பயனர்:சேவாபாரதி தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவாபாரதி தமிழ்நாடு[தொகு]

     மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற சுவாமி விவேகானந்தரின் உரைக்கு ஏற்ப ‘சேவாபாரதிதமிழ்நாடு’ கடந்த 19 ஆண்டுகளாக ‘பஞ்சகார்யா’ மூலமாக அடித்தள மக்களின் கல்வி, சுயசார்பு, சமுதாயநலன், மருத்துவம், பேரிடர்நிவாரணம் என்னும் ஐந்து துறைகளின் வாயிலாக வடதமிழகத்தில் பல்வேறு சேவைதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அடித்தட்டு மக்களுக்கு தன்னம்பிக்கையூட்டி அவர்களது வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி, தேசியசிந்தனையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது சேவாபாரதி தமிழ்நாடு.

கல்விப்பணிகள்[தொகு]

இலவச கல்விதான மையம்[தொகு]

    பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்களின் கல்விதரத்தை உயர்த்த  சேவாபாரதி தமிழ்நாடு இலவச கல்விதான மையங்களை நடத்திவருகிறது. குக்கிராமங்கள், குடிசை பகுதிகளில் இப்பணி சிறப்பாக நடைபெறுகிறது.  வாரம் ஆறு நாட்கள், தினசரி இரண்டு மணி நேரம் வீதம் 200 திறமைவாய்ந்த தன்னார்வலர்களைக்கொண்டு 150 க்கும் மேற்பட்ட இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இலவச கல்வி தானமையம்
இலவச கல்வி தானமையம்

பண்பாட்டு வகுப்புகள்[தொகு]

    கல்விதான மையங்களுடன் சின்னஞ்சிறார்கள் மத்தியில் பண்பாட்டையும், நல்லொழுக்கங்களையும் வளர்க்க பண்பாட்டு வகுப்புகளை சேவாபாரதி தமிழ்நாடு நடத்திவருகிறது. குழந்தைகளை நற்குணமிக்கவர்களாக உருவாக்குவதே இதன்நோக்கம். இந்த வகுப்புகள் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில்தாக்கத்த ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன

பண்பாட்டு வகுப்பு
பண்பாட்டு வகுப்பு

நடமாடும் நூலகம்[தொகு]

    நடமாடும் நூலகங்கள் மூலம் ஆன்மிகம், பண்பாடு, வரலாறு, தேசியம் தொடர்பான சிறிய, சிறிய புத்தகங்கள் சுற்றுக்குவிடப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக பொது அறிவு நன்கு வளர்ச்சி அடைகிறது.

நடமாடும் நூலகம்
நடமாடும் நூலகம்

சுயசார்பு பணிகள்[தொகு]

தையல் பயிற்சி மையங்கள்[தொகு]

    மகளிர் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக இலவச தையல் பயிற்சி மையங்கள் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் மூன்று முதல் ஆறு தையல் இயந்திரங்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்ற பலர் சுயமாக சம்பாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

தையல் பயிற்சி வகுப்பு
தையல் பயிற்சி வகுப்பு

கணிப்பொறி பயிற்சி மையங்கள்[தொகு]

    கிராமப்புற இளைஞர்களிடையே அடிப்படை கணிப்பொறி அறிவு அவசியம். ஆனால், அதைக் கற்பதற்கான வசதிகள் அவர்களிடையே இல்லை. சேவாபாரதி தமிழ்நாடு இந்த இடைவெளியை நிரப்பி, கிராமபுற பகுதிகளில் கணிப்பொறி பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சி அளிப்பதன் வாயிலாக இந்த நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அவர்களை தயார் செய்கிறது. ஒவ்வொரு மையத்திலும் மூன்று முதல் ஆறு கணிப்பொறிகள் இருக்கின்றன. தினசரி வெவ்வேறு நேரங்களில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுழற்சி முறையில் இந்த மையங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

இலவச கணிணி பயிற்சி மையம்

சுய உதவிக்குழுக்கள்[தொகு]

    சமூகத்திலும் குடும்பத்திலும் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், அவர்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் அவசியம். அதற்காக சேவாபாரதி தமிழ்நாடு சுய உதவிக்குழுக்களை நடத்தி வருகிறது. இந்தக் குழுக்களுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களின் திறமைகளை மேம்படுத்தி அவர்களின் வறுமையைப் போக்க உதவிபுரிவதே இந்தக் குழுக்களின் நோக்கமாகும்.

