பயனர்:Jothi Lenin R/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

= புலவர் ஆதி என்னும் புலவர் சி.இராசியண்ணன் == <gallery> எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1

புலவர் ஆதி என்னும் புனை பெயர் கொண்ட சி.இரசியண்ணன் 1934 ஆம் ஆண்டு, அன்றய கோவை மாவட்டமாயிருந்த இன்றைய திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் தாலுக்காவில் உள்ள சாமளாபுரம்கிராமம் கருகம்பாளையத்தில் திரு.சின்னைய கவுண்டர் – திருமதி.கருப்பாத்தாள் இணையருக்கு மகனாக பிறந்தவர். அவர் தொடக்க கல்வியை அவரூருக்கு அருகில் உள்ள ஆர்.சி.தொடக்கப்பள்ளியிலும் நடுநிலைக் கல்வியை சோமனூருக்கு பக்கத்திலுள்ள கருமத்தம்பட்டி ஆர்.சி.உயர் தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைக்கல்வியை கோவையிலுள்ள தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிக்கல்வியை பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் தமிழ்க்கல்லூரியிலும் கற்று வித்வான் பட்டம் பெற்றார் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர்.

1960-ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு முடிய கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். தொடக்க காலத்தில் சமயப்பற்றாளராக இருந்தவர் படிப்படியாகத் தந்தை பெரியார் கொள்கைக்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் மாறியவர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் வாயிலாக இலக்கியப் பேச்சாளராக முகிழ்த்தவர்.

1957-வாக்கில் கோவையிலிருந்து வெளிவந்த “அருள்முரசு” என்ற திங்களிதழில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “ஆனந்த போதினி”, “பிரசண்ட விகடன்” திங்களிதழ்களில் கவிதைகள் யாத்தவர். கோவையிலிருந்து நாளிதழாக வெளிவந்த “நவ இந்தியா” பத்திரிக்கையிலும் கவியரசு கண்ணதாசன் நடத்தி வந்த “தென்றல்” வார இதழிலும் திங்களிதழிலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். பொதுவுடைமை இயக்கத்தார் நடத்தி வந்த சமரன், ஜனசக்தி, கல்பனா, செங்கொடி, புரட்சிகனல், புரட்சிப்புயல் போன்ற இதழ்களிலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர்.

1967-வாக்கில் கோவையிலிருந்து வெளிவந்த “புதிய தலைமுறை” என்ற திங்களிதழில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியவர். 1960-வாக்கில் “சிந்தனை மன்றம்” என்ற ஓரமைப்பைத் தொடங்கி வாராவாரம் இலக்கிய கூட்டங்களை நடத்திவந்தவர். சிந்தனை மன்றத்தின் வாயிலாக மார்க்சியதை கற்றறிந்தவர். முற்போக்கு பார்வை கொண்ட இவர் “கீழைக்காற்று” என்ற கவிதை நூலினையும் “தமிழில்-இயங்கியல்-ஒரு பார்வை” என்ற ஆய்வு நூலினையும் படைத்தவர். திருக்குறளுக்கு எளிய உரையினையும் எழுதி வெளியிட்டுள்ளார். “பேரூர் புலவர் பேரவை” என்ற அமைப்பின் வாயிலாக புலவர் கி.ஆ.குப்புராசு அவர்களின் துணையோடு, கோவை கிழார் சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் எழுதிய

  1. கொங்கு நாட்டு வரலாறு
  2. கொங்கு நாடும் சமணமும்
  3. காட்டெருமைகள்
  4. வீட்டெலிகள்
  5. கோயில் பூனைகள்
  6. இதுவோ எங்கள் கோவை
  7. எங்கள் நாட்டுப்புறம் போன்ற இருபத்திரண்டு நூல்களுக்கு மேல் பதிப்பித்தவர்.

தமிழ்நாடு கலை இலக்கிய பேரவை என்ற இலக்கிய அமைப்பை இருபதாண்டுகளுக்கு மேல் நடத்தி வருபவர். மாதாமதம் ஒரு மாதமும் தவறாமல் 264 கூட்டங்களை இற்றைநாள் வரையிலும் நடத்தி வந்தவர்.

தமிழ்நாடு கலை இலக்கிய பேரவையில் காந்திய மெய்யியலும் பேசலாம் மார்க்சின் தத்துவமும் பேசலாம், சைவ சித்தாந்தமும் பேசலாம், சமணக்கொள்கைகளும் பேசலாம் ஆதிசங்கரரின் அத்வைதமும் பேசலாம் மத்துவரின் துவைதமும் பேசலாம் இராமானுசரின் விசிஷ்டாத்வைதமும் இங்கல்சாலின் நாத்திகமும் பேசலாம் இஸ்லாத்தின் மெய்யியலையும் கிறித்துவத்தின் தத்துவத்தையும் பேசலாம் எல்லா வகையான கொள்கைகளையும் தமிழ்நாடு கலை இலக்கிய பேரவையில் பேசலாம். இத்தகைய முறையில் தமிழ்நாடு கலை இலக்கிய பேரவையை இயக்கி வந்தார்.

2014 -ம் வருடம் ஆகத்து மாதம் 24 -ம் தேதி தனது 81-வது அகவையில் தமிழ் இலக்கியப் பணிக்கும் மார்க்சிய சிந்தனைக்கும் விடைகொடுத்து இயற்கை எய்தினார். அவருக்கு இலக்குமி என்ற மனைவியும் தமிழ்ச்செல்வி என்ற மகளும் சோதி லெனின் என்ற மகனும் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jothi_Lenin_R/மணல்தொட்டி&oldid=1802673" இலிருந்து மீள்விக்கப்பட்டது