பயனர்:Rkjo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தளபதி அனந்த பத்மநாபன் நாடார்[தொகு]

வரலாறு :

            தளபதி அனந்த பத்மநாபன் நாடார்  
        

கி.பி. 1698-1750 காலக்கட்டத்தில் மன்னன் மார்த்தாண்டவர்மனின் முதன்மைத் தளபதியாய் இருந்த அனந்த பத்மநாபன் நாடார் குளச்சலில் 1741-இல் நடைபெற்ற இந்தோ-டச்சுப் போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். அவரது வரலாறு திராவிட அரசுகளால் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர் வரலாஅவரளனடமடற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர் பிறந்த மற்றும் வாழ்ந்த இடமான குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகிலுள்ள கண்ணனூர்-தச்சன்விளையில் அனந்த பத்மநாபன் நாடாருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். பார்வதிபுரம் பேருந்து நிலையத்தில் அவருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க வேண்டும்.

அனந்த பத்மநாபன் நாடார் பற்றிய உண்மைகள் மறக்கப்படாமலிருக்க, பார்வதிபுரம் பேருந்து நிலையத்தின் பெயரை அனந்த பத்மநாபன் நாடார் பார்வதிபுரம் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

நடுவண் அரசு மலையாளி வேலுத்தம்பி தளவாய் நாயருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது போல் தமிழன் டச்சுப்படை வென்றோன் அனந்த பத்மநாபன் நாடாருக்கும் வெளியிட வேண்டும்.

அனந்த பத்மநாபன் நாடாரின் 11-ஆவது வழித்தோன்றல்

தளபதி அனந்த பத்மநாபன் நாடாருக்கு தச்சன்விளையில் மணி மண்டபம் மற்றும் முழு உருவ சிலை

தளபதி அனந்த பத்மநாபன் நாடாருக்கு தச்சன்விளையில் மணி மண்டபம் மற்றும் முழு உருவ சிலை அமைக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் "மருத்துவர் இராமதாசு அய்யா" வலியுறுத்தியுள்ளார்:

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு மலையாளிகளால் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் நாடார்கள் தான் என்ற நிலையில், நாயர்கள் தான் குமரி மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் என்றும், நாடார்கள் வந்தேரிகள் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தயாரித்த 9&ஆம் வகுப்பு பாடநூலில் திரித்து எழுதப்பட்டிருந்தது. ஜானகி நாயர் என்ற மலையாள பேராசிரியர் தான் இதை திரித்து எழுதினார் என்பதை கடந்த ஆண்டு நான் அம்பலப்படுத்தினேன். அதன்பின்னர் ஒட்டு மொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்ததை அடுத்து, இந்தத் தவறை திருத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புக்கொண்டது.


அதற்குப் பிறகும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்தி, நாயர் சமுதாயத்தை உயர்த்திப்பிடிக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப் பட்டு வருகின்றன. 1741-ஆம் ஆண்டில் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள், அடுத்தக் கட்டமாக இந்தியாவை கைப்பற்றும் நோக்குடன் குளச்சல் துறைமுகம் மீது படையெடுத்தனர். அவர்களை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனின் தளபதியாக இருந்த தமிழரான அனந்த பத்மநாபன் நாடார் தமது படைகளுடன் சென்று போரிட்டு வீழ்த்தினார். இதற்காக அவரை பாராட்டி பல நினைவிடங்களை அமைத்த மன்னன் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயரே இவரது நினைவாக சூட்டப்பட்டது தான். அதன்பின்னர் கன்னியா குமரி மாவட்டத்தில் நடந்த தோல்சீலை போராட்டத்தின் போதும், வேறு சில நிகழ்வுகளின் போதும் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அனந்த பத்மநாப நாடாரின் நினைவை சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கேரள நாயர்கள் அழித்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேலுத்தம்பி தளவாய் நாயர் என்ற மலையாளி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் தான் 1809&ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசியவர். தமிழர்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப் படுத்தியவர். வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தவரும் இவர் தான். தமிழினத்தை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்த இவரை ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரன் என்று ஒரு புறம் போற்றிக் கொண்டு, மறுபுறம் அனந்த பத்மநாப நாடாரின் சாதனை வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் நாயர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தமிழக அரசும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனந்த பத்மநாப நாடாரின் நினவாக அமைக்கப்பட்டு, பின்னர் நாயர்களால் சிதைக்கப்பட்ட கட்டிடங்களை சீரமைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக முந்தைய தி.மு.க. ஆட்சியில் வேலுத்தம்பி தளவாய் நாயருக்கு குமரி மாவட்டம் தலக்குளத்தில் ரூ.1.5 கோடியில் நினைவு இல்லமும், ரூ.35 லட்சத்தில் 7 இடங்களில் நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டன.

