பயனர்:Franklinferbin/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது ஊர் – கீழச்செல்வனூர் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம் கீழச்செல்வனூர். இது கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் தனியார் தொடக்கப் பள்ளியும் அங்கன்வாடியும் கல்விப்பணியை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றன. கோவில் பள்ளி வாசல் மற்றும் தேவாலயம் ஆகிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. கிராம மக்கள் சாதி சமய வேறுபாடின்றி ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர். கிராத்து மக்களின் பாதுகாப்பிற்கு ஒரு காவல் நிலையமும் பணப் பரிவர்த்தனைக்கு ஒரு தேசிய வங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மேலச்செல்வனூர் என்னும் ஊரில் பறவைகள் சரணாலயத்தில் அநேக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் உள்ளன. எங்கள் ஊரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது.


                எங்கள் ஊர் கீழச்செல்வனூர். 
                 எங்கள் ஊர் மாணவர்கள் மேலச் செல்வார்கள்</nowiki>
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Franklinferbin/மணல்தொட்டி&oldid=1968266" இலிருந்து மீள்விக்கப்பட்டது