமும் உயரும் என்பதும் கணிப்பாகும்.

கடல் மட்ட உயர்வு வரலாறு[தொகு]

இந்த கடல்மட்டம் உயருதல் தொடர்பான எதிர்கால கணிப்புகள் ஒருபுரம் இருக்க, நாம் பார்க்கப் போவதோ, கடந்த காலங்களில் கடல் மட்டம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைத் தான். கடல் மட்டம் உயர்ந்ததால், உலகின் பல்வேறு நிலப்பரப்புகளும் ஒரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தப் பகுதியாக இருந்தவை, இன்று கடலுக்குள் மூழ்கிய நிலப்பரப்புகளாக உள்ளன. அவ்வாறு மூழ்கிய நிலப்பரப்புகளையும் மூழ்கும் முன் அப்பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் பற்றியும் அம்மனிதர்களின் வாழ்ந்ததற்கான எச்சங்களையும் அந்தந்த நாட்டு கடலாய்வு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது நான் வாழும் பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்த டொசர்லாந்து நிலப்பரப்பு தொடர்பான ஆய்வுகளை குறிப்பிடலாம்.

உலகின் கடற்கொண்ட நிலப்பரப்புகள்[தொகு]

உலகின் நாலாபுரமும் கடல் மட்டம் உயர்ந்ததனால், நிலம் கடலுக்குள் மூழ்கிப் போன இடங்கள் தொடர்பில் இன்று ஆய்வுகள் நடைப்பெற்றாலும், கடலுக்குள் மூழ்கிப்போன ஒரு நிலம் குறிந்து எந்த ஒரு மொழியிலும் எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஒரேயொரு மொழியைத் தவிர, அம்மொழி தமிழ் தான். தமிழில் மட்டும்தான் கடல் கொண்ட நிலம் குறித்தும் ஆழிப்பேரலை குறித்தும் கடற்கோள் குறித்தும் வரலாற்றுச் சான்றுகள் எழுத்தாவணங்களாக உள்ளன. (இங்கே கற்பனை கண்டங்கள் பற்றிய புராணக் கதைகளையோ கற்பனை கண்டங்களையோ நான் குறிப்பிடவில்லை என்பதை கருத்தில் கொள்க.) கடற்கோளினால் கடல்கொண்ட ஒரு நிலபரப்பு தொடர்பான நிகழ்ந்த நிகழ்வைப் பற்றிய குறிப்பு அல்லது பதிவு தமிழில் மட்டுமே உள்ளது.

அந்த வரலாற்று பதிவையும் கடல்கொண்ட நிலப்பரப்பையும் நாம் இந்நூலில் பார்க்கப் போகிறோம்.

கடற்கொண்ட தென்னாடு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thennakoan/மணல்தொட்டி/1&oldid=3420735" இலிருந்து மீள்விக்கப்பட்டது