உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:PrasannaM30071985/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பியாற்றுப் பள்ளத்தாக்குத் தொல்லியல், திருநெல்வேலி மாவட்டம்

மோ.பிரசன்னா

தொல்பொருள் ஆய்வாளர்

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை

நம்பியாறு, தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் பாயும் 45 கிலோமீட்டர் நீளமுடைய ஓர் சிறு ஆறு. இவ்வாற்றங்கரையில் தொல்லியல் பண்பாட்டு நாகரிங்களின் அடையாளமாக தற்பொழுது இரும்புக்கால முதல் வரலாற்றுக்காலம் வரையிலான பண்பாட்டுக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன

குமாராப்புதுக்குடியிருப்பு.

வள்ளியூர் என்னும் கிராமத்தின் அருகே கோட்டையடி என்ற பகுதியிலிருந்து சித்தூர் செல்லும் பாதையில் 2 கி.மீட்டர் தொலைவில் இவ்வூரானது அமைந்துள்ளது. இவ்வூரின் மேற்குபகுதியில் இரும்புக்கால வாழ்விடப்பகுதியும் அதற்குச்சான்றாக கருப்பு சிவப்பு, சிவப்பு நிற பானையோடுகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. மேலும் இவ்வூரின் மேற்கு பகுதியில் காணப்படுகின்ற மூன்றுயுகம் கண்ட அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அம்மச்சி குளத்தின் அருகே இருப்பகுதியிலும் வரலாற்று இடைக்காலத்தைச் சார்ந்த உறைக்கிணறு தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரின் தெற்குப்பகுதியில் உள்ள பண்டாரகுளம் என்றழைக்கப்படும் குளத்தில் பல செம்பு நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை இப்பகுதியில் கள்ளக்காசு என்றழைக்கப்படுகிறது.

துலுக்கர்பட்டி

வள்ளியூர் என்னும் கிராமத்தின் அருகே கோட்டையடி என்ற பகுதியிலிருந்து சித்தூர் செல்லும் பாதையில் ஆனைகுளம் என்கிற கிராமத்தின் வடக்கே 2 கி.மீட்டர் தொலைவில் இவ்வூரானது அமைந்துள்ளது. இவ்வூரின் முக்கியத்துவமானது இரும்புக்கால வாழ்விடப்பகுதியின் எச்சங்கள் நம்பியாற்றிங்கரையிலே அமைந்துள்ளது. இவ்வாழ்விடப்பகுதியானது 12 ஹெக்டர் பரப்புளவில் அமைந்துள்ளது அப்பகுதியானது உள்ளூர் மக்களால் விளாங்காடு என அழைக்கப்படுகின்றது. அவற்றில் கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, குறியீடுகளுடன் கூடிய பானையோடுகள், வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு பானையோடுகள் மிகுந்த அளவில் பரவிக்காணப்படுகின்றன.

தளபதிசமுத்திரம் மேலூர்

நான்குனேரியில் இருந்து 12கி.மீட்டர் தொலைவில் திருநெல்வேலி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரானது தற்பொழுது அதிக அளவில் வீடுகள் நிறைந்து காணப்பட்டாலும் இரும்புக்கால வாழ்விடப்பகுதியின் எச்சங்களான கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு பானையோடுகள் அதிக அளவில் பரவிக்காணப்படுகின்றன. மேலும் இவ்வூரின் 2 கி.மீட்டர் தொலைவில் வடக்கே பெருவேம்புடையார் சாஸ்தா கோவில், சாஸ்தாபுரம் அருகே பரந்தளவில் காணப்படும் இரும்புக்கால புதைவிடப்பகுதியின் வாழ்விடப்பகுதியாக இத்தளபதிசமுத்திரம் மேலூர் இருந்திருக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PrasannaM30071985/மணல்தொட்டி&oldid=2969839" இலிருந்து மீள்விக்கப்பட்டது