பயனர்:TNSE VELMURUGAN TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிமலை வரலாறு[தொகு]

                கி.பி இரண்டாம் நூற்றண்டிலேயே கொல்லி மலையானது கடை ஏழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓரி என்னும் மன்னனுக்கு உரியதாக இருந்தது.வள்ளல்ஓரி வில்வித்தையில் வல்லவன்.அகவே,அவன் சங்கப் புலவர்களால் வல்வில் ஓரி என்று கூறப்பட்டான்.
                 ஓரி என்னும் வள்ளல் வாழ்ந்திருந்த  அதே காலத்தில் காரி என்னும் மற்றொரு வள்ளலும் வாழ்ந்திருந்தான்.  காரி என்பவன்   கடை எழு வள்ளல்களுள்

ஒருவன்.இவன் முள்ளூர் என்னும் ஊரை ஆண்ட குறுநில மன்னன்.காரி கொங்குநாட்டு பெருஞ்சேரலிரும்பொறைக்குப் படைத் தலைவனாக இருந்தான்.ஆகவே,காரி ஓரியுடன் போர் செய்து,அப்போரிலே ஓரியைக் கொன்று,அவனுடைய கொல்லிமலையைக் கைபற்றி,அதனைச் சேர மன்னனுக்குக் கொடுத்தான்.இச் செய்தியைக் கல்லாடனார் என்னும் புலவர் கூறுகிறார்:

                "  ....................செவ்வேல் 
                 முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
                  சொல்லா நல்லிசை நிருத்த வல்லில்
                  ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த
                  செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லி"   

(அகம் .209) என்று அவர் இச்செய்தியை விளக்கமாக கூறுகிறார்.எனவே,ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிமலை பெருந்சேரலிரும் பொறைக்கு உரியதயிற்று.இம்மலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டத்தில் உள்ளது. பார்வை நூல்

        மயிலை சீனி.வெங்கடசாமி-நுண்கலைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VELMURUGAN_TVM/மணல்தொட்டி&oldid=2340076" இலிருந்து மீள்விக்கப்பட்டது