பயனர்:M.SIVASUBRAMANIAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் மாவட்டம் நிர்வாக அமைப்பு[தொகு] கரூர் ஊராட்சி ஒன்றியம், வாங்கல் குப்புசிபாளையம் ஊராட்சி. 13 வார்டுகளை உள்ளடக்கியது. வாங்கல் மற்றும் குப்புசிபாளையம் என இரண்டு கிராம நிர்வாக அலுவலம் உள்ளது.நன்செய் பகுதி வாங்கல் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும்,புன்செய் பகுதி குப்புசிபாளையம் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

குக்கிராமங்கள்[தொகு] கு.வேலாயுதம் பாளையம், காட்டூர்,சீனிவாசபுரம்,நல்லகுமரன்பாளையம்,பசுபதிபாளையம்,மாரிகவுண்டன்பாளையம்,கோப்பம் பாளையம்,சக்கரபாளையம்,தவிட்டுபாளையம்,ஒடையூர்,கருப்பம்பாளையம்

எல்லைகள்[தொகு] மேற்கே மண்மங்கலம் மற்றும் நன்னியூர் ஊராட்சிகள் ,கிழக்கே நெரூர் வடக்கு ஊராட்சி, வடக்கே நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருராட்சி,தெற்கே மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி மற்றும் மண்மங்கலம் ஊராட்சிகள்.

மக்கள் தொகை[தொகு] வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்ச்சி மன்றத்தின் 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 9100 ஆகும்.

பள்ளிகள்[தொகு] இங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் முன்னாள் காவல்துறை ஆணையர் திரு.காளிமுத்து ஐ.பி.எஸ் இப் பள்ளியில் பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர். இது தவிர ஆறு தொடக்கப் பள்ளிகளும் கரூர் ஊராட்சி ஒன்றியக் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

இவற்றுடன் தனியாரால் நடத்தப்படும் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் இயங்கி வருகிறது.

முக்கிய கோவில்கள்[தொகு] மாரியம்மன் திருக்கோவில் வாங்கலில் அமைந்துள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருநாள் அனைத்து சமுதாய மக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.


முக்கிய தொழில்[தொகு] காவிரி ஆறு பாய்வதால் இக் கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பணப்பயிர்களான கரும்பு, வாழை முக்கிய விவசாயங்களாகும். நெல், வெற்றிலை, கோரை, தென்னை சாகுபடி ஆகியவற்றில் வாங்கல் பகுதி சிறந்து விளங்குகிறது.

நீர்ப்பாசனங்கள்[தொகு] காவிரி ஆறு, வாங்கல் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால் மற்றும் நெரூர் வாய்க்கால் முக்கிய பாசனமாகும், மற்ற விவசாயம் சார்ந்த தொழில்களான பால் உற்பத்தியில் வாங்கல் சிறந்து விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் ஆவின் மற்றும் தனியார் பண்ணைகளுக்கு அனுப்பப்படுகிறது.

வங்கிகள்[தொகு] இந்தியாவின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக் கிளை வாங்கல் கரூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து தனி நபர் மற்றும் விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்கி உள்ளனர்.

பல்லவன் கிராம வங்கி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:M.SIVASUBRAMANIAN/மணல்தொட்டி&oldid=1944612" இலிருந்து மீள்விக்கப்பட்டது