இவ்வாறாக, குமரி மாவட்டத்தில் நாயர்களை பெருமைப்படுத்தி, நாடார்களை அவமதிக்கும் வகையில் வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்கக்கூடாது. குமரி மாவட்டத்தில் வேலுத்தம்பி தளவாய் நாயர் உள்ளிட்ட மலையாளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும்; புதிதாக எதையும் அமைக்கக் கூடாது. அதேநேரத்தில் டச்சுப் படையை வென்ற அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவு இல்லமும், நுழைவு வாயிலும் அமைக்கப்பட வேண்டும்.

களியக்காவிளையில் உருவச் சிலை அமைப்பதுடன், அஞ்சல் தலையும் வெளியிடச் செய்ய வேண்டும். மேலும், குமரி மாவட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதைக்காகவும் போராடிய அய்யா வைகுந்தர், மார்ஷல் நேசமணி, வெள்ளையன் நாடார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை=[தொகு]

வாழ்க மாவீரன் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் புகழ் வளர்க மாவீரன் தளபதி அனந்த பத்மநாபன் நாடார் புகழ்


வாழ்க நாடார் குலம் வளர்க நாடார் குலம்

வீழ்த்த முடியாத வீரம் மானமே உயிர் என்ற குணம் அதுவே நாடார் இனம்...

thumbnail|தளபதி அனந்த பத்மநாபன் நாடார்

==== அனந்த பத்மநாபன் நாடாரின் வீரவணக்கம் – இமாலய வெற்றி ====

   குமரி மாவட்டத்தில் நாடார்களின் எழுச்சி அலையை உருவாக்கியுள்ளது!

அனந்த பத்மநாபன் நாடாரின் வீரவணக்கம் – இமாலய வெற்றி! குமரி மாவட்டத்தில் நாடார்களின் எழுச்சி அலையை உருவாக்கியுள்ளது! டச்சுப்டையை வென்றத் தமிழன், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன், வீரத்தளபதி. அனந்த பத்மநாபன் நாடார் (கி.பி.1698-1750) அவர்களின் 263-ஆவது வீரவணக்க நாள் 13-09-2013 அன்று தமிழ்நாட்டின் தெற்கெல்லையும் தமிழன்னையின்பொற்பாதமுமான கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை சந்திப்பு அருகிலுள்ள தச்சன்விளையில் மிகப்பிரமாண்டமாக பெருந்தலைவர் மக்கள் கட்சியால் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள காமராசர் சிலைக்கும் குளத்து பேருந்து நிலையம் வாயிலிலுள்ள மார்சல் நேசமணி சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலம் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர்.செவாலியர்.என்.ஆர்.தனபாலன் அண்ணாச்சி அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நான்குசக்கர வாகனங்களிலும் இருசக்கர வாகனங்களிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நாடார்கள் அணிவகுத்து நாகர்கோயிலிலிருந்து வீரத்தளபதியின் சமாதி அமைந்துள்ள தச்சன்விளைக்கு ஊர்வலம் சென்றனர். நாடார் மாணவர்களும் இளைஞர்களும், நாடார்ப் படை போல அணிவகுத்து, இருசக்கர வாகனங்களில், “வீரத்தளபதி.அனந்த பத்மநாபன் நாடாருக்கு ஜே!” என்று கரவொலி எழுப்பிக் கொண்டு சாலைகளில் வலம் வந்தது குமரி மண்ணில் நாடார் எழுச்சியை உருவாக்கியதோடு மட்டுமல்ல தமிழ் மொழியையும் தலை நிமிர வைத்தது.

