பயனர்:Elumalai Devasthanam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எழுமலை ஜமீன் வரலாறும், பாளையப்பட்டுக்காரர்கள்( ஜமீன்தார்கள்) வம்சாவழியினரும்Elumalai Zameen & Elumalai jamin[தொகு]

எழுமலை ஜமீன்தார் ஸ்ரீ நல்காமு எரசின்னம்ம நாயக்கர்

கலியுகாதி வருடம் 4457 ஸ்ரீ முன் ராயர் சமஸ்தானம் நரசிங்க தேவராயரவர்கள் ராயவேலூரில் துரைத்தனம் செய்யும்போது வேக்கிலி கம்பளம் காமல்வாகு கோத்திரத்தராகிய எரமாசு சின்னபொம்மு நாயக்கர் காலத்திலிருந்து சிறிது சாமர்த்திய உத்திரவாதம் செய்து கொண்டிருந்ததனால், அவர்மேல் ராயருக்கு சந்தோசம் ஏற்பட்டு அவர் கேட்டுக்கொண்டபடி அவர் மகன் எரசின்னம்ம நாயக்கருக்கு குதிரைமலைக்கு (தற்போது எழுமலை வாசிமலையான் கோவில் உள்ள மலை) தெற்குள்ள ஆரண்ய வனமாகிய பூமியை கிராமமாக உண்டுபண்ணி துரைத்தனம் பண்ணிக் கொள்ளும்படி ஆணையிட்டு சிறிது விருதுகள் கொடுத்து அனுப்பிவிட்டார். அப்பால் ஷை வனத்தை அழித்து அழகியநல்லூர் கிராமமாக உண்டு பண்ணி ஆண்டுவந்தனர். ஆதி ஜமீன்தார் ஸ்ரீ எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் கனவில் பெருமாள் தோன்றி, நான் ஊருக்கு தெற்கே பூமிக்கடியில் இருக்கிறேன், எங்கே என் திருமேனியை காண்கிறாயோ அங்கேயே எனக்கு கோவில் அமைத்து வழிபட வேண்டுமென்று சொல்லி மறைந்தார். ஜமீன்தாரும் மறு நாள் பெருமாள் சொல்லிய இடத்தில் தேடிப்பார்க்கும் பொழுது பெருமாள் திருமேனி கிடைத்தது. பெருமாளின் திருமேனி திருப்பதி திருவேங்கடமுடையானின் திருவுருவ தோற்றத்தில் இருந்தது. அதனால் பெருமாளுக்கு திருவேங்கடநாத சுவாமி என்று பெயர் வைத்து திருக்கோவிலையும் , அந்த இடத்திற்கு ஏழுமலை என்று பெயர் வைத்து கிராமமாகவும் உண்டுபண்ணினார். பின்னாளில் ஏழுமலை மருவி மருவி எழுமலை ஆனது.

நாயக்கர் வரலாறு[தொகு]

