உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:PALAIYUR SRI MAHALAKSHMI

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினமும் மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் மனதில் சுத்த சத்வ எண்ணங்களும், பேச்சில் இனிமையும், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்'

- என்ற இந்த மந்திரத்தை மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீபமேற்றி வைத்து, நைவேத்தியம் சமர்ப்பித்து 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும். வில்வ தளங்கள் கொண்டு மகாலட்சுமியின் திருவுருவை அலங்கரிப்பதும், கஸ்தூரி, அத்தர், ஜவ்வாது, சந்தனம் முதலான வாசனை திரவியங்களால் மகாலட்சுமியின் திருவுருவுக்குப் பொட்டிடுவதும்,

நல்ல சந்தன மணமிக்க ஊதுபத்திகளை பொருத்தி வைப்பதும் மிக நல்ல தேவதா அலையீர்ப்பு மண்டலத்தை அமைத்து வைக்கும். அன்றுமுதல் தினமும் காலையிலும், அந்தி மாலையிலும் 108 முறை ஜபம் செய்வது அவசியம். ஜபத்தை 90 நாட்கள் விடாமல் செய்வதும் முக்கியம்.

பூஜை நாட்களில் அசைவம் தவிர்ப்பதும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் திரி கரண சுத்தியும் மிகவும் முக்கியமாகும். அவையின்றி இம்மந்திரம் சித்தியாகாது.

அதாவது மனதில் சுத்த சத்வ எண்ணங்களும், பேச்சில் இனிமையும், உண்மையும் வெளிப்படும்படியாகவும், எப்போதும் சுத்தமாகவும், வாசனைகளுடனும் கூடிய ஆடைகளை அணிந்தும், சொல்வாக்கு தவறாமலும் இருப்பவருக்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும், செல்வ வளம் கூடும்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1

வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2

கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி

ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி

யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5

முதலும்  முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே

மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி

பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7

பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான  அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர

ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்

த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித

திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

பாலையூர் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

கலைநயம் மிகுந்த கட்டிடங்கள்; நாவிற்கினிய அறுசுவை; அறம் வளர்த்த ஆன்மீக பெரியவர்கள்; முத்திரை பதித்த தொழிலதிபர்கள்; அறிவு கண் திறக்கும் கல்வி கூடங்கள் என்று திக்கெட்டும் புகழ் பரப்பும் செட்டிநாட்டு மண்ணில், பாலையூர் என்ற ஸ்தலத்தில், பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனின் இதயத்தில் குடி அமர்ந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கென்றே பிரத்யேக கோவில் அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி செல்லும் பேருந்து மார்க்கத்தில் 10 கி.மி தொலைவில் உள்ள பாலையூர் என்ற ஊரில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்கள், காலம் சென்ற காஞ்சி பெரியவர்கள் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் அறிவுரைப்படி இந்த ஊரின் நடுவில் உள்ள ஊரணி கரையோரம் ஸ்ரீ மகாலட்சுமியை மூலவராக பிரதிஷ்டை செய்து இவ்வாலயத்தை 2000ம் வருடம் நிர்மாணித்து இறையருளால் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இந்த ஸ்தலம் வளம் கொண்டு விளங்குகிறது.

ஆலயத்தின் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அருள் சுரக்கும் விழிகளால் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கி வருகிறாள். ”சந்திர பிறை பூங் கண்ணி! சற்று நீ திரும்பி பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்” என்று ஆதி சங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்ரத்தை ஏற்று அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை பொழிய விட்ட கருணையின் வடிவமல்லவா இந்த தாயார்! திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, கடன் நிவர்த்தி என்று பல்வேறு பாக்கியங்களை அருளி இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தை வழங்கும் இந்த அலைமகளின் ஆலயத்தில் அன்றாட வழிபாடுகளுடன் விசேஷ அபிஷேகங்களும் நடைபெறுகிறது.

ஆலய முகவரி அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில்

பாலையூர், கண்டனூர 630 104 சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அலைபேசி 9677922622.

பயணிக்கும் வழி காரைக்குடி - அறந்தாங்கி பேருந்து

மார்க்கத்தில் 10வது கி.மி தொலைவில் உள்ள பாலையூர் பணிக்கர் ஹோட்டல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வரவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PALAIYUR_SRI_MAHALAKSHMI&oldid=2549242" இலிருந்து மீள்விக்கப்பட்டது