உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:DSEBHARATHISCHOOLNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புண்ணிய பூமி புத்திரன் புண்ணிய பூமி புத்திரன் புண்ணிய பூமியில் தோன்றி புகழின் உச்சியில் நின்றவனே இமயகம் வரை உன் புகழ் பாடும் குமரிக் கடலும் உன் குணம் சொல்லி ஆடும் அகில உலகும் வியக்கும் அணு சோதனை கண்டவரே! அக்கினிச் சிறகுகள் எங்கே! அப்துல் கலாமே நீ எங்கே! எங்கே! அறிவியல் உலகின் சிகரமே! ஆற்றல் ஊற்றின் பிரவாகமே! இளைஞர்கள் மனதில் கனவை விதைத்தாய்! அறுவடை காணாமல் நீ எங்கே சென்றாய்! ஆக்கபூர்வ கனவுகள் எங்கே! அப்துல் கலாமே நீ எங்கே! எங்கே! குடியரசு மாளிகைக்கு பெருமை தந்தாய்! மக்கள் தலைவராக மனதில் நின்றாய். மானுடத்தை விட்டு நீ எங்கே சென்றாய்! உன் எழுச்சி உரை எங்கே! அப்துல் கலாமே நீ எங்கே! எங்கே! விண்ணுலா விண்கலங்களை பழுது நீக்க நீ பாய்ந்து சென்றாயோ! பாரதம் வல்லரசாகிவிட்டதா என வானில் இருந்து பார்க்கச் சென்றாயோ! ஏவுகணை வேகத்தில் எங்கு நீ சென்று விட்டாய்!