இவ்வளவு நாட்களாக வீரத்தளபதியின் வரலாற்றை மறைத்து வந்த மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாயர்களுக்கும் துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களுக்கும் இந்த எழுச்சி நிச்சயம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்! காட்டாத்துறை-தச்சன்விளை சந்திப்பை அடையும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தன. இதனைக் கண்டு அதிர்ந்த மாவட்ட எஸ்.பி. அவர்கள், “வீரவணக்கத்திற்கு அனுமதி வாங்கவில்லை. இவ்வளவு கூட்டம் வருமென்று முன்னறிவிப்புச் செய்யவில்லை. எனவே அனுமதி கிடையாது” என்று மறுக்க, முடிவில் அண்ணாச்சி தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்டது. கூட்டம் குவிந்ததால் காட்டாத்துறை-தச்சன்விளை சந்திப்பிலிருந்து சமாதி வரைக்கும் இடையிலுள்ள 1 கி்.மீ. தூரம் வரைக்கும் எங்குப் பார்த்தாலும் வாகனங்களே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் நாடாமார் வெள்ளம். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சமாதிக்கும் பருத்திக் காட்டு வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பாதை மிகக்குறுகல் என்பதால் நெரிசல் ஏற்பட்டது. தச்சன்விளையிலுள்ள நாடார் சமுதாய மக்கள் அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து நாடார் கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போயினர். நாடார் சமுதாய மக்களின் உணர்வுகள் இக்கூட்டத்தைப் பார்த்து மேலோங்கி நின்றன. மாற்று சமுதாய மக்களுக்கு இதனால் பொறாமையும் பயஉணர்வும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவ்வளவு காலமும் அனந்த பத்மநாபன் நாடாரின் வரலாற்றை மறைத்தும் திரித்தும் பேசிவந்த மலையாள நாயர்களின் முகமூடி கிழிந்தது. உண்மை வரலாறு வெளிவந்தது.

இந்தப் பெருங்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகளான ஆர்.ஆர்.சிங் நாடார் (கிழக்கு மாவட்டச் செயலாளர்), ஜி.சக்திவேல் முருகன் (கிழக்கு மாவட்டத் தலைவர்), ஜாண்சன் நாடார் (மேற்கு மாவட்டத் தலைவர்) மற்றும் பாபு டானியேல் (மேற்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர் ஆவர். அதிலும் ஆர்.ஆர்.சிங் நாடார் அவர்களின் பங்கு அளவிற்கரியதாகும். பகல் 12.00 மணியளவில் தச்சன்விளையிலுள்ள சமாதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. “நாடார் டுடே“ ஆசிரியர் மு.பாலமுருகன் அவர்கள் காலையிலிருந்தே நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து வெப் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அனந்தன் பயன்படுத்திய தாமிரப்பட்டயம், வீரவாள், ஆயுத ஆலைப் படிமங்கள், நூற்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தோள்சீலைப் போராட்டத்தில் அழிக்கப்பட்ட அனந்தன் வாழ்ந்த வீட்டின் தடயங்களையும் ஆயுத ஆலை இருந்ததற்கான தடயங்களையும் அவர் வழிபட்ட அம்மன் கோயிலையும் சமாதியையும் நாடார் சமுதாய மக்கள் பார்வையிட்டனர். “நாடார் டுடே” சார்பில் அனந்தனின் ஒன்பதாவது வாரிசு குமரிக்கவிஞர்.க.பொ.வரதராசன், 11-ஆவது வாரிசு முருகப்பன், பேரா.முனைவர். ஆல்பென்ஸ் நதானியேல், பேரா.முனைவர்.சா.குமரேசன் ஆகியோரிடம் சிறப்புப் பேட்டி எடுக்கப்பட்டு நாடார் டுடே இணையதளத்திலுள்ள வெப்.டி.வியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர், பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையை திரு.அனந்தபால மகராஜா (12-ஆம் வாரிசு) ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய ஆர்வத்தையும் இந்த வீரவணக்க நாளிற்காக இவர் செய்த பணிகளையும் மக்கள் பாராட்டினர். வீரவணக்க நாளில் அனந்தனின் பெண் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டது பார்வையாளர்களை நெகிழ வைத்தது. பொதுக்கூட்டத்தை நாடாமார் எண்ணிலடங்கா கூட்டமாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். அதில் தனபாலன் அண்ணாச்சி பேசும் போது, “அனந்த பத்மநாபன் நாடாருக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் வாரிசுகளுக்கு அரசுவேலை வழங்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “அனந்த பத்மநாபன் நாடாரின் வாரிசான மாயகொண்டப்பெருமாளைக் கொன்று அவர் நிலத்தைக் கைப்பற்றி அதில் வீடு கட்டியவனும் 3000 நாடார்களைப் படுகொலை செய்தவனும் ஆன மலையாளக் கொடுங்கோலன் வேலுத்தம்பி நாயருக்கு தலக்குளத்தில் மலையாளிகள் நினைவு மண்டபம் அமைத்தது தவறு என்றும் நாடார்களின் இரத்தத்தின் மேல் கட்டப்பட்ட அம்மண்டபத்தை தமிழ் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மண்ணடியிலிருந்து தலக்குளத்திற்கு விடப்பட்ட மலையாளப் பேருந்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்பதையும் வலியுறுத்தினார். தமிழ்நாடு கிராமணி குல முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திரு.த.கல்பாக்கம் மோகன் பேசும் போது, “அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் வரலாற்றைச் சாதிக் காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து ஆய்வுக்களஞ்சியம் மாத இதழில் அவதூறாக எழுதி வரும் மலையாள வெள்ளாள வெறியன் டாக்டர்.எஸ்.பத்மநாபனைக் கண்டித்து மிகவிரைவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அதற்கானத் தேதியை தனபாலன் அண்ணாச்சி அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