பெரும்படைகளை திரட்டும் வல்லமை பெற்ற தலைவனை குறிக்கும் சொல் "நாயக்கன்" ஆகும். நாளடைவில் அது ஜாதியின் பெயராகியது. கிராமங்களில் குற்றங்களும் , திருட்டுகளும் நடைபெறாதவாறு அமைதியை நிலைநாட்டி. நியாயம் வழங்கும் உடமைகளும் நாயக்கன்மார்களுக்கு இருந்தன. இக்கடமைக்குப் பாடிக்காவல் அல்லது அரசு காவல் உரிமை யென்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அமைதியை நிலைநாட்டிக் குற்றங்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்குவதோடு,காடுகளை அழித்துக் குளந்தொட்டு, வளம்பெருக்க, உழவுத்தொழில் செம்மையுறுவதற்குச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாயக்கன்மார்களுக்கு இருந்தன. மேற்கூறப்பட்ட கடமைகளிலிருந்து தவறிய நாயக்கார்களுடைய நாயக்கத் தானங்கள்அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு மற்றவர்களிடம்கொடுக்கப்பட்டன, சில கொடுமையான தண்டனைகளும்கொடுக்கப்பட்டன என்று பார்போசா கூறுவர் . கிருஷ்ண தேவராயரும் , அச்சுத தேவராயரும் விஜயநகரத்தைக் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில்செஞ்சி, தஞ்சாவூர் , மதுரை ஆகிய மூன்று நாயக்கத் தானங்கள்தோன்றின. அமர, நாயக, கரா என்றமூன்று சொற்கள் அதில்அடங்கியுள்ளன, அமரம் என்னும்சொல் , நாயக்கர் அல்லது பாளையக்காரர்களுக்குப் படைப்ப்ற்ருக்க் கொடுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும் . படைதிரட்டும்தலைவனுக்கு நாயக்கர் என்ற பெயர் பொருத்தமாகும் . கரா அவருடைய பணியைக் குறிக்கும் . விஜயநகரத்தரசா்களிடம் குறிப்பிட்ட கரி, பரி, காலாட்படைகளைக் கொடுத்துஉதவுவதாக ஒப்புக் கொண்டு நிலங்களைப் பெற்றுக்கொண்ட நிலமானியத் ... தலைவர்களுக்கு... நாயக்கன்மார்கள் என்றும், அரசாங்கத்திற்கும் , பயிரிடுங் குடிகளுக்கும் இடையே ஓர் .இணைப்புப் பாலமாக நாயக்கன்மார்கள் இருந்தனர் . நாட்டைப் பாதுகாப்பதற்கு ஏற்ற படைகளைத் திரட்டி எப்பொழுதும் சித்தமாக வைத்துக் கொண்டிருப்பது நாயக்கன்மார்களுடைய கடமை யாயிற்று, நிலங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் சரிபாதியை மத்திய அரசாங்கத்திற்கு நாயக்கன்மரர்கள் அளிக்கவேண்டும் . மிகுந்த பாதியைக் கொண்டு கரி, பரி,காலாட்படைகளை அரசன் குறிப்பிட்டபடி, தங்கள் செலவில் வைத்திருக்க!வேண்டும் . மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அன்னியப் படையெழுச்சிகள் தோன்றிய காலத்தில் அப் படைகளைக் கொண்டுஉதவி செய்தல் வேண்டும் .இந்த நாயக்கன்மார்கள் தங்களுடைய நாயக்கத் தானங்களில் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் .கோட்டைகளையும் அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராயவாசகம் என்னும் நூலில் சந்திரகிரி, மாத்தூர் . சோணகிரி,-இரிசிரபுரம் , குன்றத்தூர் , வல்லம்கோட்டை, மதுரை, பழையன்கோட்டை, சத்திய வீடு, நாராயண வனம் முதலிய இடங்களில் .கோட்டைகள் அமைந்துள்ளமை பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. *காடு'கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்க” நாட்டில்பொருளாதார உற்பத்தியைப் பெருக்குவது நாயக்கர்களுடைய முக்கியப் பொறுப்பாகக் கருதப்பட்டது. தங்களுடைய நாயக்கத் தானத்திலுள்ள நிலங்களைத் தங்களுக்குக் எழ்ப்பட்டவர்களுக்குப் ”பிரித்துக் கொடுப்பதற்கும் நாயக்கர்களுக்கு அதிகார மிருந்தது.'சான்று:os. 352 and 353 of 1912.°Dr. A. Krishnaswami, The Tamil country.under VijaPP. 185-186. a

முதல் பட்டம் ஜமீன்தார் எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 4457 முதல் 45௦1 வரை ஸ்ரீ 44)[தொகு]

9௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில்
எழுமலை ஜமீன் குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில்.

கலியுகாதி வருடம் 4457 ஸ்ரீ வேக்கிலி கம்பளம் காமல்வாகு கோத்திரத்தராகிய எரமாசு சின்னபொம்மு நாயக்கர் மகன் ஆதி ஜமீன்தார் முதல் பட்டம்நிலை எரசின்னம்ம நாயக்கர் குதிரைமலைக்கு (தற்போது எழுமலை வாசிமலையான் கோவில் உள்ள மலை) தெற்குள்ள ஆரண்ய வனமாகிய பூமியை ஷை வனத்தை அழித்து அழகியநல்லூர் கிராமத்தையும், பின் எழுமலை கிராமமும், ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி கோவிலும் உற்பத்தி பண்ணினார்.