சுய உதவி குழு

தொழில் பயிற்சிகள்[தொகு]

    சேவாபாரதி தமிழ்நாடு கிராமப்புற பெண்களுக்காக தொழில்பயிற்சிகளை நடத்துகிறது. மணமகள் அலங்கார பொருட்கள், சோப்பு, சலவைத்தூள், பேன்சி மாலை தயாரித்தல் போன்ற சந்தையில் எளிதில் விற்கக்கூடிய பொருள்களைத் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் மேலும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

தொழிற்பயிற்சி
தொழிற்பயிற்சி

சமுதாயநலன்[தொகு]

அன்பு இல்லம்[தொகு]

    சமுதாயத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்டுவது சேவாபாரதி தமிழ்நாடு் அன்பு இல்லங்கள் சென்னை, ஆம்பூர், ஒசூர் ஆகிய இடங்களில் இந்த அன்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம், உடைபோன்ற அத்தியாவசிய வசதிகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் பள்ளிப்படிப்புடன் நின்று விடாமல், அவர்கள் உயர்கல்வி பெறுவதற்கும் உதவிகள் செய்யப்படுகிறது. மேலும், கல்விகற்று முடித்ததும் அவர்கள் திருமணம் செய்வதற்கும் ஆதரவுகரம் நீட்டுகிறது.

அன்பு இல்லம்

சிறார் சிறுசேமிப்புக் குழுக்கள்[தொகு]

    தொடர்ந்துசேமித்தல், கவனமாக செலவழித்தல் என்ற நன்னெறியில் சேவாபாரதி தமிழ்நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. குழந்தைகளிடையே இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை விதைக்கும் நோக்கில் சிறார் சிறு சேமிப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கணக்கு புத்தகம் அளிக்கப்பட்டு, வாரம் தோறும் சிறிய தொகையை செலுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது. அந்தப்பணம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு திருப்பியளிக்கப்பட்டு, அவர்களது கல்விச் செலவுகளாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

சேவைப் பணிகள் / விழிப்புணர்வு பிரச்சாரங்கள்[தொகு]

    ரத்ததானம், கண்தானம், மரம்நடுதல், பிளாஸ்டிக்இல்லாதகிராமம், கிராமக் குளங்களைத் தூர்வாருதல், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், தூய்மை பாரதம் ஆகியவற்றை பற்றி மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்களே முன்வந்து சுற்றுப்புறங்களைப் பாதுகாக்க உடல் ரீதியான சேவையாற்றுவதை சேவாபாரதி தமிழ்நாடு ஊக்குவிக்கிறது. ரயில்நிலையங்கள், பேருந்துநிலையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சமுதாயத்தில் ஒரு பெரியமாற்றத்தை சேவாபாரதி தமிழ்நாடு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  2ஆம் தேதி சேவா தினமாக கொண்டாடப்பட்டு சமுதாய மக்களை இணைத்து சிறப்பாக அன்று சேவை பணிகள் நடைபெறுகின்றன.

விழிப்புணர்வு பிரசாரம்
விழிப்புணர்வு பிரசாரம்

திருவிளக்கு பூஜைகள்[தொகு]

    கோவில்களில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் திருவிளக்கு பூஜைகளை சேவாபாரதிதமிழ்நாடு சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்கும் விழாவாக நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் ஜாதி ஏற்றதாழ்வுகள் நீங்கி அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது. இந்த திருவிளக்கு பூஜைகள் மூலமாக பல கிராமங்களில் பிளவுபட்டு இருந்த சமுதாயத்தை ஒன்றுபடுத்திய சம்பவங்கள் பல உள்ளன.

திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை

பிராத்தனைக் குழு[தொகு]

    சமுதாயத்திலுள்ள குடும்பங்களுக்கு கஷ்டம் ஏற்படும்போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க பிராத்தனைக் குழு செயல்பட்டு வருகிறது. மங்கள பிராத்தனை, தன்வந்திரி பிராத்தனை, ஆத்மசாந்தி பிராத்தனை போன்ற பிராத்தனைகளை தொண்டர்கள் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம்பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலும், மனசாந்தியும் கிடைக்கப்பெறுகிறது.

மருத்துவப்பணிகள்[தொகு]

இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி[தொகு]

    சென்னையில் 24 குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு இலவச நடமாடும் மருத்துவ ஊர்திகளை சேவாபாரதி தமிழ்நாடு இயக்கி வருகிறது. ஒவ்வொரு ஊர்தியிலும் ஒரு அலோபதி மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர், மருத்துவ ஒருங்கிணைப்பாளர், ஓட்டுநர் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த ஊர்தி மூலம் தினமும் சராசரியாக 120 நோயாளிகள் பயனடைகிறார்கள். இது தவிர, அவ்வப்போது பல பகுதிகளில் பல்வேறு சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றுவருகின்றன.

