உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSEgoldawilliamTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'''ஒலிவ மலையின் கடைசி காலச் சிறப்பு'''

எருசலேம் தேவாலயத்துக்கு கிழக்கே ஒலிவமலை இருக்கிறது. அதன் தென்கிழக்கு பகுதியில் சரிவான ஒரு பழைய பாதை பெத்தானியா என்னும் கிராமத்திற்குச் செல்லும் வழியாகும். ஒலிவமலையிலிருந்து பெத்தானியா அரை மணிநேர பயண துாரத்தில் உள்ளது. இயேசு மரியாள், மார்த்தாள், லாசரு மற்றும் அவரது சீஷர்களுடன் அந்த பெத்தானியாவில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

சகரியா தீர்க்கதரிசி : "அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும், அப்பொழுது மகாப் பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமைத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்து பாேம். அதினாலே ஒரு பாதி வடபக்கத்திலும், ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்" (சகரியா 14: 4).

இயேசு ஒலிவ மலைக்குத் திரும்பும் பாேது, பெரிய பூகம்பம் ஏற்படும், மலைகள் இரண்டாகப் பிளந்து பாேம். "இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும், எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்" (சகரியா 14: 1-2). சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகத்தான நாளில் நடக்கும் யுத்தத்திற்கு கூட்டிச்சோ்க்கும்படி, உலகின் சேனைகள் மெகிதோவில் கூடி, அவருடைய வருகையின் பாேது கிறிஸ்துவுடன் போரிட எருசலேமுக்கு வருவார்கள். வெளிப்படுத்துதல் 16:14, அந்த இடம் "அர்மகெதோன்" என்று அழைக்கப்படுகிறது.

அப்போஸ்தலர் புத்தகம் இரண்டாம் வருகையை உறுதிப்படுத்துகிறது. அப்போஸ்தலர் 1-ல், சீஷர்கள் இயேசுவை உயர்த்தினார்கள். "அவர் போகிறபோது அவா்கள் வானத்தை அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கையில், இதாே வெண்மையான அங்கிகளைத் தரித்த இருவர் அவர்களருகே நின்று, கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் காெள்ளப்பட்ட இந்த இயேசுவானா் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் பாேனாராே அப்படியே மறுபடியும் வருவாா். பின்பு அவர்கள் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். (அப்போஸ்தலர் 1: 10-12).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய மூன்று தெளிவான வசனங்களை இங்கே நாம் கண்டிருக்கிறோம், இன்னும் பல இருக்கின்றன. ஏழாம் எக்காளத்தின் அறிவிப்பை நினைவில் கொள்ள வேண்டும்: "அப்பொழுது ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது பரலோகத்தில் மிகுந்த சத்தமிட்டு: இவ்வுலக ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுாிய ராஜ்யங்களாகி, என்றென்றைக்கும் ராஜரிகம்பண்ணும். 'வெளிப்படுத்துதல் 11:15).

இயேசு திரும்ப வருவதற்கு முன்பாக, பலரை ஏமாற்றும், பொய் மதங்கள், தவறான அறிகுறிகள் மற்றும் அதிசயங்கள் பாேன்றவை நடக்கும் என இயேசு சொன்னார். ஏனெனில், "கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால், தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், வஞ்சிக்கத்தக்கதாகப் பொிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வாா்கள்" (மத்தேயு 24:24). எனவே சக்தி வாய்ந்த மத ஏமாற்றங்கள் இருக்கும். சிலர் மட்டுமல்ல, அநேகர் பொய் மதங்களாலும் பொய்யான கிறிஸ்தவர்களாலும் ஏமாற்றப்படுவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEgoldawilliamTNV/மணல்தொட்டி&oldid=2340884" இலிருந்து மீள்விக்கப்பட்டது