உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE SRI NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக கடவுச்சொல் தினம்என்பது பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றத்திலும் நிதி தொடர்பான பரிமாற்றத்திலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எவ்வாறு பாதுகாப்பாக அமைப்பது தொடர்பான ஒரு விழிப்புனர்வை ஏற்படுத்த இணைய முன்னோடிகளினால் கொண்டாடப்படும் ஒரு தினம் ஆகும்.

கடவுச்சொல்[தொகு]

கடவுச்சொல் என்பது வளங்களை பயன்படுத்த உள்நுழைவதற்கான அங்கீகாரம் வழங்குவதற்கு நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் நம்மால் உருவாக்கப்படக்கூடிய வார்த்தை அல்லது எண்குறிகளின் கோவைகள்(character)ஆகும் .

உலக கடவுச்சொல் தினம்[தொகு]

உலகெங்கும் கடவுச்சொல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாப்பான கடவுச்சொல்லை அமைப்பதற்கும்,அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் மே மாதம் முதல்வியாழக்கிழமை உலக கடவுச்சொல்தினமாக கொண்டாடப்படுகிறது.

பொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள்[தொகு]

2013 ஆம் ஆண்டின் கூகுள் அறிவிக்கையின்படி

  1. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்
  2. முக்கிய நாட்கள் (பிறந்த தினம், திருமண நாள்)
  3. கடவுச்சொல் (PASSWORD)
போன்ற மிகவும் எளிதில் திருட வாய்ப்பிருக்கும் கடவுச்சொற்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது.

பாதுகாப்பான கடவுச்சொல்[தொகு]

முதன்முதலில் கடவுச்சொல்லை பயன்படுத்த தொடங்கியபோது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது கடவுச்சொல்(PASSWORD) என்பதனையும் 123456 என்பதனையுமே கடவுச்சொல்லாக பயன்படுத்தினர்.இதனை மிக எளிதில் திருட முடிந்தது

ஆனால் இன்றைய காலங்களில் நாம் கடவுச்சொல்லை பல்வேறு கணக்குகளில் பயன்படுத்துகிறோம்.

அவையாவன,

  • கூகிள்
  • மின்னஞ்சல்
  • சாம்சங் கணக்கு
  • கட்செவி
  • முகப்புத்தகம்

எனவே அவற்றை மிக கவனமாக அமைப்பது அவசியம். அதற்கு,கீழ்கண்ட வ்ழிமுறைகளை பயனபடுத்தலாம்

  1. பெரிய மற்றும் சிறிய எழுத்துகளில் அமைக்க வேண்டும்,
  2. எண்கள், வடிவங்களையும் சேர்த்து உருவாக்க வேண்டும்.
  3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை மாற்றம் செய்ய வேண்டும்.

எவ்வாறு பாதுகாப்பது:[தொகு]

  1. நச்செதிர்நிரல் (ANTIVIRUS) பயன்படுத்துவது.
  2. கடவுச்சொல்லை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.
  3. பிறருடைய கணினியை பயன்படுத்தும்போது அதில் கடவுச்சொல்லை தன்னிச்சையாக சேமிக்க கூடாது.
  4. பல அடுக்கு அரண்களை அமத்தல்.
  • ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP)
  • குறிப்பு கேள்விகளை கேட்கச் செய்தல்
  • பாங்கு அமைத்தல்( PATTERN LOCK)

ஒழுங்குமுறை கொந்தர்கள்:(Ethical Hacker)[தொகு]

குற்றவியல் கொந்தர்கள்(Criminal Hacker) புரியும் தகவல் திருட்டுகளை தடுக்க ஒலுங்குமுறை கொந்தர்களை அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பை அளிக்கின்றன.

ஒழுங்குமுறை கொந்தர்கள் கல்வி பயிற்றுவிக்கும் இந்திய நிறுவங்கள்:[தொகு]

  • அலகாபாத் ஐ.ஐ.டி
  • சண்டிகர் ஐ.ஐ.டி
  • இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம்.

கல்வித்தகுதி: இளநிலை பொறியாளர் அல்லது மேல்நிலை கணிதம் அல்லது எம்.சி.ஏ முடித்தவர்கள் இதனை படிக்கலாம்.

==மேற்கோள்கள்==

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SRI_NGP/மணல்தொட்டி&oldid=2274097" இலிருந்து மீள்விக்கப்பட்டது