உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Supa Srinivasan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[படிமம்:சுப சீனிவாசன்|thumbnail|மாணிக்கச் சிந்தனை]]

மாணிக்கச் சிந்தனை[தொகு]

அரிய சிந்தனையில் அறிவாய் உண்மை... உண்மையை உணர்வதன்றி மெய்யும் வளர்ந்திடாது... வளரும் உருவிற்கு அளவும் விதித்துள்ளான்... விதியை நினைப்போர்க்கு மதியும் மயங்கிடுமே... மதியை துதிப்போர்க்கு விதியும் வழிசெய்யும்... அவ்வழி செல்வோர்க்கே பேரறிவு தானாக்கும்... அறிவுக்கு அளவில்லை அதற்கும் அழிவில்லை... வேகாத உயிராகும் வெந்திடும் உடலாகும்... வேகும் உடலுக்கு ஆசையும் தீர்ந்திடாது... தீராத ஆசைக்கு மனமும் அடிமையாகும்... அடிமைபட்ட மனதிற்குக் கவலைதான் துணையாகும்... சுகமற்ற உயிருக்கு பிராணமொன்றே மருந்தாகும்... இயங்கும் உலகிற்கும் இதுவொன்றே துணையன்றோ... உன்வழி தனித்திருந்தால் வையகம் மாறிடுமோ... சிந்தனை தெளிவாக்குத் தெளிவான அறிவாக்கு... அறிவுக்குத் துணையாகும் நாதத்தை உனதாக்கு... உனதான நாதத்தில் இயங்கிடும் இறைவனை... உள்ளத்தில் உணர்ந்திடுவாய் அதுவன்றி வேரில்லை... அவனன்றி எவ்வுயிரும் இவ்விடம் பிறப்பதிலை... தானவன் ஆவதை உணர்ந்திடுவாய் தன்னுள்ளே... தான்தன்னில் உணர்வதன்றித் தனித்தோர் தெய்வமில்லை... தெய்வமே உண்மையொன்றில் இருப்பதை உணர்ந்திடுவாய்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Supa_Srinivasan&oldid=1780894" இலிருந்து மீள்விக்கப்பட்டது