உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:சுகன்யா கலபொதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைக்காட்சி பார்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் தீமைகள்

  தொலைக்காட்சி இன்று ஒவ்வொரு வீட்டிலும் அத்தியவசியமான பொருள் ஆகிவிட்டது. சிறு குழந்தை முதல் பெரியவர் வரை தொலைக்காட்சி பார்த்து இன்பம் அடைகின்றன. நாடகம், பாடல், நிகழ்ச்சிகள் போன்றவைகளைக் கண்டு களிக்கின்றனர் இன்றைய மானிடர்கள். இதனால் ஏற்படும் விளைவுகளை நாம் ஆராய்வதே இல்லை .

  தொலைக்காட்சி பார்ப்பதனால் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை நாம் அறிந்துக் கொள்ளலாம்.  தொலைக்காட்சியின் செய்தி மூலம் நாம் நம்முடைய பொது அறிவையும் விவரங்களையும் அதிகரிக்கலாம். மேலும், இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்று படங்கள் போன்றவைகள் நம்முடைய அறியாமையை நீக்க உதவுகிறது. இதற்கு சான்று, மக்கள் தொலைக்காட்சி அலவரிசையில் வரும் நிகழ்ச்சிகள் ஆகும்.

  தொலைக்காட்சி பார்ப்பது பொழுதுபோக்காகவும் அமைகிறது. இதனால் மனம் ஓய்வு பெற உதவுகிறது. படங்களின் நகச்சுவைகள், நகச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவைகள் அவர்களைச் சிரிக்கத் தூண்டுகிறது. இதைத்தவிர்த்து, துன்பத்தை மறக்கவும், மனயழுதத்தைக் குறைக்கயும் உதவுகிறது.

  தொலைக்காட்சி பார்ப்பதனால் தீமைகளும் ஏற்படுகிறது. மாணவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சியிலேயே வாரி இறைகின்றனர். தங்களின் பொன்னான நேரத்தைத் தொலைக்காட்சியிலே செலவு செய்வதனால் வீட்டுப்பாடங்களைச் செய்வதில்லை, காலையில் எழ முடியாமல் பள்ளிக்குத் தாமதமாகயும் இன்னும் சிலர் மட்டம் போடுகின்றனர். இவையனைத்தும் அவர்களின் கல்வி கேள்விகளைப் பாதிப்படைகின்றன என்பது மிகையாகாது.

  தொடர்ந்து, தொலைக்காட்சியின் நாடகங்களில் வன்முறை கலச்சாரமும் சமூக சீர்கேடுகளும் நிறைந்த காட்சிகள் உள்ளன. சிறு குழடந்தைகள் இவற்றை பார்த்து அதை பின்படுகின்றனர். உதாரணத்திற்கு மது அருந்துதல், புகைப்பிடித்தல், தவறான உறவு போன்ற காட்சிகள் சமுதாயத்தில் பெரினய தீய விளைவுகள் ஏற்பட செய்கின்றன.

  ஆகவே, தொலைக்காட்சி பார்ப்பதனால் நன்மைகளும் தீமைகளும் சமமாக உள்ளன. அள்வோடு பார்த்து இன்பம் பெறுவோம். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுகன்யா_கலபொதி&oldid=2484511" இலிருந்து மீள்விக்கப்பட்டது