உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Balaruthresh/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

((தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிபீடியா பயிற்சி 2015}}கடம்பர் கோயில்,குளித்தலை கடம்பர் கோயில் காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள சிவதலங்களில் ஒன்று ஆகும். இது கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரில் உள்ளது. இத்தலத்தின் மூலவர் கடம்பவனேஸ்வரர் ஆவார். அம்பாள் முற்றிலா முலையம்மை ஆவார்.வடக்கு நோக்கிய வாயில் கொண்டுள்ள ஸ்தலம் என்பதால் மோட்ச ஸ்தலம் என போற்றப்படுகிறது. சிவலிங்கத்தின் பின்புறம் சப்தகன்னியர்களும்,சிவலிங்கத்தின் தூம்பு வலது புறமும் அம்பாள் இடது புறமும் இத்தலத்தில் உள்ளது மிகவும் விசேசம் ஆகும். இரண்டு நடராஜர்கள் ஓரித்தில் தரிசனம் வழங்குவது இத்தலத்தின் சிறப்பு அம்சம் ஆகும். துர்க்கை அம்மன் இல்லாத ஸதலம் என்பதால் அம்பாளே அருள்பாலித்து வருகிறாள். கடம்பர் அசுரரை அழித்து சப்தகன்னியரை காத்த ஸ்தலம் என்பதால் பெண்களின் வேண்டுதல்ள் நிறைவேறும் என நம்பிக்கை உண்டு." காலை கடம்பர் மதியம் சொக்கர் மாலை ஈங்கோய்நாதர்" என்ற வரிசைப்படி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

http://temple.dinamalar.com/New.php?id=83

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Balaruthresh/மணல்தொட்டி&oldid=1944807" இலிருந்து மீள்விக்கப்பட்டது