இரண்டாம் பட்டம் ஜமீன்தார் சின்னபொம்மு நாயக்கர் (கலியுகம் 45௦1 முதல் 4526 வரை ஸ்ரீ 25)[தொகு]

ஆதி ஜமீன்தார் ஸ்ரீ எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ சின்னபொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இரண்டாவது பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு சீல்நாயக்கன்பட்டி, பேரையம்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, நல்லதாதுனாயக்கன்பட்டி, உத்தப்புரம் கிராமங்களை உண்டு பண்ணினார். தனது பாட்டனார் பார்த்து வந்த மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவலுக்கு திருமாணிக்கம், அதிகாரிபட்டி, தாடையம்பட்டி,கீழத்திருமாணிக்கம் கிராமங்களை சகல வரியும் உள்பட மானியமாக கழித்து, தான் பார்ப்பதோடு தன் தகப்பனரால் உண்டு பண்ணப்பட்ட ஏழுமலைக் கிராமத்திற்கு தோப்புப்பணம் 11௦ கொடுத்து வந்தார்.

மூன்றாம் பட்டம் ஜமீன்தார் பெரிய பொம்மு நாயக்கர் (கலியுகம் 4526 முதல் 456௦ வரை ஸ்ரீ 34)[தொகு]

ஜமீன்தார்ஸ்ரீ சின்னபொம்மு நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ பெரிய பொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி மூன்றாவது பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை உற்பத்திசெய்தும், மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவலோடு, அம்மாபட்டி,கோட்டைப்பட்டி கிராமங்களையும் உண்டு பண்ணினார்.

நான்காம் பட்டம் ஜமீன்தார் ஏறசீலப்ப நாயக்கர் (கலியுகம் 456௦ முதல் 4577 வரை ஸ்ரீ 17)[edit][தொகு]

எழுமலை நான்காம் ஜமின்தார் ஏறசீலப்ப நாயக்கர் அவர்களால் கலியுக வருஷம் 456௦- 4577-ல் உற்பத்தி பண்ணப்பட்ட குதிரைமலைப் பெருமாள் கோவில் (தற்சமயம் வாசிமலையான் கோவில் என்று அழைக்கப்படுகிறது)

ஜமீன்தார் ஸ்ரீ பெரிய பொம்மு நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ ஏறசீலப்ப நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி நான்காவது பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவலோடு, குதிரைமலை ஈஸ்வரபெருமாள் கோவிலை உற்பத்தி பண்ணினார். தம்பிரான் சாமி கும்பிடுவதற்காக அரண்மனை உள்ளிருக்கும் பெரியவீட்டு நாயக்கர் வீட்டின் முன்பு மாடுகள் கட்டுவதற்கு தொழு ஏற்படுத்தியும், கிணறும் உண்டாக்கினார்.

ஐந்தாம் பட்டம் ஜமீன்தார் எரகாமு பொம்மு நாயக்கர் (கலியுகம் 4577 முதல் 4597 வரை ஸ்ரீ 2௦)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ ஏறசீலப்ப நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ எரகாமு பொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி ஐந்தாவது பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

ஆறாம் பட்டம் ஜமீன்தார்கள் வீரசீலு எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 4597 முதல் 4612 வரை ஸ்ரீ 15)[தொகு]

ஜமீன்தார் எரகாமு பொம்மு நாயக்கர்அவர்களின் குமாரர்கள் 1. ஸ்ரீ வீரசீலு எரசின்னம்ம நாயக்கர், 2.ஸ்ரீ வீரசீலு திம்மன நாயக்கர் ஆவர். அவர்களின் 1-வது லக்கத்தார் ஸ்ரீ வீரசீலு எரசின்னம்ம நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி ஆறாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

அவர்களின் 2-வது லக்கத்தார் ஸ்ரீ வீரசீலு திம்மன நாயக்கர் தெய்வதானபதி என்ற பெயர் நாளடைவில் தேவதானப்பட்டி ஆன மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலுக்கு பூசாரித்தனம் வேலை பார்க்கப்பட்டது.

