உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எழுதுகோல் சுரேஷ்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ண் தேவராயர் ஆட்சியில் அப்பாஜி என்ற அறிவுமிகுந்த அமைச்சர் இருந்தார், அவரின் அறிவுத்திறமையில் வியந்துபோன சுல்தான் அரசர் அப்பாஜியின் அறிவுத்திறமையினை சோதிக்க விரும்பி, அவரது நாட்டில் இருந்து தூதுவர்கள் மூலம் மூன்று பொம்மைகளை அனுப்பி அவற்றில் எந்த பொன்மை மிகச்சிறந்த பொம்மை என கண்டுபிடிக்க வேண்டும் என அனுப்பி வைத்தார் சுல்தானிய அரசரின் புதிர் பொம்மைக்கு யார் சாரியான விடையளித்தாலும் அவர்களுக்கு பொற்காசுகள் வழங்கப்படும் என மன்னர் கிருஷ்ணதேவராயார் அறிவித்தார். நாடு முழுவதிலிருந்தும் மக்கள் பலர் வ்ந்து பொம்மையினைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்துச் சென்றனர். கிருஷ்ணதேவராயர் அமைச்சரவையில் இருந்த அப்பாஜி அந்த பொம்மைகளை நன்கு உற்று கவனித்த பின் ஒரு சேவகரிடம் மூன்று வளையக்கூடிய இலேசான குச்சிகளை எடுத்துவரும்படி கூறினார், குச்சி வந்தவுடன், ஒவ்வொரு குச்சியினையும் பொம்மைகளின் காதுகளின் உள் நுழைத்தார். முதல் பொம்மையின் காதில் நுழைத்த குச்சி அதன் மறு காது வழியாக வந்த்து, இரண்டாவது பொம்மையின் காது வழியாக நுழைத்த குச்சி அதன் வாய் வழியாக வந்த்து, மூன்றாவது பொம்மையின் காது வழியாக நுழைத்த குச்சி வெளியே வராமல் அப்படியே உள்ளே சென்றது. இதிலிருந்து அப்பாஜி விளக்கம் அளித்தார். முதல் பொம்மை ஒரு செய்தியை (ரகசியத்தை) கேட்ட்தும் அதன் மறு காது வழியாக விட்டுவிடுவதும் கூடாது, இரண்டாவது பொம்மை தான் கேட்ட செய்தியினை(ரகசியத்தை) அப்படியே மற்றவரிடம் சொல்வதும் தவறாகும், மூன்றாவது பொம்மை தன அறிந்த ரகசியத்தை தனக்குள் வைத்துக் கொள்வதுதான் மிகச்சிறந்த மனிதன் எனவே மூன்றாவது பொம்மையே மிகச்சிறந்த பொம்மை எனக்கூறி அனைவரின் பாராட்டினையும் மன்னரின் பரிசுகளையும் பெற்றார்...