பயனர்:Poojakumari R/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைசாலி இரமேசுபாபு கட்டுரை உள்ளது

ஆர். வைஷாலி

வைஷாலி ஓர் இந்திய சதுரங்க ஆட்ட வீராங்கனை மற்றும் இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆவார். இவர் இந்திய தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் 14 வயதிற்குட்பட்ட உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்நானந்தாவின் மூத்த சகோதரி ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, இந்தியாவில் உள்ள சென்னையில் பிறந்தார். ஆறு வயதிலேயே தாய் தந்தையார் மூலம் தொலைக்காட்சி காணும் பழக்கத்தை விடுவிக்க அழகிய ஓவியங்கள் வரைவதிலும், செஸ் விளையாடுவதிலும் ஈடுபடுத்த பட்டார் வைஷாலி[1]. அவர்களுடைய இந்த மூலோபாயம் வேலை செய்தது. சதுரங்க விளையாட்டில் தற்செயலாக இணைந்த வைஷாலி இந்த விளையாட்டை ரசிப்பது மட்டுமல்லாமல் அதில் தன்னுடைய சிறப்புத் திறமையையும் வெளிகாட்டினார். சிறப்பாக விளையாடும் தம்பியுடன் அதிகம் செஸ் விளையாடி வீட்டில் பயிற்சி செய்தது அவருடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவியது.

2012ஆம் ஆண்டு நடந்த 11 வயதிற்குட்பட்ட தேசிய பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் வைஷாலி. அவருடைய இந்த வெற்றி அவரை உலக யூத் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உதவியது.

இருப்பினும் சதுரங்க விளையாட்டை ஒரு விலை உயர்ந்த விளையாட்டாகவே அவருடைய குடும்பம் ஆரம்பத்தில் கண்டது. முறையாக கற்றுக்கொள்ள தன்னிடம் சதுரங்க மென்பொருள் கொண்ட கணினியோ அல்லது மடிக்கணினியோ இருக்கவில்லை என்று கூறும் வைஷாலி, ஆரம்பத்தில் தன் விளையாட்டை மேம்படுத்த சதுரங்கம் பற்றிய புத்தகங்களையே நம்பி இருந்ததாக தெரிவிக்கிறார். இது தவிர, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளுக்கு ஈடு செய்வது அவருடைய குடும்பத்திற்கு ஒரு போராட்டமாகவே இருந்தது[2].

எண்ணற்ற சவால்களை கடந்து, 2012ஆம் ஆண்டு ஸ்லோவெனியாவில் நடந்த 12 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். இது அவருக்கு பல வெற்றியை நோக்கிய கதவுகளை திறக்க செய்தது. அதன் பிறகு அவர் இந்திய பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இதுவரை விளையாட்டில் தான் கடந்து வந்த வெற்றிகரமான பாதைக்கு தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரரே காரணம் என்று வைஷாலி கூறுகிறார்.[1].

தொழில்முறை சாதனைகள்[தொகு]

வைஷாலி 2012ஆம் ஆண்டு நடந்த 11 வயதிற்குட்பட்ட தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் ,13 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் 12 வயதிற்குட்பட்ட உலக பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 2014 ஆம் ஆண்டு நடந்த 15 வயதிற்குட்பட்ட தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்[2]. இவர் தொடர்ந்து 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய பெண்கள் ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அவருடைய இந்த வெற்றிகள் அவரை ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக போட்டியிட வாயப்பு அளித்தது[2]. 2015ஆம் ஆண்டு க்ரீஸில் நடந்த 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 2020 ஆம் ஆண்டில் வைஷாலி, முன்னாள் உலக சாம்பியன் ஆண்டைநிடா ஸ்டிஃபேநோவாவை FIDE CHESS.COMஇல் நடந்த ஆன்லைன் போட்டியில் தோற்கடித்தார். [3].

2017ஆம் ஆண்டு ஒற்றையர் ஆசிய பிளிட்ஸ் சதுரங்கப் போட்டியில் வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டு அவர் இந்தியப்பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். FIDE ஆன்லைன் சதுரங்க ஒலிம்பியாட் 2020இல் ரஷ்யாவுடனான போட்டியில் கூட்டுப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக வைஷாலி இருந்தார்[2].


வலது புற தகவல் பெட்டி

முழுப்பெயர்: ஆர். வைஷாலி

பிறப்பு: 21 ஜூன் 2001

பிறந்த இடம்: சென்னை, இந்தியா

குடியுரிமை: இந்தியா

விளையாட்டு: சதுரங்கம்

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்

பதக்கங்கள்

2012ஆம் ஆண்டு 11வயதிற்குட்பட்ட தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம்

2012ஆம் ஆண்டு 13 வயதிற்குட்பட்டோர் பெண்களுக்கான தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம்

2017ஆம் ஆண்டு ஆசிய ஒற்றையர் பிளிட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம்

2014ஆம் ஆண்டு 15 வயதிற்குட்பட்டோர் பெண்களுக்கான தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம்

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கான தேசிய ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம்.

சான்றாதாரங்கள்

1. https://www.bbc.com/tamil/sport-55813534

2.https://www.outlookindia.com/website/story/sports-news-indian-grandmaster-r-vaishali-defeats-former-world-chess-champion-antaoneta-stefanova/355391

3.https://sportstar.thehindu.com/chess/speed-chess-vaishali-online-praggnanandhaa-ushenina/article31957444.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Poojakumari_R/மணல்தொட்டி&oldid=3107629" இலிருந்து மீள்விக்கப்பட்டது