உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Irungovel

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் அ போ இருங்கோவேள் ஆகிய நான் சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். அடிப்படையில் நான் ஒரு மருத்துவ சமூகவியலாளர் (Medical Sociologist). பொது மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய கருத்துக்களை மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விழிப்புணர்வினை மேம்படுத்தும் பணியை செய்து வருகிறேன். சுமார் நானூறுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில ஏடுகளில் எழுதியிருக்கிறேன்.

சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கண் வங்கியின் துறைத்தலைவராக சுமார் 18 வருடங்கள் சேவை செய்த நான் தற்போது நிர்வாக அதிகாரியாக பொறுப்பிலிருக்கிறேன்.

தமிழில் மருத்துவக் கட்டுரைகள், பொது கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதியிருக்கிறேன். அவை பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கிப்பட்டுள்ளன. அடியேன் எழுதி “புதிய பார்வை” - என்ற நூலும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

“அகம்” மற்றும் “தர்ஷன்” என்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் சேவையாற்றியிருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Irungovel&oldid=920698" இலிருந்து மீள்விக்கப்பட்டது