உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jenitha Ashok Matthew

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்துப் பெண் எழுத்தாளர் " ஜெனிஅசோக் "

திருமதி ஜெனிதா அசோக் மத்தியு ஆகியவர் J/257 கிராம சேவகர் பிரிவின்கீழ், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யா/சென் ஜோண்ஸ் கல்லூரி முன்னாள் ஆசிரியருமாவார். கவிதை எழுதுவது இவரது சிறந்த பொழுதுபோக்காகும். வெறும் ஆசிரியராகவே அறிமுகமானவர், தனது கணவர் அசோக் மத்தியு அவர்களின் ஊக்கத்தில் இன்று கவிஞரானார். பைந்தமிழ்ச்சோலையில், இவரது குருவான, மரபு மாமணி பாவலர் மா.வரதராசனின் மரபு கவிதை பயிலும் மாணவியுமாவார். இந்தியாவிலுள்ள ஆசான் கவினப்பன்னிடம் இலக்கணம் பயில்கின்றார். யாப்பிலக்கணம், பா இயற்றுதல் போன்ற பயிற்சிகளைப் பயின்று, தேர்வெழுதிப் பட்டமும் பெற்றுள்ளதால், சோலை மாணவி என்ற பெருமை கொள்கிறார்.

கவிதைத்துறையில் அனுபவம் `

`````````````````````````````````````````````````

1993ல் இருந்தே கவிதை எழுதத் தொடங்கினார்.

2000 ல் நடைபெற்ற வடக்கு-கிழக்கு மாகாணத் தமிழ் மொழித்தினக் கவிதைப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாகத் தேசிய மட்டப் போட்டியில் பங்களிக்கவில்லை.

கவியரங்குகளில் தலைமையேற்ற அனுபவங்களும் உண்டு.

இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலுள்ள முகநூல் கவிதைக் குழுமங்கள் பலவற்றில் அங்கத்தவராகவும், பல வெற்றிச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுமுள்ளார். இணையவழியாகக் கவியரங்கில் பங்கேற்றுமுள்ளார்.

பெற்ற விருதுகள்

`````````````````````````````

பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கவிதை எழுதுவதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. வேலையிலிருந்து விலகிய பின் மீண்டும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்றா். மரபுகவிதை எழுதப் படித்தார். வெண்பா, அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா, மருட்பா, பாவினங்கள்ந மற்றும் வண்ணப்பாக்கள் , சிந்து பாடல்கள் என பலவகையான மரபு கவிதை எழுதும் ஆற்றல் றொண்டவர். இதுவரை இலங்கையிலும் இந்தியாவிலும் பதக்கமும், விருதுகளும் கிடைத்துள்ளன.

கிடைத்த விருதுகள்...

01) கிராமத்துக்குயில் விருது 2018 (விரலோவியம் கவிதைக்குழு—இந்தியா)

02) இளம் பாரதி விருது 2018 (விரலோவியம் கவிதைக்குழு—இந்தியா)

03) வாலி விருது 2018 (விரலோவியம் கவிதைக்குழு—இந்தியா)

04) கவிமுகில் விருது 2018 (ஊலழள கவிதைகளின் சரணாலயம்—இந்தியா)

05) நிலாச்சுடர் விருது 2018 (நிலாமுற்றம் குழுமம்—இந்தியா)

06) மரபொளிர் விருது 2019 (நிலாமுற்றம் குழுமம் —இந்தியா)

07) அமுதச்சுடர் விருது 2018 (சென்னை முத்தமிழ்ச் சங்கம்—இந்தியா)

08) வைரக்கவி விருது 2019 (சென்னை முத்தமிழ்ச் சங்கம் —இந்தியா)

09) பொன்மகள் விருது 2019 (சென்னை முத்தமிழ்ச் சங்கம்—இந்தியா)

10) மரபொளிர் செம்மல் விருது 2018 (சென்னை முத்தமிழ்ச் சங்கம்—இந்தியா)

11) விரைகவிவாணர் விருது 2019 (பைந்தமிழ்ச் சோலை —இந்தியா)

12) பைந்தமிழ்ப்பாமணி விருது 2019 (பைந்தமிழ்ச் சோலை—இந்தியா)

13) கவிஇமயம் விருது 2018 (கவியுலகப் பூஞ்சோலை—இந்தியா)

14) எழுச்சிக் கவிச்சுடர் விருது 2019 (தமிழ்ச்சேவை கவிதைக் குழுமம்—இந்தியா)

15) பதக்கம் 2018 (நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம் —இலங்கை)