ஏழாம் பட்டம் ஜமீன்தார் துட்டு நல்லதாது நாயக்கர் (கலியுகம் 4512 முதல் 4631 வரை ஸ்ரீ 19)[தொகு]

ஜமீன்தார் வீரசீலு எரசின்னம்ம நாயக்கர்அவர்களின் குமாரர் ஸ்ரீ துட்டு நல்லதாது நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி ஏழாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கருக்கு இவர் செய்த ஊழியத்தால் சந்தோசம் ஏற்பட்டு அல்லிகுண்டம், தும்மலப்பட்டி, மானூத்து, வண்ணாங்குளம் இந்த கிராமங்களை இனாமாக விட்டுக்கொடுத்தார். அல்லிகுண்டத்தில் கோட்டையும் போட்டுக்கொள்ளும்படி உத்தரவிட்டார். அதன்படி அனுபவித்து ராசக்காபட்டி கிராமத்தை உண்டுபண்ணினார்.

எட்டாம் பட்டம் ஜமீன்தார் குப்பண நாயக்கர் (கலியுகம் 4631 முதல் 467௦ வரை ஸ்ரீ 39)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ துட்டு நல்லதாது நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ குப்பண நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி எட்டாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

ஒன்பதாம் பட்டம் ஜமீன்தார் சீலபொம்மு நாயக்கர் (கலியுகம் 467௦ முதல் 4686 வரை ஸ்ரீ 16)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ குப்பண நாயக்கர் நாயக்கர் அவர்களின் குமாரர் சீலபொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி ஒன்பதாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

பத்தாம் பட்டம் ஜமீன்தார் சீலப்ப நாயக்கர் (கலியுகம் 4686 முதல் 4716 வரை ஸ்ரீ 3௦)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ சீலபொம்மு நாயக்கர் அவர்களின் குமாரர் சீலப்ப நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பத்தாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. எழுமலையில் நாயக்கர் ஊரணியும், பெரிய தோப்பும் கிணறும் உண்டு பண்ணப்பட்டது.

பதினொறாம் பட்டம் ஜமீன்தார் சங்கரப்ப நாயக்கர் (கலியுகம் 4716 முதல் 4745 வரை ஸ்ரீ 29)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ சீலப்ப நாயக்கர் அவர்களின் குமாரர் சங்கரப்ப நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினொறாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. கொத்தளம் காவலோடு அல்லிகுண்டம் கிராமத்தில் கரியமாளழகர் கோவிலை உண்டுபண்ணி, நித்திய பூஜைக்கு தும்மலப்பட்டி கிராமத்தை தானமாக விட்டுக்கொடுத்தார். மேலத்திருமாணிக்கம் சுப்பிரமணி கோவிலை கல்திருப்பணி கட்டியும் ஷை கோவில் பூஜைக்கு தான் காவல் செய்யும் நிலமும், கொஞ்சம் பணமும் கொடுத்து ஷை ஊருக்கு மேல்புறம் சங்கர விநாயகர் என்ற நாமத்துடன் விநாயகர் விரதிஷ்ட்டையும் செய்து தோப்பு, கிணறு வகையறாக்களும் உண்டு பண்ணினார்.

பனிரெண்டாம் பட்டம் ஜமீன்தார் பொம்மன நாயக்கர் (கலியுகம் 4745 முதல் 4758 வரை ஸ்ரீ 13)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ சங்கரப்ப நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ பெரிய நாயக்கர் என்ற பொம்மன நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பனிரெண்டாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

பதிமூன்றாம் பட்டம் ஜமீன்தார் நெடுபொம்மு நாயக்கர் (கலியுகம் 4758 முதல் 48௦7 வரை ஸ்ரீ 49)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ பெரிய நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ நெடுபொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதிமூன்றாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது.

பதினான்காம் பட்டம் ஜமீன்தார் குப்பண நாயக்கர் (கலியுகம் 48௦7 முதல் 4832 வரை ஸ்ரீ 25)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ நெடுபொம்மு நாயக்கர் அவர்களின் குமாரர் ஸ்ரீ குப்பண நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினான்காம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. எழுமலை நாயக்கர் மாலைக்கோவில் உண்டு பண்ணியும், திருவேங்கடநாத சுவாமி கோவிலை கல்திருப்பணியாக கட்டியும், கிணறு, கொடிக்கம்பம் பிரதிஷ்டை செய்தார். நித்திய பூஜைகள் செய்ய 1-க்கு 2 மரக்காள் நெல்லும் கொடுக்கும்படி தாதரையன் தோப்பை திருவிழா போடுவதற்கு தானமாக கொடுத்தார்.

