உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:RamanathanDDadmin

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                 How to achieve Target

1) வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும்; இலக்கை நோக்கி பயணிக்கின்ற பொழுது ஏற்படும் தவறுகளை அடையாளம் கண்டு திருத்திக் கொண்டு இலக்கு நோக்கித் திரும்ப வந்து விட வேண்டும். 2) மன உளைச்சலை ஏற்படுத்தும் பிரச்சனை என்ன? பிரச்சனைக்குச் சரியான காரணம் என்ன? பிரச்சனைக்குச் சாத்தியமான தீர்வுகள் என்னென்ன? எந்த தீர்வை நடைமுறைப் படுத்துவது? அந்தத் தீர்வு தொடர்பான செயல்கள் என்னென்ன? அவற்றைச் செய்திட வேண்டும். 3) கிடைத்திருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதைப்போல மன ஆரோக்கியத்தை ஏற்படுத்துவது எதுவும் இல்லை. 4) சிறு சிறு மன உறுத்தல்களே வாழ்க்கையில் மகிழ்ச்சியை குறைக்கின்றன. மகிழ்ச்சி அளிக்காத மன உறுத்தலை அலட்சியப்படுத்துங்கள். எது உங்களுக்கு மன உறுத்தலைக் கொடுக்கிறதோ அதற்குச் சம்பந்தம் இல்லாத எண்ணங்களிலும், நடவடிக்கைகளிலும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். 5) உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளிலிருந்தும், கவலைகளிலிருந்தும், சுமைகளிலிருந்தும் நீங்கள் விடுபடுங்கள். 6) பிறரிடம் பழகும்போது அவரை முக்கியமானவராக நடத்துங்கள்; பாராட்டுவதாகச் சொல்லுங்கள்; புகழுங்கள். 7) உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அடிப்படைத் தேவைகளை மட்டும் தேவைகளாக எண்ணி, அவை கிடைத்தமைக்கு மகிழுங்கள். 8) பிறர் நம்மைக் காட்டிலும் வித்தியாசமாகவோ, வேறுபட்டோ இருப்பின் அவர்களை நாம் வெறுக்க வேண்டியதில்லை. அவர்களிடம் உள்ள ஒற்றுமைப் பகுதிகளை மட்டுமே தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வேற்றுமைகளைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும். 9) நாம் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு அல்லது செயல்பட்டு தொல்லைகளில் அகப்பட்டுக்கொள்ள நாமேதான் காரணம். 10) உங்களின் வயோதிகப்பருவத்திற்காகப் பணத்தை சேமிப்பதுடன் இனிமையான நினைவுகளையும் சேமிக்கவேண்டும். 11) உயர்ந்த இடத்தைப் பெற்ற அனைவருமே தொடர்ந்த முயற்சியாலும் மன உறுதியாலுமே அந்த இடத்திற்கு வந்தார்கள். 12) பேசுவதன் மூலமாகவும், கவனித்துக் கேட்பதன் மூலமாகவும் அன்றாட வாழ்க்கையின் இறுக்கங்களிலிருந்து விடுபடலாம். 13) எதை நினைத்தாலும், எதை நம்பினாலும் அதைச் சாதிக்க முடியும், தயக்கமோ அச்சமோ இன்றி வேலையைத் தொடங்கிவிட்டால், செய்வதற்குத் தேவையான சக்தி தானாகவே கிடைத்துவிடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RamanathanDDadmin&oldid=751167" இலிருந்து மீள்விக்கப்பட்டது