நடமாடும் இலவச மருத்துவ மையம்
நடமாடும் இலவச மருத்துவ மையம்

யோகா தெரபி மையம்[தொகு]

    மனித இனத்துக்கு பாரதம் அளித்த பிரத்யேக நன்கொடை யோகா. தகுதியான யோகா ஆசிரியர்களைக் கொண்டு ஏராளமான யோகா முகாம்களை சேவாபாரதி நடத்தி வருகிறது. ஆசனங்கள், பிராணாயாமம் (மூச்சுபயிற்சி), தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாகக் கற்றுத்தரப்படுகின்றன. செப்டம்பர் 2017 முதல் சேவாபாரதி தமிழ்நாடு அலுவலகத்தில் யோகா தெரபி மையம் தொடங்கப்பட்டு கருவிகளின் உதவியோடு சர்க்கரை வியாதி, ரத்தத்கொதிப்பு, முதுகுவலி, தோள்வலி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

யோகா தெரபி மையம்

நியூரோதெரபி[தொகு]

    நியூரோதெரபி - மும்பையைச் சேர்ந்த டாக்டர் லஜ்பத்ராய் ராய் மெஹ்ரா என்பவரால் இந்த மாற்று மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நியூரோதெரபியில் நோய்களுக்கு எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டியதில்லை. உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதன் மூலமே நோய்களை குணப்படுத்த முடியும். தமிழகம் முழுவதும் 35 இடங்களில் நியூரோ தெரபி மையங்களை சேவாபாரதி தமிழ்நாடு நடத்திவருகிறது.

நியூரோதெரபி மையம்
நியூரோதெரபி மையம்

இரத்த வங்கி[தொகு]

    சேலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிவராம்ஜி ரத்த வங்கி லாப நோக்கமின்றி செயல்படும் ஒரு அமைப்பாகும். சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய ரத்த வங்கிகளில் இதுவும் ஒன்று.

சிவராம்ஜி இரத்தவங்கி

பேரிடர் நிவாரணம்[தொகு]

சுனாமி 2004 மீட்பு, நிவாரணம்,மறுவாழ்வு[தொகு]

    2004 டிசம்பர் சுனாமி தாக்குதலில் தமிழகத்தில் கடற்கரை பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட போது, 3,300க்கும் மேற்பட்ட சேவாபாரதி தன்னார்வலர்கள் உடனடியாக மீட்புபணியில் இறங்கினர். பல குடும்பங்களை மீட்டு, நிவாரண உதவிகள் மூலம் மறுவாழ்வு திட்டங்களையும் மேற்கொண்டனர். நமது தன்னார்வலர்களால் 115 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 15 தற்காலிக நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 46,000 க்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். 26,860 குடும்பங்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டன. 3,600 சடலங்களுக்கு அவரவர் சமுதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு 850 க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

சுனாமி நிவாரண பணிகள்

சென்னை வெள்ளம் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு[தொகு]

    2015 நவம்பர் மாதம் சென்னையில் பெருவெள்ளம் தாக்கியபோது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தன்னார்வலர்களுடன் இணைந்து சேவாபாரதி தமிழ்நாடு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. 5,500 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி 1,350 நபர்களை காப்பாற்றினர். 21.60 லட்சம் உணவுப்பொருள்கள், 12.50 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 1,75,250 நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்டன. 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர்கள், செயற்கைகால் உறுப்புகள் வாங்கி தரப்பட்டது.

சேவாபாரதி தமிழ்நாடு ஆற்றிவரும் இந்த சேவைப் பணியில் தாங்களும் ஈடுபட அன்புடன் வரவேற்கிறோம். உடல் உழைப்பு மூலமாகவோ, பொருள் உதவி செய்வதன் மூலமாகவோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் இந்த தொண்டு பணியில் இணைந்து தாங்கள் செயலாற்ற விரும்புகிறோம். சேவாபாரதி தமிழ்நாடுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G - யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. காசோலை அல்லது இணைய தள வழியின் மூலமும் நன்கொடைகளை அளிக்கலாம். இணைய தள வழியில் பணம் அனுப்பிய பிறகு சேவாபாரதி தமிழ்நாடு அலுவலகத்துக்கு தங்களது பெயர், முழு முகவரி, அலைபேசி எண், பான் (PAN) எண் ஆகியவற்றை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வெள்ள நிவாரணபணி

BANK DETAILS[தொகு]

Account Name                        :           Sevabharathi Tamilnadu

Account Number          :           078411100002661

Bank                             :           Andhra Bank

Branch                          :           Chetpet

Account Type               :           Current Account

IFSC Code                    :           ANDB0000784          

SEVABHARATHI TAMILNADU

‘Seva’, New No. 60 (Old No.79), DR. ALAGAPPA ROAD

PURASAWALKAM, CHENNAI 600 084

Phone: 044 – 2642 4076  Mobile: 944 577 8373

sevabharathitn@rediffmail.com / sbtn9999@gmail.com

www.sevabharathitn.org