பதினைந்தாம் பட்டம் ஜமீன்தார்கள் ஸ்ரீ நல்லதாது மற்றும் பொம்மு நாயக்கர் (கலியுகம் 4832 முதல் 4872 வரை ஸ்ரீ 4௦)[தொகு]

ஜமீன்தார் ஸ்ரீ குப்பண நாயக்கர் அவர்களின் குமாரர்கள் 1.ஸ்ரீ நல்லதாது நாயக்கர், 2. ஸ்ரீ பொம்மு நாயக்கர் ஆவார். இவர்களின் 1-வது லக்கத்தார் ஸ்ரீ பொம்மு நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினைந்தாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. எழுமலை மாதாந்தம் சுப்பிரமணியர் சுயம்புலிங்க உற்பத்திக்கு கர்ப்பக் கிரகம் வகையறாவை திருப்பணியாகவும், மயில் மண்டபமும் கட்டி அதற்கு மாதாந்தம் என்னும் நாம கரணமும் சூட்டி, தோப்பு வகையறாக்களை வைத்து தானம் பண்ணியும், நித்திய பூஜைக்கு புஞ்சை மற்றும் நஞ்சை வகையறாக்களை கொடுத்தார். வினேஷன் குளமும் தானம் பண்ணி ஷை வீரசின்னு குளத்தில் மூலகருப்ப சுவாமி உண்டுபண்ணியும், ஊருக்கு மேல்புறமும், கிழமேல் சாலை, சவுக்கை மடம் கல்வாரி உற்பத்தி பண்ணியும், அதனடியில் வித்தனேஸ்வரர் பிரதிஷ்டை செய்தும்,அதற்கு நித்திய பூஜைக்கு நிலம் தானம் செய்தார். ஊருக்கு வடபுறம் காமாட்சி அம்மன் கோவிலை பிரதிஷ்டை செய்து, பூஜைக்கு நிலமானிபமும் விட்டு, மேல்புறம் கலிங்கையும், வடபுறம் ஊரணி தோப்பு வகையறாக்களையும் வைத்து ஆண்டு வந்தார். அவர் காலத்தில் 3௦ வருடம் சென்றவுடன் எட்டுக்கெவுலை நவாப்பு சாபு நாளில் சந்தசயபு முன் தோப்புரா பணத்தை 5௦௦ பொன்னாக உயர்த்தப்பட்டது.

ஜமீன்தார் எரகாமு பொம்மு நாயக்கர்அவர்களின் குமாரர் ஆறாம் ஜமீன்தார் 2.ஸ்ரீ வீரசீலு திம்மன நாயக்கர் தெய்வதானபதி மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலுக்கு பூசாரித்தனம் வேலை பார்க்கும் பொழுது, சன்னதியிலே வைகுண்ட பதவியடைந்ததால், தெய்வதானபதி மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலை கர்னாடகத்தார் கைவசம் கொண்டனர். இதனை அறிந்த ஸ்ரீ பொம்மு நாயக்கர் ஷை கர்னாடகத்தார்க்கு தொண்டு செய்து மன சந்தோசம் படும்படி நடந்துகொண்டதால் அவரை பூசாரி என்ற பட்டமும் வாங்கி, தெய்வதானபதி (தேவதானப்பட்டி ) மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலின் 2-வது பூஜாரியாக பூஜை நடத்திவந்தார்.

பதினாறாம் பட்டம் ஜமீன்தார் பொம்மு நாயக்கர் (கலியுகம் 4872 முதல் 4875 வரை ஸ்ரீ 3)[தொகு]

தெய்வதானபதி (தேவதானப்பட்டி ) மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலின் பூசாரித்தனத்தோடு ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினாறாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. மாதாந்தம் அலங்கார வள்ளியம்மன் கோவிலை உற்பத்தி செய்து அதற்கு நித்திய பூஜைக்கு நிலங்களும் தானம் பண்ணி, விஜயதசமிக்கு திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரரால் அம்பு போடுவதற்கு இவ்விட எல்லையில் காரை மண்டபமும் கட்டி வைத்தார். அல்லிகுண்டத்திற்கு உபகிராமமாக பொம்மனக் கவுண்டன்பட்டியையும், கன்னியம்பட்டியும், மானூத்து உபகிராமமாக மஞ்சிநாயக்கன்பட்டியையும் உண்டு பண்ணினார்.

