உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE MUTHU DIET MDU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்ட வடிவப் பூங்காவில் நடைப் பயிற்சிக்காகச் சீரான அகலம் கொண்ட பாதை ஒன்று போடப்பட்டிருக்கும்.அப்பாதையின் பரப்பளவை நம்மால் கண்டுபிடிக்க இயலும். இரு பொதுமைய வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பளவே  பாதையின் பரப்பளவாகும். படத்தில் கண்டுள்ளபடி O ஆனது இரண்டு வட்டங்களுக்கும் பொது மையம் ஆகும். வெளிவட்ட ஆரம் R, உள்வட்ட ஆரம் r எனக் கொள்ள வேண்டும். நிழலிடப்பட்ட பகுதி வட்ட வலயம் அல்லது வட்டப்பாதை என்கிறோம். அதாவது, இரண்டு பொதுமைய வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதி வட்டப்பாதையாகும்.    

         வட்டப்பாதையின் அகலம், w = R-r அலகுகள்

அதாவது w = R-r => R = w+r அலகுகள்

                                                       r = R-W அலகுகள்.

வட்டப்பாதையின் பரப்பளவு = (வெளிவட்டப்பாதையின் பரப்பளவு) - (உள் வட்டப்பாதையின் பரப்பளவு)

                                                       = πR2 - πr2

=  π(R2 - r2) ச.அலகுகள்

வட்டப்பாதையின் பரப்பளவு =  π(R2 - r2) ச.அலகுகள்

வட்டப்பாதையின் பரப்பளவு = π(R+r)(R-r)ச.அலகுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MUTHU_DIET_MDU/மணல்தொட்டி&oldid=2327678" இலிருந்து மீள்விக்கப்பட்டது