பயனர்:முத் தமிழ் குமார்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடங்கநேரி

எல்லை காக்கும் சுடலை மாடசாமி

இக்கிராமத்தில் காவல் தெய்வங்களாக கருதப்படும் சீவலப்பேரி சுடலை மாடன், பிராடி மாடன்,இசக்கி மாடன், கருப்பசாமி,கற்குவேல் அய்யனார் போன்ற ஆண் தெய்வங்களும், பேச்சியம்மன்,இசக்கியம்மன், வடிவுடையம்மன் போன்ற பெண் தெய்வங்களும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்டு வருகிறது.

இத்தெய்வங்களில் சீவலப்பேரி சுடலையே காவல் காக்கும் தெய்வமாக அறியப்படுவார். சீவலப்பேரி சுடலைமாடனுக்கு சிலை இருக்குமே தவிர, தனி அறையான கருவறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இல்லை. பிற இந்து தெய்வங்களைப் போல் கருணை வடிவான முகங்களாக சுடலையின் முகம் இல்லை.

ஆண்டுக்கொரு முறை ஆடி மாதத்தில் சுடலைமாடனுக்கு சிறப்பு விழா 'கொடை விழா' என்கிற பெயரில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆடு மற்றும் சேவல்களைப் பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

இக்கோயிலின் கொடை விழாவின் பொழுது ஒரு சில பக்தர்கள் சாமியாடும் வழக்கம் இருக்கிறது. சாமியாடிகள் அல்லது சாமிகொண்டாடிகள் என்றழைக்கப்படும் அவர்கள் ஒரு சில குடும்பங்களிலிருந்தே பரம்பரையாகத் தேர்வு செய்யப்படும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆவேசத்துடன் ஆட்டமிட்டுக் குறி சொல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் தங்களது குறைகளையோ அல்லது பொதுவான குறைகளைத் தெரிவித்து அதைத் தீர்க்க வழி கோருகின்றனர். சாமியாடுபவர்களும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் இக்கிராமப்பகுதிகளில் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொடைவிழாவின் பொழுது தீப்பந்தம் ஏந்தி ஆடுவதும் நடுச்சாம வேளைகளில் சுடுகாட்டிற்கு சென்று வேட்டையாடுவதும் சுடலைமாடசாமியின் வழக்கமாக உள்ளது.

தாய் தெய்வம்

கடங்கநேரி பத்திரகாளியம்மன் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாகும்.

கோவில் அமைப்பு

இக்கோயிலில் பத்திரகாளியம்மன் சன்னதியும், மாரியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி,முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் உள்ளது.

திருவிழா

இக்கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சிறப்பு விழா என்கிற பெயரில் திருவிழா நடைப்பெறும். புரட்டாசி மாத கொடைவிழாவில் தீ மிதித்தலும்,பங்குனி மாத கொடைவிழாவில் தோரோட்டமும் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

தேரில் பத்திரகாளி,மாரி தாய் தெய்வத்தை ஊர்வலம் எடுத்துச் செல்கிறார்கள். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.

குளம்

தமிழ்நாட்டில் உள்ள குளங்களில், இக்குளமும் ஒன்று.  சராசரியாக 48.44 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன நீரை இக்குளம் அளிக்கிறது.

அணை(மறுவாய்):

1956-ல் கட்டப்பட்ட இக்குளத்தின் அணைக்கட்டானது மறுவாயாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அணையிலிருந்து அதிகபட்சமாக, ஒரு வினாடிக்கு 50,000 லிட்டர் நீரை வெளியேற்றலாம். இவ்வாறு வெளியேறும் நீரானது ரெட்டியார்பட்டி குளத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்க்கால்:

இக்குளத்திலிருந்து நீரை வெளியேற்றம் வாய்க்கால்கள் மொத்தம் ஏழு.