நிறைவேற்றிய செயற்றிறன்கள் `

````````````````````````````````````````````````````

முகநூல் வழியாக, குழுமங்களின் ஆதரவுடன் மரபுகவிதை கற்பிக்கிறார். போட்டியும் நடாத்துகிறார்.

   அமுதசுரபி அறக்கட்டளை(.இந்தியா)

   சென்னை முத்தமிழ்ச்சங்கம்(இந்தியா)

   உலகப்பாவலர் தமிழன்னை தமிழ்ப் பேரவை(இந்தியா)

   நதியோர நாணல்கள் இலக்கிய மன்றம்(இலங்கை)

   பைந்தமிழ்ச்சோலை & யாப்பிலக்கணச்சோலை (இந்தியா)

   கவியுலகப் பூஞ்சோலை ( இந்தியா)

   விரலோவியம் கவிதைக்குழுமம் (இந்தியா)

   நிலாச்சோறு குழுமம் (இந்தியா)

   நிலாமுற்றம் இணைய குழுமம் (இந்தியா)

   சந்திரோதயம் குழுமம் (இந்தியா)

   இலக்கியப் பூந்தோட்டம் (இந்தியா)

   ஸ்ரீகாந்தின் கவிதைப்பட்டறை (இந்தியா)

   ழகரம் முகநூல் குழுமம் (இந்தியா)

   தேடல் அமைப்பு (இந்தியா)

   தமிழ்ச்சேவை (இந்தியா)

   துளிர் குழுமம் (இந்தியா)

   தஞ்சைத் தமிழ் மன்றம் (இந்தியா)

   பாவலர் பயிலரங்கம் (இணையவழி)

இன்னும் சில முகநூல் குழுமங்களில் அங்கத்தவராகவுள்ளார்.

சில முகநூல் கவிதைக் குழுமங்களில், நிர்வாகியாகவும், போட்டிப் பொறுப்பாளராகவும் உள்ளார்.

மரபு மாமணி பாவலர் மா.வரதராசனின் மாணவியாக, மரபுகவிதை எழுதப் பயின்று, இந்தியாவிலுள்ள பைந்தமிழ்ச்சோலையில் பட்டத்தேர்வு எழுதி, 88 புள்ளிகளுடன் பைந்தமிழ்ப்பாமணி பட்டம் பெற்றுள்ளார்.

பாடசாலையில் உயிர்த்த ஞாயிறு நிகழ்ச்சிக்குத் தானே பாடல் எழுதி மாணவர்களுக்குப் பழக்கியுள்ளார்.

மரபு கவிதை மட்டுமல்லாது,

    புதுக்கவிதைகள்,

    கிராமியக்கவிதைகள்,

    மரபு கவிதைகள்,

    ஹைக்கூ  போன்றனவும் எழுதுகிறார்.

 

இந்தியாவில் நடைபெற்ற மெட்டுக்குப் பாடல் போட்டியில், எழுதி இரண்டாம் இடம் பெற்றுப் பணப்பரிசு பெற்றுள்ளார்.

சென்னை முத்தமிழ்ச் சங்கமும் அமுதசுரபி அறக்கட்டளையும் இணைந்து நடாத்திய அமுதக்கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்றுப் பணப்பரிசு பெற்றுள்ளார்.

கவிதைப் பெட்டகம் மின்னிதழின் மரபு கவிதை பொறுப்பாசிரியராக உள்ளார். இந்தியாவிலும், இலங்கையிலும் பல கவிதைப் போட்டிகளில் நடுவராகவுள்ளார்.

2019 ல் இலங்கை கலாச்சார மன்றத்தினால், ஆனி மாதம் நடைபெற்ற பாடலாக்கப் போட்டிக்கான வளவாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஆக்கங்கள்/வெளியீடுகள்

``````````````````````````````````````````

ஆரம்ப காலத்தில், வலம்புரி பத்திரிகையில் கவிதை வெளியிட்டுள்ளார்.

(கவிதைக் குடும்பம் இல-20) பின்னர் நேரமின்மை காரணமாக விட்டுவிட்டார்.

அண்மையில், எதிரொலி பத்திரிகையிலும்

நதியோர நாணல்கள் இலக்கிய மன்றத்தின் ஆண்டுவிழா மலரிலும் இவரது கவிதைகள் பிரசுரமானது.

கவிதைப் பெட்டகம் மின்னிதழிலும், தமிழ்க்குதிர் மின்னிதழிலும் இவரது கவிதைகள் வெளியாகின்றன.

பைந்தமிழ்ப்பாமணி ஜெனிஅசோக் என்ற பெயரில் இணைய/முகநூல் வழியாக இவரது கவிதைகள் வெளியாகின்றன.

"கவிப்போர் தொடுப்போம்" எனும் நேரிசை வெண்பா அந்தாதி எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் நூலாக வெளியிடும் வேலைகள் நடைபெறுகின்றன.

ஏனைய துறைகளிலுள்ள ஆர்வமும் பங்களிப்பும்..

```````````````````````````````````````````````````````````````

`கவிதை எழுதுவதைத் தவிர,

பாடல் எழுதல்

சித்திரம்

கட்டுரை

சிறுகதை

நாடகம் எழுதுதல்

போன்றவற்றையும் தனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார் இப்பெண் எழுத்தாளர்.

பைந்தமிழ்ப்பாமணி ஜெனிஅசோக் - (யாழ்ப்பாணம், இலங்கை.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jenitha_Ashok_Matthew&oldid=2787828" இலிருந்து மீள்விக்கப்பட்டது