காமராஜர்-ஆதித்தனார் கழகத் தலைவர் திரு.எஸ்.எஸ்.எஸ்.சிங் நாடார் அவர்கள் பேசும் போது, “நாடாமார் ஒற்றுமையாகப் போராடி குலத்தின் பெருமையைக் காக்க வேண்டும் என்றும் இந்து நாடார், ஆர்.சி.நாடார், சி.எஸ்.ஐ. நாடார் என்றும் தம்மில் பேதம் கொள்வது குலத்திற்கே அவமானம்” என்பதையும் வெளிப்படுத்தினார். “நாயர்களும் வெள்ளாளர்களும் ஒற்றுமையாக இருந்து பெண் கொடுத்து எடுத்து ஒற்றுமையாக இருப்பது போல நாடார்களும் தம்மில் வேறுபாடு கொள்ளாமல் ஒற்றுikaமையாக இருக்க வேண்டும்“ என்பதையும் வலியுறுத்தினார். சிம்மப்பேரவையின் தலைவர்.இராவணன் மசாலா திரு.இராமசாமி நாடார் அவர்கள் பேசும் போது, “அனந்த பத்மநாபன் வாழ்ந்த இடத்தில் நிற்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்றும் அவருக்கு உரிய மரியாதைகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்” என்பதையும் வலியுறுத்தினார். சிம்மப்பேரவையின் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொடியுடன் இந்த வீரவணக்கத்தில் கலந்து கொண்டதை நாடார் மக்கள் மிகவும் பாராட்டி வியந்தனர். இராமசாமி அவர்களுக்கு, திரு.வி.மகாராஜா வாரிசு அவர்கள் பொன்னாடை போரத்தி நன்றி செலுத்தினார். இந்தக் கூட்டத்தில், பேராசிரியர் முனைவர் சா.குமரேசன் எழுதிய “நாடார் குல மும்மணிகள் (பொறையார், சவுந்திர பாண்டியனார், நேசமணியார்)” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

காமராஜர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் திரு.ஜேம்ஸ் ராஜ் நாடார் அவர்கள் பேசும் போது, “வர்மா என்ற பெயர் நம்பூதிரிகள் இடையில் சொருகி ஆரியமயமாக்கியதையும் மார்த்தாண்டன் என்பதே இயற்பெயர் என்பதையும் அவர் ஒரு தமிழர், தமிழ்மொழியைப் பாதுகாத்தவர், நாடார் சமுதாயத்தவர்” என்பதையும் விளக்கிக் கூறினார்.

பெ.த.ம.கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் ஏஞ்சலின் ஜெமி பேசும் போது, அனந்த பத்மநாபன் நாடார் மலையாள மொழியின் ஆதிக்கத்தைத் தமிழ் மண்ணில் பரவ விடாமல் தமிழ் அரசர் மார்த்தாண்டனை தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியான வேணாடு என்னும் குறுநிலப்பகுதிக்கு அரசனாக்கி தமிழ்மொழியைக் காப்பாற்றினார்” என்ற வரலாற்று உண்மையை விளக்கினார். கூட்டத்தின் முடிவில், “வீரத்தளபதி அனந்த பத்மநாபன் நாடாருக்கு விரவணக்கம்” என்னும் சத்தம் விண்ணைப் பிளந்தது. இக்கூட்டத்தில், திரு.தெய்வேந்திரன் நாடார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rkjo&oldid=1658421" இலிருந்து மீள்விக்கப்பட்டது