பதினெழாம் பட்டம் ஜமீன்தார் சிறிய காமய நாயக்கர் (கலியுகம் 4875 முதல் 4911 வரை ஸ்ரீ 36)[தொகு]

பதினாறாம் பட்டம் கட்டிய பொம்மு நாயக்கரின் தகப்பனார் சிறிய காமய நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினேழாம் பட்டம் கட்டினார். பட்டம் கட்டிய பிறகு மதுரை மேலத்தலைவாசலுக்கு தெற்கு மூன்றாம் கொத்தாளம் காவல் பார்க்கப்பட்டது. கொத்தாளம் காவல் பார்த்துக்கொண்டு வரும்போது ஷை நவாப் தோப்புப்பணத்தை 1௦௦௦ பொன்னாக ஆக்கினார்.

எழுமலையில் அருள்மிகு பாண்டிய விநாயகர் திருக்கோவிலை உற்பத்தி செய்தும், ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி சித்திரை திருவிழாவில் தங்கி எழுந்தருள துரைமக்கள் மண்டபத்தையும் கட்டினார். நாகமநாயக்கன்பட்டி,பெருமாள்பட்டி, குப்பிநாயக்கன்பட்டி, அல்லமநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், கவுண்டன்பட்டி, பள்ளபட்டி, தச்சபட்டி, வடக்கத்தியான்பட்டி, வங்கிநாராயணபுரம் கிராமங்களை உண்டு பண்ணினார். ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி கோவிலில் சிகரம் கட்டியும், ஆறுகால் கிரீடமும், மடப்பள்ளி கட்டியும், திருக்கோவில் தெப்பமும் வெட்டி கல்கட்டியும் ஆக்கிரகப்பிரதிஷ்டை செய்தார். எழுமலைக்கு வடக்கே வெங்கிடாசல பெருமாள் கோவில் உண்டுபண்ணினார். அதற்கு அருகே குதிரை மலை ஈஸ்வரப்பெருமாள் (வாசிமலையான்) கோவிலுக்கு போய்வருபவர்கள் தங்குவதற்கு மலையில் கூரைச்சாலை உண்டுபண்ணினார். திருமாணிக்கம் மீனாட்சியம்மன் பள்ளியறையை தட்டோடு போட்டும், அல்லிகுண்டம் கரியமாளழகர் கோவிலுக்குமுன் கருடக்கோவில் கட்டினார். மலைவழியாக பாலகோம்பைக்கு போகும் மலையடியில் பாதையில் காமலம்மாள் மடம் கட்டியும், தண்ணீர் பந்தல் அமைத்தும், கிணறு வகையறாக்கள் உண்டுபண்ணினார். நவாப் துறை சாப் வந்து அல்லிகுண்டம், மானூத்து, வண்ணாங்குளம் அதிலுள்ள உபகிராமங்களையும், மதுரை கொத்தாளம் காவலையும் கையாடிக்கொண்டனர். அப்பால். 14 வருடத்திற்குமேல்.

சங்கடம் துறை வந்து திசைக்காவல் பணியை கையாடிக்கொண்டு தோப்புப் பணத்தை 18௦௦ பொன்னாக ஆக்கப்பட்டது. அப்பால் பாரீஸ் துரை காலத்தில் தோப்பு பணத்தை 1௦5௦ பூவரனமாகவும் கொடுக்க வேண்டும் என ஏற்படுத்தப்பட்டது.

இதுவரை கலியுக வருஷமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஆண்டுகள் இதுமுதல் ஆங்கில வருஷமாக கணக்கிடப்பட்டது.[தொகு]

பதினெட்டாம் பட்டம் ஜமீன்தார் துரைச்சாமி காமய நாயக்கர் (கலியுகம் 1811 முதல் 182௦ வரை ஸ்ரீ 1௦)[தொகு]

பதினெழாம் பட்டம் கட்டிய சிறிய காமய நாயக்கர் அவர்களின் பேரன் ஸ்ரீ துரைச்சாமி காமய நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினெட்டாம் பட்டம் கட்டி ஆண்டு வந்தார்.

