பயனர்:Balathinakaran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                           முதலில் ஊர் அமைவிடம் விவரம்
                            விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவில் பெரியநாயகபுரம் ஊராட்சியாக இருக்கின்றது. அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாழ்வாங்கி அடுத்து பேருந்து நிறுத்தம் பெரியநாயகபுரம் நிறுத்தம். அந்த நிறுத்தத்திலிருந்து 1 கீ.மீ கீழக்கே செல்ல வேண்டும். அமைதியும் அன்பும் நிறைந்த அந்த கிராமத்தை அடையலாம்.

பெரியநாயகபுரம் ஊராட்சி 1. பெரியநாயகபுரம்

                                              2. வாழ்வாங்கி

பெரியநாயகிபுரம் பெயர் ஏற்படக் காரணம்:

                                      சில வருடங்களுக்கு முன் கிராமத்து மக்கள் இரவில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்கள். அப்பொழுது திருடர்கள் மந்தையில் இருக்கக்கூடிய ஆடுகளை திருட முயன்றார்கள். அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிகூடிய தெய்வம் அங்கு இருக்கக்கூடிய மடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி திருடர்களை விரட்டி அடிக்க தெய்வம் மனிதனாக காட்சியளித்து ஆடுகளை காப்பாற்றினார். அதனால் அந்த கிராமத்தை காப்பாற்றிக் இருக்கக்கூடிய தெய்வம் காளியம்மாள் பெரியநாயகி என அழைக்கப்பட்டு பெரியநாயகபுரம் என பெயர்பெற்றது.
                      

கிராமத்து மக்கள்: இங்கு வாழக்கூடிய மக்கள் அன்பும் பாசமும் நிறைந்த மக்கள். இங்கு இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ்கிறார்கள். இங்கு

                             வாழக்கூடிய   மக்கள் ஒரே மனித சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய முக்கிய தொழில் விவசாயம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Balathinakaran/மணல்தொட்டி&oldid=1968200" இலிருந்து மீள்விக்கப்பட்டது