பயனர்:Pu sivakumar biochem/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கைதி விமர்சனம்[தொகு]

சினிமா வகை: திரில்லர்  & ஆக்சன்

 

கார்த்தி டெல்லி என்கிற ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். நரேன் தலைமையிலான போலீஸ் குழு பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறது. அதை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வைக்கிறார்கள். போதைப் பொருள் விவகாரத்தில் காயம் அடைந்த நரேன் பரோலில் வெளியே வரும் டெல்லியிடம் உதவி கேட்கிறார்.

இது குறித்து அறிந்த போதைப் பொருள் கும்பல் அங்கு வந்து பணியில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும் மயக்க மருந்து கொடுக்கிறது.

   பிறந்ததில் இருந்து பார்க்காத தனது மகளை பார்க்க கிளம்பிய டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி உதவி செய்கிறார், வில்லன்களை எப்படி எதிர்கொள்கிறார், மகளை எப்படி சந்திக்கிறார் என்பது தான் கதை.

   மொத்த படமும் இரவுப் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதை அந்த எஃபெக்டோடு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

       படத்திற்கு பின்னணி இசை பெரிய பிளஸ். அப்பா, மகள் சென்டிமென்ட் கார்த்திக்கு மீண்டும் கை கொடுத்துள்ளது.