உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Shanmugam Kandasamy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

==வலை வாசல் வருக==

வலை வாசல் வருக
நூலாசிரியர்முனைவர்.பா.சிதம்பரராஜன் & க.சண்முகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகணினி தொழில்நுட்ப நூல்
வெளியீட்டாளர்SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி
வெளியிடப்பட்ட நாள்
2020
பக்கங்கள்132 பக்கங்கள்

வலை வாசல் வருக[தொகு]

வலை வாசல் வருக என்பது கணினி தொழில்நுட்பத் தமிழ் நூலாகும் இந்நூலை SRM கல்விக்குழுமங்களில் ஒன்றான SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பா.சிதம்பரராஜன் அவர்களும் மற்றும் அக்கல்லூரியின் கணினி அறிவியல் பொறியியல் துறையின் உதவிப்பேராசிரியர் க.சண்முகம் அவர்களும் இணைந்து எழுதிய நூல். இந்நூலில் ஒவ்வொரு கணினிஅறிவியிலின் தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மைச்சார்ந்த, நிகழ்வுகளின் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.இந்நூல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்குப் பயன்பெறும் வகையில் தமிழிலில் வெளியிடப்பட்டுள்ளது.

விளக்கப்பட்டுள்ள தலைப்புகள்[தொகு]

இந்நூலில் தரவுப்பகுப்பாய்வு (Data Analytics), மேகக்கணிமை (Cloud Computing), வலையிணைப்புகணிமை (Grid Computing), தரவுச்செயலாக்கம்(Data Mining), இயற்கைமொழியாய்வு (Natural Language Processing), செயற்கைநுண்ணறிவு (Artificial Intelligence), பொருள்களின்இணையம் (Internet of Things), இளஞ்சித்தரவி (BigData), இயந்திரக்கற்றல் (Machine Learning), படிமச்செயலாக்கம் (Image Processing), மெய்நிகர்த்தோற்றம் (Virtual reality) மற்றும் புனைமெய்யாக்கம் (Augumented Reality), தொடரேடு (Block Chain),மின்வெளிபாதுகாப்பு(Cyber Securtity) தன்னியக்கஇயந்திரம் (Autonomous Machine) மற்றும் இணையாமல் இணையும் இணைய வழிக்கல்வி(Online Education) என இப்போது கணினிதுறையில் உள்ள பல தொழில் நுட்பங்களைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

நூல் பதிப்பு விவரங்கள்[தொகு]

இதனுடைய முதல் பதிப்பு 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனுடைய இரண்டாம் பதிப்பு 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

முதல் பதிப்பு[தொகு]

கணினிதுறையில் உள்ள தொழில்நுட்ப பண்புரிமை கருத்துக்களை( Technical Domain Concepts) அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம்,கதையோடு செயல்பாடுகளைச் சொல்லி கேலிச்சித்திர படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பதிப்பு[தொகு]

வலைவாசல் வருக நூலின் முதல் பதிப்பில் வாசகர்கள் அளித்த பின்னூட்டத்தின் அடிப்படையில் இரண்டாம் பதிப்பு உருவாகியிருக்கிறது. முதன்முறையாக இந்த தொழில் நுட்பங்களை படிக்கும் வாசகர்கள் இந்த நூலில் உள்ள சித்திரங்கள் தொழில்நுட்பக் கருத்துகளுக்கு எவ்வாறு பொருந்துகிறது என விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் அனைத்து சித்திரங்களுக்கும் விளக்கம் கொடுத்து இரண்டாம் பதிப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது கோவிட் 19 காலத்தில், மாணவர்களின் கல்வி மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டு இருந்தபோது இணையவழிக் கல்வி அந்தப் பாதிப்பை குறைத்து மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படாமல் வீட்டிலிருந்தே கற்க பெரிதும் உதவியது. இதுபோன்ற சூழ்நிலையில், இணையாமல் இணைந்துள்ள இணையவழிக்கல்வி பற்றியும் கூடுதலாக ஒரு பிரிவை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

https://www.youtube.com/watch?v=osj_l-ATiQM https://databaseoftamils.com/list/valai-vaasal-varuga https://books.dinamalar.com/details.asp?id=25403 http://www.kaniyam.com/book-release-valai-vaasal-varuga/ https://www.dinamani.com/specials/nool-aragam/2019/apr/22/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-3137409.html https://www.youtube.com/watch?v=tmHy9stzUDg

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanmugam_Kandasamy/மணல்தொட்டி&oldid=3251552" இலிருந்து மீள்விக்கப்பட்டது