பதினொன்பதாவது பட்டம் ஜமீன்தாரி பொம்மையம்மாள் நாயக்கர் (கலியுகம் 182௦ முதல் 1837 வரை ஸ்ரீ 17)[தொகு]

பதினெழாம் பட்டம் கட்டிய சிறிய காமய நாயக்கர் அவர்களின் பெஞ்சாதி பொம்மையம்மாள் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி பதினொன்பதாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார்.

இருபதாவது பட்டம் ஜமீன்தார் எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 1837 முதல் 1844 வரை ஸ்ரீ 7)[தொகு]

பதினொன்பதாவது பட்டம் கட்டிய பொம்மையம்மாள் அவர்களின் மகன் எரசின்னம்ம நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இருபதாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார்.

இருபத்தொன்றாவது பட்டம் ஜமீன்தார் எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 1844 முதல் 1874 வரை ஸ்ரீ 3௦)[தொகு]

இருபதாவது பட்டம் கட்டிய எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர் எரசின்னம்ம நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இருபத்தொன்றாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார்.

இருபத்திரண்டாவது பட்டம் ஜமீன்தார் காமய வங்காருசாமி நாயக்கர் (கலியுகம் 1874-ல் ஸ்ரீ 4௦ நாட்கள்)[தொகு]

இருபத்தொன்றாவது பட்டம் கட்டிய எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர்கள் 1. காமய வங்காருசாமி நாயக்கர், 2. நல்காமு எரசின்னம்ம நாயக்கர். 1-வது லக்கத்தார் 1. காமய வங்காருசாமி நாயக்கர் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இருபத்திரண்டாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார்.

இருபத்து மூன்றாவது பட்டம் ஜமீன்தாரி ராணி நாகம்மாள் (கலியுகம் 1844 முதல் 1889 வரை ஸ்ரீ 15)[தொகு]

இருபத்திரண்டாவது பட்டம் கட்டிய காமய வங்காருசாமி நாயக்கர் அவர்களின் மனைவி ஜமீன்தாரி ராணி நாகம்மாள் ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இருபத்திரண்டாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார். இவர் காலத்தில் கடனுக்காக பூமி சப்தியாகிய தருணத்தில், ஆட்சி நிர்வாகம் நடத்தி வரும்போது இருபத்தொன்றாவது பட்டம் கட்டிய எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர்களில் இரண்டாவது லக்கத்தாரும், ராணி நாகம்மாள் அவர்களின் கொழுந்தனுமாகிய ஜமீன்தார் ஸ்ரீ நல்காமு எரசின்னம்ம நாயக்கர் பூமி விவகாரம் செய்ததால், உடன்பாட்டு ராசியின் பேரில் உத்தப்புரம் கிராமத்தை ஷை ராணி நாகம்மாளுக்கு கொடுத்து விடுவதென்றும், பட்டத்தை ஸ்ரீ நல்காமு எரசின்னம்ம நாயக்கர் அவர்கள் ஆட்சி நடத்துகிறதென்றும் தீர்மானித்துக் கொண்டபடி 189௦-ம் வருஷத்தில் இந்த பட்டத்தை ஒப்புகொண்டார்.

இருபத்து நான்காவது பட்டம் ஜமீன்தார் நல்காமு எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 1889 முதல் 1921 வரை ஸ்ரீ 31)[தொகு]

இருபத்தொன்றாவது பட்டம் கட்டிய எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர்களில் இரண்டாவது லக்கத்தார் நல்காமு எரசின்னம்ம நாயக்கர். ஷை எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் செங்கோல் வாங்கி இருபத்திரண்டாவது பட்டம் கட்டி ஆண்டு வந்தார். ராணி நாகம்மாள் காலத்தில் ஏற்பட்ட பூமி ஜப்தி வரிவிதிப்புக்காகவும், எழுமலை ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களின் பூரண சுதந்திரத்திர்காகவும் பாரீஸ் துரை கடனுக்காக எழுமலை ஜமீனை (ஜமீன் குடும்பத்திற்கு சொந்தமான திருவேங்கடநாத சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் நித்திய பூஜைக்கான சுமார் 4௦௦ ஏக்கர் நிலங்கள் தவிர) சேத்தூர் ஜமீனுக்கு கிரையம் செய்து கொடுத்தார். பின் எழுமலை ஸ்ரீ திருவேங்கடநாத சுவாமி திருக்கோவிலுக்கு சுத்துப்பிரகாரமும், தோப்பு வகையறாக்களும் வைத்தார். தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் பூசாரித்தனத்தோடும், பரம்பரை அறங்காவலராகவும், இருந்து கொண்டு ஷை மூங்கிலனை காமாட்சியம்மனுக்கு சிறிது பூமிகள் வாங்கி தோப்புக்கள் வைத்து, கோவிலுக்கு முன்மண்டபம் கட்டினார். 1921 நவம்பர் மாசம் 11 தேவதானபட்டியில் இருந்து தெய்வீகமானர்.

