பபூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பபூல்
Product typeபற் பொருட்கள்
Ownerடாபர்
Introduced1987; 37 ஆண்டுகளுக்கு முன்னர் (1987)
Related brandsபிராமிசு & மெசுவாக்
Previous ownersபல்சார சுகாதார பொருட்கள் நிறுவனம்
Websitehttps://www.daburdentalcare.com/

பபூல் (Babool) என்பது 1987-ல் [1] பால்சாரா கைச்ஜீன் எனும் நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பற்பசை தயாரிப்பு ஆகும். இது கருவேலம் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கருவேலம் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியானது பாரம்பரியமாக இந்தியாவில் பற்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.[2] இந்த வணிக தயாரிப்பானது "பபூல் பபூல் பைசா வசூல்" என்ற கோஷத்துடன் மலிவான பற்பசையாக நிலைநிறுத்தப்பட்டது.[3] பபூல் பல்சராவின் மிகப்பெரிய வணிகத் தயாரிப்பாக இருந்தபோது, 2002ஆம் ஆண்டில் "பபூலைப் பயன்படுத்திச் சிறந்த நாளை தொடங்குங்கள்" என்ற சொற்றொடருடன் மீண்டும் தொடங்கப்பட்டது.[2] 2005 ஆம் ஆண்டில், பபூல் பல்சராவால் டாபருக்கு பல்சராவின் பிற பற்பசை வணிகத் தயாரிப்புகளான பிராமிசு மற்றும் மெசுவாக் உடன் 1.43 பில்லியன் (US$18 மில்லியன்) )க்கு விற்கப்பட்டது.[4][5] 2007ஆம் ஆண்டு நிலவரப்படி, பபூல் வணிகத்தின் மதிப்பு 1 பில்லியன் (US$13 மில்லியன்) ஆகும்.[6]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • பற்பசை பிராண்டுகளின் பட்டியல்
  • வாய்வழி சுகாதாரம் மற்றும் பல் கட்டுரைகளின் அட்டவணை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபூல்&oldid=3624252" இலிருந்து மீள்விக்கப்பட்டது