உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Nandhinimohan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழறிஞர் முனைவர் Dr .சங்கரசரவணன்[தொகு]

முனைவர் சங்கர சரவணன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

முனைவர்
Dr .சங்கரசரவணன்
பிறப்புதிருநெல்வேலி மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா
தேசியம்இந்தியா(INDIA)
குறிப்பிடத்தக்க படைப்புகள்அவர் எழுதிய நூல்களின் பட்டியல்.jpg
வாழ்க்கைத்
துணை
திருமதி.உஷா
பிள்ளைகள்மகன்.சிவசங்கரன்
Thendral,july 2021 edition
Notes
தாய் - திருமதி.டி .ஆர் .லக்ஷ்மி தந்தை - திரு.டி .ஆர் .சங்கரன்

கல்வி [1][தொகு]

      நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவத்தில் 1998-ல் இளநிலை பட்டம் பெற்றவர்.   
     அதே ஆண்டில் முதுநிலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம்  (ICAR ) நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்று உத்திர பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ கழகத்தில்  (IVRI ) கால்நடை உணவியலில் முதுநிலை பட்டப் படிப்புக்கு தேர்வாகி 2000-ல் முதுநிலை பட்டம் பெற்றார்.

புகைப் படங்கள்[தொகு]

முன்னாள் முதல்வர் கலைஞர் குடும்பத்துடனும்  மற்றும்  இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்பத்துடனும் சந்தித்து எடுத்து கொண்ட படங்கள் 

பணி[தொகு]

      பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ் நாடு அரசின் கால்நடைத் துறையில்  ஆராய்ச்சி பணி ஆற்றியவர். கால்நடை உயிரி தொழில்நுட்பவியலில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில்  இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். புதிய பாடநூல்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.

இதர கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பணிகள்[தொகு]

      இந்திய குடிமைப் பணி பயிற்றுநராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக சேவை ஆற்றி வருகிறார். ஐஏஎஸ் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று இன்று சிறந்த அதிகாரிகளாகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆனந்த குமார் IAS, டாக்டர் வி. பி. ஜெயசீலன் IAS, திரு மதுபாலன் IAS  நமது மதுரை மாவட்டத்தின் தற்போதைய கூடுதல் ஆட்சியர் திரு S.சரவணன் ஐஏஎஸ் போன்றோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
      தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களுள் ஒருவரான இவர் மாணவர்களுக்கு வழிகாட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
       இந்தியா கையேடு, இந்திய வரலாறும் பண்பாடும், பொதுத்தமிழ் களஞ்சியம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுக் களஞ்சியம்,போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம், கையளவு களஞ்சியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். 

சாதனைகள்[தொகு]

      கையளவு களஞ்சியம் 24 பதிப்புகளைக் கண்ட ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. டி.என்.பி.எஸ்சி. குரூப் 1, 2  தேர்வுகளில் பலர் வெற்றிபெற காரணமாக வைத்திருக்கிறார்.
       
        கடைக்கோடியில் இருக்கும் வழிகாட்டல் இன்றி தவிக்கும் எண்ணற்ற மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி தேர்வுக்கு எவ்வாறெல்லாம் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமது பல வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மூலமாக ஆலோசனைகளையும், புத்துணர்ச்சியையும் மாணவர்களுக்கு  வழங்குவதில் வல்லவர்.
       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களின் "நம்பிக்கை நட்சத்திரம்".
      
        #1995 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாணவர்களுக்கான "தமிழால் முடியும்" என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை மாண்புமிகு முதலமைச்சர் கைகளால் பெற்று அப்போது தாம் பயின்ற கால்நடை மருத்துவ கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பது தமிழர் மேன்மை பற்றி பேசும்போது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 
      
         #எண்ணிலடங்கா பொதுஅறிவு நிகழ்ச்சிகளை வானொலி,கல்லூரி,பள்ளிகளில் நிகழ்த்தியிருக்கிறார். 
      
          #விகடன் பிரசுரத்தின் மூலமாக தனது 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 
     
          #விகடன் பிரசுரம் தனது வருட ஆண்டு மலரை இவரின் ஆலோசனையின் பெயரில், இவர்தம் தலைமையில் ஆண்டுதோறும் வெளியிட்டு பெருமைப்படுத்தி வருகிறது.
   
  

பெற்ற பாராட்டுகள்[தொகு]

மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் டாக்டர் சங்கர சரவணனைப் பாராட்டும் போது, "சங்கர சரவணன் மட்டும் தான் படிக்கிற காலத்தில் பயிற்றுநராக  இருந்திருந்தால் இந்தியாவிலேயே முதல் ரேங்க் வாங்கி இருப்பேன்" என்று குறிப்பிட்டு பாராட்டி இருப்பது இவருக்கு கிடைத்த பாராட்டுகளில் மணிமகுடம் எனலாம்.
      இவர் ஐஏஎஸ் ஆளுமைத்தேர்வுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பான  வழிகாட்டுதலை வழங்கிவருவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார். 
       திரு உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த போது புதிய சமச்சீர் பாடநூல்கள் உருவாக்கத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து அவரிடம் நற் சான்றிதழ் பெற்றவர்.
      கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பாடநூல் கழகத்தின் அரங்கை அதிகமான புத்தக ஆர்வலர்களை கவர்ந்து இழுக்கும் அரங்காக மாற்றியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

அருகில் உள்ள படங்கள் அவரின் புகழ் பேசும்

  1. "LAS VEGAS SANDS CORP., a Nevada. corporation, Plaintiff, v. UKNOWN REGISTRANTS OF www.wn0000.com, www.wn1111.com, www.wn2222.com, www.wn3333.com, www.wn4444.com, www.wn5555.com, www.wn6666.com, www.wn7777.com, www.wn8888.com, www.wn9999.com, www.112211.com, www.4456888.com, www.4489888.com, www.001148.com, and www.2289888.com, Defendants.". Gaming Law Review and Economics 20 (10): 859–868. 2016-12. doi:10.1089/glre.2016.201011. பன்னாட்டுத் தர தொடர் எண்:1097-5349. http://dx.doi.org/10.1089/glre.2016.201011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nandhinimohan/மணல்தொட்டி&oldid=3658727" இலிருந்து மீள்விக்கப்பட்டது