இருபத்து ஐந்தாவது ஜமீன்தார் நல்காமு எரசின்னம்ம நாயக்கர் (கலியுகம் 1921 முதல் 1975 வரை ஸ்ரீ 57)[தொகு]

ஷை எழுமலை ஜமீன் கிரயம் ஆனபின் செங்கோல் வாங்கி பட்டம் ஏற்கும் வம்சாவளி நடைமுறை இல்லாது இருபத்து நான்காவது பட்டம் ஜமீன்தார் நல்காமு எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் குமாரர் நல்காமு எரசின்னம்ம நாயக்கர் இருபத்தைந்தாவது ஜமீன்தார் மற்றும் திருக்கோவில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். திருக்கோவில் நிர்வாகம், திருக்கோவில் நிலங்கள் பராமரிப்பு பூஜைகள் அனைத்தையும் நிர்வகித்து வந்தார். திருக்கோவில் நிலங்களை மீட்டெடுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். திருக்கோவில் நிலங்கள் சம்பந்தமாக பலவழக்குகள் நடத்தினார். இவருக்கு ஐந்து குமாரர்கள். ( குடும்பவிசயங்களாக இருப்பதினால் சில விபரங்கள் பொதுவெளியில் பதிவிடப்படவில்லை).

இருபத்து ஆறாவது ஜமீன்தார் மற்றும் பரம்பரை அறங்காவலர் என். தங்கவேல் நாயக்கர்[தொகு]

எழுமலை ஜமீனின் 26 வது ஜமீன்தாரும், திருக்கோவில் பரம்பரை அறங்காவலருமான ஸ்ரீ.என்.தங்கவேல் நாயக்கர்.

ஷை எழுமலை இருபத்தைந்தாவது ஜமீன்தாரும், திருக்கோவில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலருமான ஸ்ரீ.நல்காமு எரசின்னம்ம நாயக்கர் அவர்களின் ஐந்தாவது குமாரர் ஸ்ரீ.தங்கவேல் நாயக்கர் அவர்கள் இருபத்து ஆறாவது ஜமீன்தார் மற்றும் திருக்கோவில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலராக திருக்கோவில் நிர்வாகம், திருக்கோவில் நிலங்கள், பராமரிப்பு பூஜைகள் அனைத்தையும் நிர்வகித்து வந்தார். இவர் திருக்கோவில் நிர்வாக பொறுப்பேற்ற காலத்தில் திருக்கோவிலுக்கு பல கைங்கர்யங்களை சிறப்பாக செய்தார். திருக்கோவில் பாதைகள் சீரமைக்கப்பட்டன. திருக்கோவிலுக்குள் மாரமத்து பணிகள், மின்வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. வார பூஜைகள், பிரசாதங்கள், அலங்காரங்கள், அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திருக்கோவில் நிலங்கள் வழக்கு நடத்தி மீட்கப்பட்டது. 2௦15-ம் வருடம் சட்ட விரோதமாகவும், ஆகம விதிகளுக்கு புறம்பாகவும் திருக்கோவில் அமைந்திருக்கும் நிலத்தை எழுமலை பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்து, திருக்கோவில் பாதுகாப்பு வேலியை அகற்றியது. மேலும் திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாகவும், திருக்கோவில் நிலத்தை ஆக்கிரமித்தும் சாலை அமைக்க முற்பட்டனர். இந்த சட்ட விரோத செயலை எதிர்த்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்து இடைக்கால உறுத்துக்கட்டளை பெற்றார். நிர்வாகத்திலும் பல மாற்றங்களை செய்து, திருக்கோவிலை மேம்படுத்தினார்.



தொடரும்.....


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Elumalai_Devasthanam&oldid=3583803" இலிருந்து மீள்விக்கப்பட்டது