பயனர்:மன்னை ராஜகோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னை இராஜகோபாலன் பிப்ரவரி மாதம் ஆறாம் நாள் 1966ம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தவர். மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி, இராஜகோபாலசுசாமி கலைக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம், தேசிய கல்விக் கழகம் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்றவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருபவர். தந்தையார் வீ கணபதி. தாயார் ராஜலெட்சுமி.

மன்னை மீடியா, மன்னை கிரியேசன்ஸ் ஆகிய காணொளி சானல்கள் வழியாக இலக்கியப் பாடங்களை முன்னெடுப்பதுடன், பட்டிமன்றங்கள் இலக்கிய சொற்பொழிவுகள் ஆகியனவற்றையும் நிகழ்த்தி வருகிறார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் சமுதாய மாற்றம் என்று நூலை 2019ல் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மன்னை_ராஜகோபாலன்&oldid=2902213" இலிருந்து மீள்விக்கப்பட்டது